"திருக்கேதீச்சரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,845 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இச்சபையின் தீர்மானப்படி காசிவாசி சிவஸ்ரீ ஈசான சிவாச்சாரியார், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம், கட்டடக்கலைஞர் வி.நரசிம்மன் ஆகியோரின் ஆகம விதிகளுக்கமைவான அறிவுறுத்தல்களுடன் தமிழ்நாடு திருவாளர்கள் செல்லக்கண்ணு ஸ்தபதியார், மு.வைத்தியநாத ஸ்தபதியார் ஆகியவர்களால் முறைப்படி சுவாமி, அம்பாள் கருவறைகள் கருங்கல்லாலும், சுதை, காரைகளாலும் விமான வேலைகளும் கோபுரங்களும் உலக சைவப்பெருமக்களின் பேருதவி கொண்டு அமைக்கப்பட்டது. இத்திருத்தலம் உருவாக அருள்வாக்கு நல்கிய நல்லூர் திருப்பெருந்திரு ஆறுமுகநாவர் ஐயா அவர்கள் "திருக்கேதீச்சரம் எனுந் தேன்பொந்து ஒன்று உளது. அங்கு மருந்தொன்று மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள்" என அருள்ஞானசம்பந்தர் சுட்டிக்காட்டியது போல அறிவுறுததருளினார்.
 
ஐயா அவர்களின் அறிவுறுத்தல் மேற்கொண்டு விடத்தல்தீவு வேலுப்பிள்ளை அவர்களும், முதல் குரல் கொடுத்த சைவபரிபாலன சபையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
முன்பு ஆலயமிருக்கும் திருவிடத்தை சைவசமயத்தவர்கள் கையகப்படுத்த விரும்பாதநிலை மாறி மாவட்ட அதிபரின் முன்மொழிவுக்கமைய ஏலத்தில் விடப்பட்டு காடுமண்டிய நிலத்துடன் 43 ஏக்கர் 3 றூட் 33 பேச் காணி நாட்டுக்கோட்டை நகரத்துச் செம்மல் சைவச் சான்றாளர் ராம அரு.அரு.பழனியப்பச் செட்டுயாரான பெருமகனாரால் யாழ் செயலகத்தில் 3, 100/= ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டாமை சைவர்களின் பெருமைக்குரியதொன்றாயிற்று.
 
1984ஆம் ஆண்டு வண்ணைச் சைவப்பெரியார் சித.மு.பசுபதிச் செட்டியார், திருவாளர்கள் இ.இராமுப்பிள்ளை வைத்தியர் வை.ஆறுமுகம் பிள்ளை, தா.இராகவப்பிள்ளை ஆகியோரின் அயராத முயற்சியினால் 13 ஜூன் 1894 அன்று பழைய ஆலயம் இருந்த திருவிடமும், தீர்த்தக் கிணறும் முன் நிறுவப்பட்டிருந்த லிங்கம் ஒன்றும் திருநந்தி சோமாஸ்கந்தர், கணேசர் ஆகிய மூர்த்திகளின் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. இவற்றை நிறுவிப் பூசை அர்சனை அபிடேகங்கள் இயற்ற வேண்டி இன்றுள்ள கோயிலிருக்குமிடத்தில் சிறு கோயிலமைத்து கண்டெடுக்கப்பட்ட மூர்த்திகளை உரிய இடங்களில் நிறுவி 28 ஜூன் 1903 ஆம் ஆண்டில் நல்வேளையில் முதலாவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுச் சிறப்பாகச் செய்யப்பட்டது.
 
 
மூலக் கருவறையில் எழுந்தருள வைக்கப் பெற்ற சிவலிங்கம் காசியிலிருந்து வருவிக்கப்பட்டதென திரு இராமேச்சர வரலாற்றுத் தரவினாலறிய முடிகின்றது
 
இதனைத் தொடர்ந்து பல திருப்பணிகளாற்றப்பட்டு 1920ஆம் ஆண்டிலும் மற்றோர் திருக்குடமுழுக்கு விழாச் செய்யப்பட்டது.
 
புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் காடடர்ந்து அழிந்த நிலைகண்டு நாட்டின் சைவப் பெருமக்களின் உள்ளத்தை விழிப்படைவும் பழைய உயர் நிலைக்குத் திருக்கோயில் வளரவும் வேண்டுமென்ற நினைப்பினாலும் உந்துதலினாலும் 1948 ஆம் ஆண்டு இத்திருவிடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினரால் சைவப் பெரு மாநாடொன்று கூட்டப்பட்டது. இம் மாநாட்டைக் கூட்ட முன்னின்று உழைத்த பெருமக்கள் வரிசையில் வேலைணையூர் வி.கே. செல்லப்பாச் சுவாமியார், திருவாசக முதல்வர் சி.சரவணமுத்து அடிகள், சட்டத்தரணி சு.சிவசுப்பிரமணியம் ஆகியோராவர்
 
கூடிய சைவப்பெருமாநாடு ஆலயத்தை மறுசீரமைத்து வளம்பல பெற வைக்க வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கத் தவறவில்லை. இம்மகாநாட்டைத் தொடர்ந்து [[பம்பலப்பிட்டி]] நகரத்தார் கதிரேசன் ஆலயத்தில் உருவாக்கப்பட்ட சபையே இன்றுலகளாவிய பெருமையுடன் திகழ்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.
 
கருங்கல்லால் கட்டப்பட்ட கௌரியம்பாள் கோயில் எமது [[மலேசியா]] திருப்பணிச்சபைக் கிளையினரால் அமைக்கப்பட்டதாகும். இத்திருக்கோயிலில் நிறுவப்பெற்றுள்ள கருங்கல் திருப்படிகங்களில் பெரும்பாலான படிமங்கள் [[மாமல்லபுரம்]] அரசினர் சிற்பக்கலைக் கல்லூரியில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இத்திருக்கோயிலில் 1952லும் 1960லும் ஆண்டிலும் திருவுருவப்படங்கள் நிறுவப்பட்டு இருமுறை குடமுழுக்காட்டப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முடிந்தவரை பல்வகைத் தொல்லைகட்காளாகிய நிலமையையும் பொருட்டாக நினைக்காது முயன்று தம்மையே ஈசற்கீந்து அரும்பாடுபட்டு இத்திருக்கோயிலை எடுத்த பெருமை சிவமணி சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களையும் மண்மேடாகவும் சேறாகவுமிருந்த பாலாவித் தீர்த்தக் குளத்தை வெட்டி அணையிட்டு செம்மையுறச் செய்திட்ட நீர்ப்பான பொறியியலாளர் அருளாளர் எஸ்.ஆறுமுகப் பெருந்தகையையும் சைவ உலகு என்றும் மறவாது
 
திருக்கேதீசரத்திற்குச் செல்லும் அடியவர்களின் வசதிகள் உளத்தில் கொண்ட அருளுள்ளத்தினர் பெருந்தனவந்தர்கள், அரச நிறுவனங்கள் ஆலயச் சூழலில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், நகரத்தார் மடம், நாவலர் மடம், அம்மா சத்திரம், திருப்பதி மடம், திருவாசக மடம், மகாசிவராத்திரி மடம், பொன்னாவெளி உடையார் மடம், நாதன் சத்திரம்,
 
 
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/30567" இருந்து மீள்விக்கப்பட்டது