"யாஸீன் மௌலானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 மாதங்களுக்கு முன்
யாஸீன் மெளலானா அவர்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த காழி சதகதுல்லாஹில் காஹிரி அவர்களின் இரண்டாவது மகளை திருமணம் முடித்தார்கள். தனது தந்தையின் உத்தரவின் பேரில் இலங்கையின் வெலிகம,வெலிபிட்டியைச் சேரந்த தாஸிம் மெளலானா அவர்களின் முதலாவது மகளையும் இலங்கையிலும் திருமணம் முடித்தார்கள். தனது தந்தை அஷ்செய்கு முஹம்மத் மெளலானா ஹாஷிமி (ரஹ்) அவர்களிடம் இருந்து காதிரிய்யா,ஷாதுலிய்யா,ஜிஸ்திய்யா,நக்ஷபந்தியா ஆகிய நான்கு தரீக்காகளுக்கும் கிலாபத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.யாஸீன் மெளலானா அவர்கள் இலங்கையிலும்,தமிழ்நாட்டிலும் பல இடங்களுக்குச் சென்று மக்களை இறைவன்பால் அழைத்தார்கள்.இவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் பல தரீக்காக்களைச் சேரந்த மக்கள் தமக்கிடையே பிளவுபட்டிருந்தனர். இந்நிலையில் 'எல்லாம் ஒன்று எல்லோரும் ஒன்று' கருத்தின் அடிப்படையில் மக்களிடையே ஒற்றுமையை போதித்தார்கள்.காதிரிய்யா சூபி வழியமைப்பின் கிளையான 'ஹக்கிய்யதுல் காதிரிய்யா' என்ற சூபி வழியமைப்பை இவர்கள் தோற்றுவித்தார்கள்.
 
அலுத்காமம் ஜம்மியதுல் உலமாவின் தலைவராகவும்,அகில இலங்கை உலமா போர்ட் தலைவராகவும்,முன்னால் சிலோன் அரசாங்க இலாகாவின் தலைவராகவும்,அகில வெலிகம முஸ்லிம் தலைவராகவும் யாஸீன் மெளலனா அவர்கள் செயற்பட்டார்கள். இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய முக்கிய ஒருவராகக் கருதப்படுகின்ற அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களுடன்,யாஸீன் மெளலானா அவர்கள் இணைந்து செயற்பட்டார்கள். அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்கள் 'இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி(Ceylon Muslim Scholarship Fund)' எனும் நிதியத்தை ஆரம்பித்தார். இந்நியத்திற்கு உதவ வேண்டும் என பணம் படைத்தவர்களை ஊக்குவித்தோடு, இந்நிதியத்தை திறம்பட நடாத்திச் செல்வதற்கு அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களுக்கு, யாஸீன் மெளலான அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இலங்கை அரசாங்க மத்ரஸா புணர்நிர்மாண சங்கத்தின் (Madrasa Reorganization Committee)தலைவராகவும், ஆலோசகராகவும் கடமையாற்றிய யாஸீன் மெளலானா அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபுப் பிரிவின் அப்போதைய தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.ஏ. இமாம் அவர்களுடன் இணைந்து அறபு அறிவின் விருத்திற்கும், அறபுக் கல்லுாரிகளுக்கான பாடத்திட்டத்தை அமைப்பதற்கும் பெரும் பங்காற்றினார்கள்.<ref>{{cite news |last1=ஹிஜாஸ் |first1=ஹிஸாம் |title=ஈழம் ஈன்றெடுத்த இணையில்லா ஆளுமை ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா |accessdate=5 November 2020 |agency=Thinakaran |publisher=The Associated Newspapers of Ceylon Ltd |date=July 12 Sunday ,2020}}</ref>
 
==மேற்கோள்கள்==
815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3057290" இருந்து மீள்விக்கப்பட்டது