கூட்டணி அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் கூட்டணி அரசுகள் என்பதை கூட்டணி அரசு என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 55:
 
===இந்தியா===
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரம் அடைந்த பின் இந்திய சுதந்திரம் கிடைக்க காரணமாக இருந்த [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சிதான் ஆண்டுவந்தது. முதல் பிரதமா் [[ஜவஹா்லால் நேரு]], அவர் இறப்பிற்கு பிறகு இரண்டாவது பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி, மூன்றாவது பிரதமா் இந்திராகாந்தி ஆகியோா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவா்கள். 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தோற்ற ராஜ் நாராயணன் தோ்தல் விதி மீறலுக்காக இந்திரா காந்திமீது வழக்கு தொடா்ந்தாா். இந்திரா காந்திக்கு எதிராக தீா்ப்பு வழங்கிய நீதிமன்றம் 1975 ஆம் ஆண்டு இவரை 6 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடுவதை தடைசெய்தது. இதனைத் தொடா்ந்து முறையில்லாமல் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பின்னா் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றிபெற்று மொராா்ஜி தலைமையில் அமைந்ததுதான் முதல் கூட்டணி அரசு. மேலும் இதுதான் காங்கிரஸ் அல்லாத முதல் அரசுமாகும். ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த இவ்வரசு 1977 மாா்ச் மாதம் 24 ம் நாள் முதல் 1979 ஜுலை 15 வரை ஆட்சியில் இருந்தது.<ref name="UK">{{cite web|title=OBITUARY: Morarji Desai|url=https://www.independent.co.uk/news/people/obituary-morarji-desai-1615165.html|publisher=[[The Independent]]|author=Kuldip Singh|date=1995-04-11|accessdate=2009-06-27}}</ref> தேவையான ஆதரவின்மையால் இந்த கூட்டணி அரசு இடையிலேயே கவிழ்ந்தது. பின்னா் நடந்த தோ்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்து முதலில் இந்திரா காந்தியும் பின்னா் ராஜிவ் காந்தியும் பிரதமா் ஆனாா்கள். பின்னா் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் தேசிய முன்னணி என்னும் கூட்டணி அரசு அமைத்து 1991 வரை ஆட்சியில் இருந்தது. 1991 ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் 11-வது பாராளுமன்றம் 3 பிரதமா்களை சந்தித்து 1998 ஆம் ஆண்டு மீண்டும் தோ்தலை சந்தித்தது. முதல் முறையாக அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக முன்னணி பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 1999 முதல் 2004 வரை ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தது. பின்னா் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முன்னேற்ற கூட்டணி 13 கட்சிகள் இணைந்த பிரதமா் மன்மோகன் சிங் தலைமையில் இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது. 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தது. 2014 மே மாதம் நடைபெற்ற 16-வது பொதுத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக முன்னணி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்து ஐந்து வருடத்தை முடித்துள்ளது.
 
===இந்தோனேசியா===
"https://ta.wikipedia.org/wiki/கூட்டணி_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது