இறந்தோர் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{hiero|era=nk|align=right|காலம் செல்லலுக்கு உரிய நூல்|<hiero>D21:Z1:M33 W24:Z1 O1:D21 X1:D54 G17 O4:D21 G43 N5:Z1</hiero>}}
 
'''இறந்தோர் நூல்''' (''Book of the Dead'') என்பது, இறப்புச் சடங்குகள் தொடர்பான [[பண்டை எகிப்து|பண்டைய எகிப்திய]] நூலுக்குத் தற்காலத்தில் வழங்கப்பட்டுள்ள பெயர். இது பண்டைய எகிப்தின் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சியக்]] காலத்தின் தொடக்கமான [[கிமு]] 1550 காலப் பகுதியில் இருந்து ஏறத்தாழ [[கிமு]] 50 வரை புழக்கத்தில் இருந்தது.<ref>Taylor 2010, p.54</ref> The original Egyptian name for the text, transliterated ''rw nw prt m hrw''<ref>Allen, 2000. p.316</ref> பண்டை எகிப்தியர் இந்நூலுக்கு வழங்கிய பெயரின் ஒலிபெயர்ப்பு "rw nw prt m hrw" என்பதாகும். இங்கே "prt m hrw"<ref>Allen, 2000. p.316</ref> என்பது "நாள் கடந்து செல்லல்" என்னும் பொருள் தரக்கூடியது. "rw nw" என்பதை "உரிய மந்திரங்கள்" அல்லது "உரிய நூல்" என்று மொழிபெயர்த்துள்ளனர். எனவே இது "காலம் செல்லலுக்கு உரிய மந்திரங்கள்" அல்லது "காலம் செல்லலுக்கு உரிய நூல்"<ref>Taylor 2010, p.55; or perhaps "Utterances of Going Forth by Day" - D'Auria 1988, p.187</ref> எனப் பொருள் படும். இந்த நூலில், பண்டை எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி, இறந்துபோகும் ஒருவர் ''டுவட்'' எனப்படும் கீழுலகத்தினூடாக அடுத்த பிறவிக்குள் பயணம் செய்வதற்கு உதவியாக அமையும் மந்திரங்கள் உள்ளன. இந்த நூல், இதற்கு முந்தியவையும், [[பாபிரஸ்]] எனும் தடித்த காகிதம் அல்லாமல் பல்வேறு பொருட்களில் வரையப்பட்டுள்ள [[பிரமிடு உரை]]கள், [[சவப்பெட்டி உரை]]கள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இறந்தோர் நூலில் காணப்படும் மந்திரங்களில் சில கிமு 3 ஆவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த மேற்படி ஆக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது. ஏனையவை [[எகிப்தின் மூன்றாம் இடைக்காலம்இடைநிலைக் காலம்]] எனப்படும் [[கிமு]] 11 - 7 ஆம் நூற்றாண்டுகள் வரையிலான காலத்தில் சேர்க்கப்பட்டவை. இந்த நூலை இறந்தவர்களின் உடல்களுடன் [[சவப்பெட்டி]]களுள் அல்லது புதைக்கும் அறைகளுள் வைப்பது அக்கால எகிப்தில் வழக்கமாக இருந்தது.
 
[[File:BD Hunefer.jpg|thumb|500px|இறந்தோர் நூலில் காணப்படும் தீர்ப்பு வழங்கும் காட்சிகள். முதல் காட்சி இறந்த மனிதனை தீர்ப்பு மண்டபத்துக்கு அழைத்துச் செல்வதையும், அடுத்த காட்சி அம்மனிதனது இதயம் இறகுடன் ஒப்பிட்டு நிறுக்கப்படுவதையும், கடைசிக் காட்சி, சோதனையில் வெற்றியடைந்த மனிதனை [[ஓசிரிசு]]க் கடவுளுக்கு முன் நிறுத்துவதையும் காட்டுகின்றன. (பிரித்தானிய அருங்காட்சியகம்)]]
"https://ta.wikipedia.org/wiki/இறந்தோர்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது