ஒக்டோபர் எழுச்சி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 92.238.74.254ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
{{refimprove}}
'''சுண்ணாக எழுச்சி''' அல்லது '''ஒக்டோபர் எழுச்சி''' என்பது [[தீண்டாமை|தீண்டாமைக்கும்]], சாதியத்துக்கும் எதிராக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்ட ஊர்வலமும், அதைத் தொடர்ந்த எழுச்சியையும் குறிக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை இடதுசாரிகள், குறிப்பாக இலங்கைப் பொதுவுடமைக் கட்சி (சீன சார்பு) முன்னெடுத்தனர். சட்ட அனுமதி [[காவல்துறை|காவல்துறையினரிடம்]] கேட்கப்பட்ட போதும், அது தரப்படவில்லை. எனினும் ஊர்வலம் ஒக்டோபர் 21, 1966 ம் திகதி, [[சுண்ணாகம்|சுண்ணாகத்தில்]] இருந்து புறப்பட்டு, யாழ் முற்றவெளி நோக்கி தொடங்கியது. அந்த ஊர்வலத்தை தடுத்த காவல்துறையினர், ஊர்வலத்தில் கலந்து கொண்டோரைக் கடுமையாகத் தாக்கினர், பலரைக் கைது செய்யதனர். இதைத் தொடர்ந்து, கலந்து கொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் நிலை உருவானது. இதைத் தவிர்க்க முழக்கங்கள் இன்றி ஊர்வலத்தைத் தொடர காவல்துறை அனுமதித்தது. ஊர்வலம் தொடர மேலும் பல மக்கள் சேர்ந்து கொண்டனர், மீண்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கொட்டும் மழையிலும் கூட்டம் முற்றவெளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வும், இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களுமே ஒக்டோபர் எழுச்சி என்று ஈழத்தில் அறியப்படுகிறது.<ref>சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஒக்டோபர்_எழுச்சி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது