சு. ப. உதயகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
No edit summary
வரிசை 1:
'''சு. ப. உதயகுமார்''' (ஆங்கிலம்:S. P. Udayakumar) இவர் [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[நாகர்கோவில்|நாகர்கோவிலை]] பிறப்பிடமாக கொண்டவர். இவர் எழுத்தாளரும், அணு உலைக்கெதிரான செயற்பாட்டாளரும் ஆவார்.<ref name="Gandhi Marg, Volume 19">{{cite book|title=Gandhi Marg, Volume 19|year=1997|publisher=[[Gandhi Peace Foundation]]|location=New Delhi, India|url=https://books.google.com/books?id=lyxuAAAAMAAJ&q=s.p.+udayakumar+ph.d&dq=s.p.+udayakumar+ph.d&hl=en&sa=X&ei=f-ErU-3pC9CsrAfBl4CIAw&ved=0CDcQ6AEwAg}}</ref><ref>{{cite news | url=http://www.firstpost.com/politics/kudakulam-protest-pmanes-udayakumar-pounds-pmo-227526.html | title=Kudankulam protest: PMANE’s Udayakumar pounds PMO | work=First Post | date=28 February 2012 | accessdate=4 March 2014}}</ref> 1989-ஆம் ஆண்டு முதல் 2000 வரை அமெரிக்காவிலுள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகங்களத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், அவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் [[முனைவர் பட்டம்]] பட்டமும் பெற்றார். பெற்றுபின்பு [[எதியோப்பியா|எதியோப்பியாவில்]] பள்ளி [[ஆசிரியர்|ஆசிரியராக]] பணிபுரிந்தவர். இவர் தற்போது [[கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம்|கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்ட]]க் குழுவின் தலைவராக உள்ளார்.<ref>{{cite news | url=http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2106172/PM-quit-fails-prove-foreign-fund-charge-says-S-P-Udayakumar.html | title='PM should quit if he fails to prove foreign fund charge' says S.P. Udayakumar | work=Daily Mail | date=24 February 2012 | accessdate=4 March 2014}}</ref> இவர் பச்சைத் தமிழகம் என்ற கட்சியின் மாநிலத் தலைவராவார்.<ref>{{cite AV media | url=https://www.youtube.com/watch?v=MoFbxvkr-CY | title=பச்சைத் தமிழக மாநிலத் தலைவர் சுப. உதயகுமார் பத்திரிக்கையாளர் சந்திப்பு | publisher=புதிய தலைமுறை}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
முனைவர் சுப. உதயகுமாரன் யூன் 8, 1959 அன்று நாகர்கோவிலில் திரு. சு. பரமார்த்தலிங்கம், திருமதி. சு. பொன்மணி அவர்களுக்கு மகனாக பிறந்தார். மதுரை மற்றும் கேரளா பல்கலைக்கழகங்களில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் எத்தியோப்பியா நாட்டில் ஆங்கில ஆசிரியராக ஆறாண்டுகள் பணியாற்றினார். 1989-ஆம் ஆண்டு முதல் 2000 வரை அமெரிக்காவிலுள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகங்களத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், அவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் [[முனைவர்]] பட்டமும் பெற்றார்.
 
சமூக-அரசியல்-பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பல நூல்களும், கட்டுரைகளும் எழுதியிருக்கும் உதயகுமார் சுமார் 25 நாடுகளுக்குச் சென்று சர்வதேச மாநாடுகளில் பேசியிருக்கிறார். உலகெங்குமுள்ள பல பல்கலைக்கழகங்களில் கற்பித்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளை சரளமாகப் பேசுவார். இவருக்க்கு இந்தி, அம்காரிக், எசுப்பானிய மொழிகள் ஓரளவு தெரியும்.
 
இவர் பெற்றோர் மனைவி திருமதி. மீரா உதயகுமார் மற்றும் குழந்தைகளுடன் நாகர்கோவில் நகரில் வாழ்கிறார். செல்லப் பிராணிகளையும், புத்தகங்களையும், கறுப்புத் தேநீரையும் அதிகம் விரும்பும் உதயகுமார், படிப்பதிலும், எழுதுவதிலும், அணுத் தீமையற்ற உலகை நிறுவுவதிலும் ஆர்வம் கொண்டவர்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சு._ப._உதயகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது