"செய்யாறு (ஆறு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

118 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''செய்யாறு ஆறு''', [[தமிழ்நாடு|தமிழ்நாடு]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டம்]] வழியாகப் பாயும் ஒரு [[பருவ காலம்|பருவ கால]] [[ஆறு]] ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் [[ஜவ்வாது மலை]] பகுதியில் உருவாகும் இந்த ஆறு, [[பாலாறு|பாலாறு]] நதியின் துணை ஆறு ஆகும்.
 
ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி, மேற்குத் தெற்காகப் பாய்ந்து, பின்பு [[செங்கம்]] அருகில், வடகிழக்காகத் திரும்பி, திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள், [[போளூர்|போளூர்]] நகருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள [[செண்பகத்தோப்பு அணை|செண்பகத்தோப்பு அணையிலிருந்து]] உருவாகும் நாக[[கமண்டல நதி]] எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் [[நாகநதி]] ஆறும், ஆரணி அருகே இணைந்து, [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாக நதி]] என உருப்பெற்று வாழைப்பந்தல் அருகில் [[செய்யார்(ஆறு)|செய்யாற்றுடன்]] இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. அகலத்தில் செய்யாறு, ஆறாக வடக்குக் கிழக்காக ஓடி, [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] நகரை அடுத்த பழையசீவரம் எனும் ஊரில் [[பாலாறு]] நதிடன் இணைந்து [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது.
 
திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு, ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில், திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான [[போளூர்]], [[ஆரணி]],[[செய்யாறு]] மற்றும் [[வந்தவாசி]] நகரங்கள் அமைந்துள்ளன.<ref>{{cite web |url=http://www.whereincity.com/india/tamilnadu/rivers.php |title=Rivers |publisher= |accessdate=2006-09-24}}</ref>
செய்யாறு, நகரின் ஊடே பாய்வதால், இந்த ஆறு இப்பெயர் பெற்றதா? அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா? என்பது கேள்வியே. செய்யாறு நகரில் இந்த ஆற்றின் கரையில் [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தர்]] நாயன்மாரால் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த [[செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்]] அமைந்துள்ளது. சேயாறு (சேய்+ஆறு) என்பது, காலப்போக்கில் திரிந்தும், 'செய்யாறு' எனப் பெயர் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3061140" இருந்து மீள்விக்கப்பட்டது