ஜாங்கிபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{In use}} ஜாங்கீபூர் இந்தியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

05:26, 18 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்


ஜாங்கீபூர் இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் முர்சிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். ஜாங்கிபூர் துணைப்பிரிவின் தலைமையமாக செயற்படும் இந்நகரம் பாகீரதி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் என்பவரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது ஜஹாங்கிர்பூர் என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் இது பட்டு வர்த்தகத்தின் ஒரு முக்கிய மையமாகவும் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக வதிவிடங்களின் தளமாகவும் திகழ்ந்தது. 2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஜாங்கீபூரில் 122,875 பேர் வாழ்கின்றனர். ஜாங்கீபூர் மாநகரசபை 1869 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது நிறுவப்பட்டது. வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகியன இந்நகரத்தின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும்.

நிலவியல்

ஜாங்கீபூர் நகரம் 24.47° வடக்கு 88.07° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில், கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

ஜாங்கீபூரில் சுமார் 213 மீட்டர் நீளமுள்ள பாகீரதி நதியின் தடுப்பணை அமைந்துள்ளது.

சனத்தொகை

2011 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற சனத்தொகை கணக்கெடுப்பில், ஜாங்கீபூர் நகர ஒருங்கிணைப்பு 122,875 மக்கட்தொகையை கொண்டிருந்தது. மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 62,734 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 60,141 ஆகவும் காணப்பட்டது. இந்நகரில் 0–6 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 16,299 ஆகும். மக்களின் எழுத்தறிவு விகிதம் 75.71 சதவீதமாக இருந்தது.

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி, ஜாங்கீபூரில் 74,464 மக்கள் வாழ்கிறார்கள். மொத்த சனத்தொகையில் ஆண்கள் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் வாழ்கிறார்கள். ஜாங்கீபூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 62% வீதம் ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களில் எழுத்தறிவு 68% வீதமாகவும், பெண்களின் எழுத்தறிவு 56% வீதமாகவும் காணப்பட்டது. ஜாங்கிபூரில் 15% வீதமானோர் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள்.

போக்குவரத்து

இந்த நகரம் முர்சிதாபாத் மாவட்ட தலைநகரமான பகாராம்பூரில் இருந்து 47 கிலோ மீற்றர் தூரத்திலும், கல்கத்தாவில் இருந்து, மேற்கு வங்காளத் தலைநகரான கல்கத்தாவில் இருந்து 211 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. ஜாங்கிபூர் நகரமானது மேற்கு வங்காளத் தலைநகரமான கொல்கத்தா நகருடனும், மாவட்ட தலைநகராகிய பஹாரம்பூருடன் என்.எச் 34 பாதை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஜாங்கிபூர் சாலையில் ரகுநாத்கஞ்சில் (அசிம்கஞ்ச் - ஃபாரக்கா பாதையில்) இரயில் நிலையமொன்று அமைந்துள்ளது. பல விரைவுத் புகைவண்டிகள் மற்றும் பயணிகள் தொடருந்துகள் இந்நகரத்தை கடந்து செல்கின்றன. ரகுநாத்கஞ்ச் என்பது பகீரதி நதிக்கு எதிரே உள்ள ஜாங்கிபூரின் இரட்டை நகரமாகும்.

கல்வி

ஜாங்கிபூர் நகரில் 1950 ஆம் ஆண்டில் ஜாங்கிபூர் கல்லூரி நிறுவப்பட்டது. கல்யாணி பல்கலைக்கழகத்துடன் இணைந்த இக்கல்லூரி வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், தத்துவம், அரசியல் அறிவியல், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணக்கியல் ஆகிய பாடங்களில் மேற் படிப்புகளை வழங்குகிறது. இந்தக் கல்லூரி 2016-17 ஆண்டு முதல், வங்காளம், ஆங்கிலம், வரலாறு மற்றும் கல்வி ஆகியவற்றில் முதுகலை படிப்புகளை தொலைதூரக் கல்வி முறையில் வழங்குகிறது. முர்ஷிதாபாத்தில் ஒரு மேலாண்மை மேம்பாட்டு கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 2014 ஆண்டில் இக்கல்வி நிறுவனத்தை அப்போதைய இந்திய ஜனாதிபதி ஸ்ரீ பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். இந்த நிறுவனம் இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாங்கிபூர்&oldid=3061570" இலிருந்து மீள்விக்கப்பட்டது