"ஜாங்கிபூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,347 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
குறிப்புகள் சேர்க்கப்பட்டன
("{{In use}} ஜாங்கீபூர் இந்தியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
(குறிப்புகள் சேர்க்கப்பட்டன)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
{{In use}}
 
'''ஜாங்கீபூர்''' (Jangipur) இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் முர்சிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். ஜாங்கிபூர் துணைப்பிரிவின் தலைமையமாக செயற்படும் இந்நகரம் பாகீரதி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் என்பவரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது ஜஹாங்கிர்பூர் என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் இது பட்டு வர்த்தகத்தின் ஒரு முக்கிய மையமாகவும் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக வதிவிடங்களின் தளமாகவும் திகழ்ந்தது. <ref>{{Citation|title=Jangipur|url=https://en.wikisource.org/wiki/1911_Encyclop%C3%A6dia_Britannica/Jangipur|journal=1911 Encyclopædia Britannica|accessdate=2020-11-18|volume=Volume 15}}</ref>2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி ஜாங்கீபூரில் 122,875 பேர் வாழ்கின்றனர். ஜாங்கீபூர் மாநகரசபை 1869 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது நிறுவப்பட்டது. வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகியன இந்நகரத்தின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும்.
 
== நிலவியல் ==
 
ஜாங்கீபூர் நகரம் 24.47° வடக்கு 88.07° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில், கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.<ref>{{Cite web|url=http://www.fallingrain.com/world/IN/28/Jangipur.html|title=Maps, Weather, and Airports for Jangipur, India|website=www.fallingrain.com|access-date=2020-11-18}}</ref>
ஜாங்கீபூரில் சுமார் 213 மீட்டர் நீளமுள்ள பாகீரதி நதியின் தடுப்பணை அமைந்துள்ளது.<ref>{{Cite web|url=http://wrmin.nic.in/writereaddata/Publications/anu141200246187.pdf|title=Chapter 14: Farakka Barrage Project|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
அமைந்துள்ளது.
 
== சனத்தொகை ==
 
2011 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற சனத்தொகை கணக்கெடுப்பில், ஜாங்கீபூர் நகர ஒருங்கிணைப்பு 122,875 மக்கட்தொகையை கொண்டிருந்தது. மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 62,734 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 60,141 ஆகவும் காணப்பட்டது. இந்நகரில் 0–6 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 16,299 ஆகும். மக்களின் எழுத்தறிவு விகிதம் 75.71 சதவீதமாக இருந்தது.<ref>{{Cite web|url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_3_PR_UA_Citiees_1Lakh_and_Above.pdf|title=Urban Agglomerations/Cities having population 1 lakh and above|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி,<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|title=Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> ஜாங்கீபூரில் 74,464 மக்கள் வாழ்கிறார்கள். மொத்த சனத்தொகையில் ஆண்கள் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் வாழ்கிறார்கள். ஜாங்கீபூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 62% வீதம் ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களில் எழுத்தறிவு 68% வீதமாகவும், பெண்களின் எழுத்தறிவு 56% வீதமாகவும் காணப்பட்டது. ஜாங்கிபூரில் 15% வீதமானோர் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள்.
 
== போக்குவரத்து ==
== கல்வி ==
 
ஜாங்கிபூர் நகரில் 1950 ஆம் ஆண்டில் ஜாங்கிபூர் கல்லூரி நிறுவப்பட்டது. கல்யாணி பல்கலைக்கழகத்துடன் இணைந்த இக்கல்லூரி வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், தத்துவம், அரசியல் அறிவியல், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணக்கியல் ஆகிய பாடங்களில் மேற் படிப்புகளை வழங்குகிறது. இந்தக் கல்லூரி 2016-17 ஆண்டு முதல், வங்காளம், ஆங்கிலம், வரலாறு மற்றும் கல்வி ஆகியவற்றில் முதுகலை படிப்புகளை தொலைதூரக் கல்வி முறையில் வழங்குகிறது.<ref>{{Cite web|url=http://www.jangipurcollege.in/|title=JANGIPUR COLLEGE|website=www.jangipurcollege.in|access-date=2020-11-18}}</ref> முர்ஷிதாபாத்தில் ஒரு மேலாண்மை மேம்பாட்டு கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 2014 ஆண்டில் இக்கல்வி நிறுவனத்தை அப்போதைய இந்திய ஜனாதிபதி ஸ்ரீ பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். இந்த நிறுவனம் இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
 
== குறிப்புகள் ==
1,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3061574" இருந்து மீள்விக்கப்பட்டது