கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
மின்னலே திரைப்படத்தின் வெற்றி காரணமாக அத்திரைப்படத்தை இந்தியில் மறு ஆக்கம் செய்ய இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் வாசு பக்னானி கௌதமை ஒப்பந்தம் செய்தார். ''ரெஹ்னா ஹே தேரே தில் மேயின்'' (2001) என்று பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தில் மாதவனுடன் [[தியா மிர்சா]] மற்றும் [[சைஃப் அலி கான்]] ஆகியோர் இணைந்து நடித்தனர். முதலில் தயங்கிய கௌதம் "அரை மணி" நேரத்திற்குப் பிறகு இயக்க ஒப்புக் கொண்டார். ஆனால் மின்னலே திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை மீண்டும் ஒப்பந்தம் செய்யும் கௌதமின் முடிவுக்குத் தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளவில்லை.<ref name="rhtdmint"/> இந்திப் படத்திற்காக சில காட்சிகள் நீக்கப்பட்டு புதிதாக காட்சிகள் இணைக்கப்பட்டன. படமானது "விளக்கப்படுத்தப்பட்ட விதம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடியதாக இல்லை" என தரன் ஆதர்ஷ் என்ற விமர்சகர் விமர்சித்து இருந்தார். எனினும் கௌதம் "சில காட்சிகளை நம்பிக்கையுடன் கையாண்டிருப்பதாகக்" கூறினார். படம் சராசரிக்கும் குறைவான அளவே வசூல் செய்தது.<ref name="rhtdmrvw">{{cite web|author=Adarsh, Taran|year=2001|title=Rehna Hai Tere Dil Mein|publisher=[[Bollywood Hungama]]|accessdate=2011-04-28|url=http://www.bollywoodhungama.com/movies/review/6838/index.html|authorlink=Taran Adarsh|archive-date=22 September 2011|archive-url=https://web.archive.org/web/20110922062043/http://www.bollywoodhungama.com/movies/review/6838/index.html|url-status=live}}</ref> இத்திரைப்படத்தின் தோல்வி கௌதமுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளரின் தலையீடு காரணமாக இந்தி திரைப்படமானது மின்னலே திரைப்படத்தின் எளிமைத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை என கௌதம் கூறியதாகக் கூறப்பட்டது.<ref name="kkrediff">{{cite web|author=Warrier, Shobha|year=2003|title=The industry is in such a shape that you cannot have big-budget films|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-04-28|url=http://www.rediff.com/movies/2003/mar/21menon.htm|archive-date=1 August 2010|archive-url=https://web.archive.org/web/20100801233643/http://www.rediff.com/movies/2003/mar/21menon.htm|url-status=live}}</ref> படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதன் காரணமாக இப்படம் பிரபலமடைந்தது. இளம் வயது இந்தி பேசும் பார்வையாளர்கள் மத்தியில் தனக்கெனத் தனி இரசிகர் பட்டாளத்தை இத்திரைப்படம் பெற்றுள்ளது.<ref>{{cite web|url=http://www.pinkvilla.com/entertainment/discussion/bollywoods-cult-classics|title=Bollywood's Cult Classics|work=PINKVILLA|accessdate=16 February 2016|archive-date=3 February 2016|archive-url=https://web.archive.org/web/20160203022640/http://www.pinkvilla.com/entertainment/discussion/bollywoods-cult-classics|url-status=dead}}</ref> 2011 ஆம் ஆண்டு ''ரெஹ்னா ஹே தேரே தில் மேயின்'' திரைப்படத்தை தன் மகன் ஜாக்கி பக்னானியைக் கதாநாயகனாகக் கொண்டு மீண்டும் மறு ஆக்கம் செய்ய வாசு பக்னானி கௌதமைத் தொடர்பு கொண்டார். ஆனால் கௌதமுக்கு அதில் ஆர்வமில்லை.<ref name="rhtdm2">{{cite news|author=Jha, Subhash|title=Jackky Bhagnani in RHTDM remake?|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|accessdate=2011-04-28|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-04-19/news-interviews/29446851_1_vashu-bhagnani-hindi-film-gautham-menon|date=19 April 2011|archive-date=16 July 2012|archive-url=https://archive.is/20120716120315/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-19/news-interviews/29446851_1_vashu-bhagnani-hindi-film-gautham-menon|url-status=live}}</ref> 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தற்காலிகமாக ''இரு விழி உனது'' என்ற கதையை கௌதம் எழுதி வருவதாக கூறப்பட்டது. எனினும் ஒரு தயாரிப்பாக அது உருவாகவில்லை.<ref>{{cite web|url=http://www.tfmpage.com/oldnews01.html|title=TFM Old News Items|work=tfmpage.com|access-date=10 October 2015|archive-date=3 March 2016|archive-url=https://web.archive.org/web/20160303232803/http://www.tfmpage.com/oldnews01.html|url-status=dead}}</ref>
 
===காவல்துறை அதிகாரிகள் பற்றிய இரட்டை படங்கள், 2003–06===
 
கௌதம் மேனன் 2003 ஆம் ஆண்டு காவலர்கள் பற்றிய யதார்த்த த்ரில்லரான ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003) திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[ஜோதிகா]] மற்றும் ஜீவன் ஆகியோர் நடித்தனர். ஒரு காவல் அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கையை இத்திரைப்படம் காட்டியது. சமூக விரோதிகளால் அவரது வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டியது. அந்நேரத்தில் வந்த தமிழ் படங்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் காவல்துறையில் பணியாற்றுபவர்களைக் காட்டியது.<ref name="kkrediff"/> என்கவுண்டர் நிபுணர்கள் எவ்வாறு சமூக விரோதிகளை சுடுகின்றனர், அவர்களது குடும்பங்கள் பதிலுக்கு எவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றனர் ஆகியவற்றைப் பற்றிய கட்டுரைகளை படித்த பின்னர் தான் இத்திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்ததாக கௌதம் கூறியுள்ளார். கௌதம் ஆரம்பத்தில் [[மாதவன்]], [[அஜித் குமார்]] மற்றும் பிறகு [[விக்ரம்]] ஆகியோரை அணுகினார். ஆனால் மூவருமே ஒரு காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டனர். இத்திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா கௌதமிடம் கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு சூர்யாவை பரிசீலிக்குமாறு கூறினார். ''[[நந்தா (திரைப்படம்)|நந்தா]]'' திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பார்த்த பிறகு கௌதம் இறுதியாக அவரைத் தேர்வு செய்தார்.<ref name="gvm1">{{cite web|author=Rangan, Baradwaj|year=2006|title=Interview: Gautham Menon|publisher=Baradwaj Rangan|accessdate=2011-04-28|url=http://baradwajrangan.wordpress.com/2006/12/17/interview-gautham-menon/|archive-date=12 August 2011|archive-url=https://web.archive.org/web/20110812052934/http://baradwajrangan.wordpress.com/2006/12/17/interview-gautham-menon/|url-status=live}}</ref> நடிகர்களை வைத்து திரைக்கதையை ஒத்திகை பார்த்துக் கொண்ட கௌதம், படத்தை ஆரம்பிப்பதற்கு முன் சூர்யாவை ஒரு கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார்.<ref name="gvm1"/> இத்திரைப்படம் வெளியான பிறகு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. விமர்சகர்கள் இத்திரைப்படத்தை கௌதமின் "திரைவாழ்க்கையில் ஒரு உச்சம்" என பாராட்டினர்.<ref name="kkredview">{{cite web|author=Subramaniam, Guru|year=2003|title=A career high film for Surya'|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-04-28|url=http://www.rediff.com/movies/2003/aug/11kaaka.htm|archive-date=29 May 2011|archive-url=https://web.archive.org/web/20110529072959/http://www.rediff.com/movies/2003/aug/11kaaka.htm|url-status=live}}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது