விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
மிகவும் சிறப்பான விக்கிப்பீடியப் பயிற்சியினை {{ping|TNSE Mahalingam VNR|Sivakosaran|Fahimrazick|Sridhar G}} கடந்த வாரங்களில் மாணவர்களிடையே வழங்கினர். மாணவர்களின் பங்களிப்பும் பரவலான திட்டங்களில் காணமுடிகிறது. ஆர்வமாகக் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். திட்டமிட்டபடி ஐந்து திட்டங்கள் குறித்த பயிற்சி நிறைவு பெறுகிறது. மாணவர்களிடம் எழும் ஐயங்களைப் போக்க சில அமர்வுகள் எதிர்வரும் நாட்களில் நடக்கவுள்ளன. 24 மாணவர்கள் இலக்கினை அடையும் பட்சத்தில் அவர்களுக்கான உள்ளகப்பயிற்சிச் சான்றிதழ் வழங்கவும், 43 மாணவர்கள்/ஆசியர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. [[பயனர்:Guruleninn|லெனின்]] மிக அருமையாகச் சான்றிதழ் வடிவமைப்பினைச் செய்துள்ளார். சில தினங்களில் அதனை இங்கே இறுதி செய்வோம். இதர பயனர்கள் பங்களிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த மாணவர்கள் விடும் தவறுகளைத் திருத்தி வழிகாட்டலாம்; பேச்சுப் பக்கங்களில் பாராட்டலாம். உள்ளகப் பயிற்சி என்பது புதிய முயற்சி என்பதாலும் மற்ற மாணவர்களுக்கு முன்னோடியாகவும் இருப்பதால் அவர்கள் பங்களிப்பைப் பற்றி ஊடகங்களுக்குச் செய்தி அனுப்பலாம் என நினைக்கிறேன். மேலும் ஆலோசனைகளைத் தந்தும் உதவலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 14:30, 18 நவம்பர் 2020 (UTC)
 
==சான்றிதழ் உருவாக்கம்==
பயிற்சி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ் மாதிரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் சிறப்பாக [[பயனர்:Guruleninn|லெனின்]] தயாரித்துள்ளார். 24 மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழும் மற்றவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் இலக்கை அடைந்தவுடன் சான்றிதழை அவர்களிடம் கொடுக்கவுள்ளோம். சி.ஐ.எஸ். நமக்கு அச்சேற்றித் தரவுள்ளனர். பயிற்சி நாளையுடன் முடிவடைகிறது. இருந்தாலும் தேவைப்படும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகுப்புகள் அவ்வப்போது திட்டமிடலாம். இந்த மூன்றில் திருத்தமோ பரிந்துரையோ இருந்தால் அறியத் தரலாம்.
<gallery>
File:Tamil Wiki Internship Certificate Model-1.png|300px|thumb|மாதிரி 1
File:Tamil Wiki Internship Certificate Model-2.png|300px|thumb|மாதிரி 2
File:Tamil Wiki Internship Certificate Model-3.png|300px|thumb|மாதிரி 3
</gallery>
பங்கேற்பாளர் சான்றிதழுக்கு இதே வார்ப்புருவில் கீழுள்ள வாசகங்கள் இடம் பெறும்.
<pre>Certified that <Student Name> participated in Tamil Wiki online workshops held in Oct 23 to Nov 22 2020 in following Creative Commons Projects:
Tamil Wikisource
Tamil Wiktionary
Tamil Wikipedia
Wikicommons
Wikidata
Certified also that he/she has attended training in Content writing, proofreading, and copyright licensing.
</pre>-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:48, 21 நவம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3062846" இருந்து மீள்விக்கப்பட்டது