கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
கௌதம் மேனன் 2003 ஆம் ஆண்டு காவலர்கள் பற்றிய யதார்த்த த்ரில்லரான ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003) திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[ஜோதிகா]] மற்றும் ஜீவன் ஆகியோர் நடித்தனர். ஒரு காவல் அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கையை இத்திரைப்படம் காட்டியது. சமூக விரோதிகளால் அவரது வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டியது. அந்நேரத்தில் வந்த தமிழ் படங்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் காவல்துறையில் பணியாற்றுபவர்களைக் காட்டியது.<ref name="kkrediff"/> என்கவுண்டர் நிபுணர்கள் எவ்வாறு சமூக விரோதிகளை சுடுகின்றனர், அவர்களது குடும்பங்கள் பதிலுக்கு எவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றனர் ஆகியவற்றைப் பற்றிய கட்டுரைகளை படித்த பின்னர் தான் இத்திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்ததாக கௌதம் கூறியுள்ளார். கௌதம் ஆரம்பத்தில் [[மாதவன்]], [[அஜித் குமார்]] மற்றும் பிறகு [[விக்ரம்]] ஆகியோரை அணுகினார். ஆனால் மூவருமே ஒரு காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டனர். இத்திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா கௌதமிடம் கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு சூர்யாவை பரிசீலிக்குமாறு கூறினார். ''[[நந்தா (திரைப்படம்)|நந்தா]]'' திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பார்த்த பிறகு கௌதம் இறுதியாக அவரைத் தேர்வு செய்தார்.<ref name="gvm1">{{cite web|author=Rangan, Baradwaj|year=2006|title=Interview: Gautham Menon|publisher=Baradwaj Rangan|accessdate=2011-04-28|url=http://baradwajrangan.wordpress.com/2006/12/17/interview-gautham-menon/|archive-date=12 August 2011|archive-url=https://web.archive.org/web/20110812052934/http://baradwajrangan.wordpress.com/2006/12/17/interview-gautham-menon/|url-status=live}}</ref> நடிகர்களை வைத்து திரைக்கதையை ஒத்திகை பார்த்துக் கொண்ட கௌதம், படத்தை ஆரம்பிப்பதற்கு முன் சூர்யாவை ஒரு கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார்.<ref name="gvm1"/> இத்திரைப்படம் வெளியான பிறகு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. விமர்சகர்கள் இத்திரைப்படத்தை கௌதமின் "திரைவாழ்க்கையில் ஒரு உச்சம்" என பாராட்டினர்.<ref name="kkredview">{{cite web|author=Subramaniam, Guru|year=2003|title=A career high film for Surya'|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-04-28|url=http://www.rediff.com/movies/2003/aug/11kaaka.htm|archive-date=29 May 2011|archive-url=https://web.archive.org/web/20110529072959/http://www.rediff.com/movies/2003/aug/11kaaka.htm|url-status=live}}</ref>
 
கௌதம் பின்னர் இத்திரைப்படத்தை தெலுங்கு மொழியில் ''கர்ஷனா'' (2004) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். சூர்யாவின் கதாபாத்திரத்தில் [[வெங்கடேஷ் (நடிகர்)|வெங்கடேஷ்]] நடித்தார். [[அசின் (நடிகை)|அசின்]] மற்றும் சலீம் பய்க் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. "தொழில்நுட்ப சிறப்பம்சம் மற்றும் கௌதம் திறமையாக கையாண்ட விதம் ஆகியவை காரணமாக திரைப்படம்" சிறப்பாக உள்ளதாக விமர்சகர்கள் பாராட்டினர். [[மணிரத்னம்]] மற்றும் [[ராம் கோபால் வர்மா]] ஆகிய இயக்குநர்களுடன் கௌதமை ஒப்பிட்டனர்.<ref name="gharshanareview">{{cite web|year=2004|title=Gharshana&nbsp;– Flying colors in khaki|publisher=IndiaGlitz|accessdate=2011-04-28|url=http://www.indiaglitz.com/channels/telugu/review/7127.html|archive-date=7 September 2011|archive-url=https://web.archive.org/web/20110907021541/http://www.indiaglitz.com/channels/telugu/review/7127.html|url-status=live}}</ref> ஜூலை 2004 ஆம் ஆண்டு கௌதம் ''காக்க காக்க'' திரைப்படத்தை இந்தியில் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகனாக [[சன்னி தியோல்]] ஒப்பந்தம் செய்யப்பட்டார். திரைக்கதையானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தியோலை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டது என்று கௌதம் கூறினர். ஆனால் அத்திரைப்படம் ஆரம்பிக்கப்படவில்லை.<ref name="deolgvm">{{cite web|author=Adarsh, Taran|year=2004|title=Sunny in 'Kaakha Kaakha' remake|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://www.sify.com/movies/sunny-in-kaakha-kaakha-remake-news-bollywood-kkfvK6dacdj.html|archive-date=26 November 2011|archive-url=https://web.archive.org/web/20111126061755/http://www.sify.com/movies/sunny-in-kaakha-kaakha-remake-news-bollywood-kkfvK6dacdj.html|url-status=live}}</ref> இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா 2010 ஆம் ஆண்டு ''ஃபோர்ஸ்'' என்ற பெயரில் [[ஜான் ஆபிரகாம் (நடிகர்)|ஜான் ஆபிரகாம்]] மற்றும் [[ஜெனிலியா]] ஆகியோரை வைத்து ''காக்க காக்க'' திரைப்படத்தை மீண்டும் இந்தியில் இயக்க கௌதமை அணுகினார். ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட கௌதம் இறுதியில் மீண்டும் பின்வாங்கினார்.<ref name="forcegvm">{{cite news|author=Daithota, Madhu|title=John Abraham loved 'Kaakha Kaakha'|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|accessdate=2011-04-28|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/John-Abraham-loved-Kaakha-Kaakha/iplarticleshow/5569383.cms|date=14 February 2010|archive-date=13 October 2011|archive-url=https://web.archive.org/web/20111013021106/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/John-Abraham-loved-Kaakha-Kaakha/iplarticleshow/5569383.cms|url-status=live}}</ref> கௌதம் மற்றும் தயாரிப்பாளர் தாணு, [[செச்சினியா]]வை பின்புலமாகக் கொண்ட ''காக்க காக்க'' திரைப்படத்தின் ஒரு ஆங்கில மொழிப் பதிப்பை உருவாக்க எண்ணினர். எனினும் [[அசோக் அமிர்தராஜ்]] உடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.<ref name="gvm1"/> 2018 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து ''காக்க காக்க'' திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஒரு திரைப்படத்தை இயக்க தான் திட்டமிட்டிருப்பதாக கௌதம் தெரிவித்தார்.<ref>{{cite web|url=http://origin-www.sify.com/movies/gautham-menon-my-next-film-title-is-ondraga-news-tamil-scikhSgeagahb.html|title=Gautham Menon: My next film title is 'Ondraga'!|website=Sify|access-date=10 February 2019|archive-date=12 February 2019|archive-url=https://web.archive.org/web/20190212070500/http://origin-www.sify.com/movies/gautham-menon-my-next-film-title-is-ondraga-news-tamil-scikhSgeagahb.html|url-status=live}}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது