போர்சிப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
== வரலாறு ==
பொதுவாக பாபிலோனுடன், [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|உர் III]] காலத்திலிருந்து [[செலூக்கியப் பேரரசு|செலூசிட்]] காலம் வரையிலான நூல்களிலும், ஆரம்பகால இசுலாமிய நூல்களிலும் போர்சிப்பா குறிப்பிடப்பட்டுள்ளது. இது [[தல்மூத்|பாபிலோனிய தல்மூத்]] ( ''சப்பாத்'' 36 அ) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்சிப்பா பாபிலோனைச் சார்ந்து இருந்ததேயன்றி ஒருபோதும் பிராந்திய சக்தியின் இடமாக இருக்கவில்லை. கி.மு. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து, போர்சிப்பா [[சால்டியா|சால்தியா]] பழங்குடி இன மக்களின் வீடுகளுக்குத் தெற்கு எல்லைப்புற நிலத்தில் இருந்தது.
 
யூத வரலாற்றாசிரியரான [[ஜொசிஃபஸ்|ஜோசபஸ்]], [[சைரசு|பெரிய சைரசுக்கும்]] நபோனெடஸுக்கும் இடையிலான போர் தொடர்பாக இந்நகரத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். <ref>Josephus, ''[[Against Apion]]'' (Book 1, section 20)</ref> கிமு 484 இல் [[அகாமனிசியப் பேரரசு]] மன்னர் [[முதலாம் செர்கஸ்|செர்கசுக்கு]] எதிரான கிளர்ச்சியை அடக்கியபோது போர்சிப்பாவில் உள்ள நாபுவுக்கான கோயில் அழிக்கப்பட்டது. <ref>M. A. Dandamayev, "Ezida Temple and the Cult of Nabu in Babilonia of the First Millennium", ''Vestnik drevnej istorii'', no. 3, pp. 87-94, 2009</ref>
"https://ta.wikipedia.org/wiki/போர்சிப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது