"இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

380 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
==வரலாறு ==
[[படிமம்:Ithayaragam.jpg|250px|thumb|right|[[சர்மிளாவின் இதய ராகம்]] (1978) என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுநீள தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும்.]]
இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 1951 இல் திரையிடப்பட்ட [[குசுமலதா]] என்றே கருதப்படுகின்றது. இப்படம் [[தென்னிந்தியத் திரைப்படத்துறை|தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில்]] வைத்து தயாரிக்கப் பட்டு 1947 இல் [[இலங்கை]]யில் திரையிடப்பட்ட 'சங்கவுனு பிலித்துற' என்ற சிங்களப் படத்தின் தமிழ்மொழி மாற்றுப் படம்.
 
இப்படத்தில் அன்றைய சிங்களத் தம்பதிகளும் முன்னணி நடிகர்களுமான [[எடி ஜயமன்ன]]வும், [[ருக்மணி தேவி]]யும் நடித்திருந்தார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இதற்குக் குரல் கொடுத்தவர்கள் தென்னிந்தியக் கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் [[குசுமலதா]] என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. சில [[ஆண்டு]]கள் கழித்து தமிழில் [[அண்ணாத்துரை]] எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு [[சமுதாயம் (திரைப்படம்)|சமுதாயம்]] என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான [[ஹென்றி சந்திரவன்ச]] இப்படத்திற்கு இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. இந்த சமுதாயம் படம்தான் முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.
 
1993 ஆம் ஆண்டு [[தோட்டக்காரி]] என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும். 1978 ஆம் ஆண்டு வெளியான என்ற திரைப்படம் இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படம் ஆகும். இதே ஆண்டில் வெளியான [[சர்மிளாவின் இதய ராகம்]] என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுநீள தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும்.
 
[[ஈழப் போர்]] காரணமாக இலங்கைத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பு தடை பெற்று இருந்தது. ஆனால் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தால் சில ஆவணத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியானது. ஆனால் இந்த வகைத் திரைப்படங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு [[இந்தியா|இந்திய]], [[இலங்கை]], [[ஜேர்மனி]], [[இங்கிலாந்து]] போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டுத் தயாரிப்பில் என்ற [[மண் (திரைப்படம்)|மண்]] திரைப்படம் வெளியானது.
23,526

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3064768" இருந்து மீள்விக்கப்பட்டது