கா. கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
புலவர் கோவிந்தனின் பெற்றோர் காங்கேய முதலியார் - சுந்தரம் அம்மையார் ஆவர். [[செங்குந்தர்|செங்குந்தர் கைக்கோள முதலியார்]] மரபை சேர்ந்த<ref>https://archive.org/details/SenguntharPrabanthaThiratu/page/n2/mode/1up</ref> இவரது குடும்பம் நெசவும், உழவும் செய்து வந்தது. கோவிந்தன் செய்யாற்றில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். 1934 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேறினார். 1940 இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] வித்வான் பட்டம் பெற்றார். 1941 இல் சேலத்தில் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
 
சிறுவயது முதல் [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழ் இயக்கத்திலும்]] [[நீதிக்கட்சி]]யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 1938 [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார்]]. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று [[அண்ணா]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைத்]] (திமுக) தொடங்கிய போது அதில் இணைந்தார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952 சட்டமன்றத் தேர்தலில்]] திமுக ஆதரவு வேட்பாளருக்காக செய்யாறு பகுதியில் பிரச்சாரம் செய்தார். 1958 இல் திருவத்திபுரம் (செய்யாறு) பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962 சட்டமன்றத் தேர்தலில்]] செய்யாறுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>https://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/cheyyar.html?utm_source=from_actrack</ref> [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] தேர்தல்களிலும் அதே தொகுதியிலிருந்து திமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றார். 1967-69 இல் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பணியாற்றினார். 1969-71 மற்றும் 1973-77 காலகட்டங்களில் சட்டமன்றத் தலைவராகப் பணியாற்றினார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து போட்டியிட்டு தோல்வியுற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/கா._கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது