"செம்மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{Multiple issues}}
'''செம்மொழி''' (''Classical language'') என்பது ஒரு [[மொழி]]யின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் [[இலக்கியம்|இலக்கிய]]ப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்{{fn|1}} ([[ஜோர்ஜ் எல்.ஹார்ட்]]).
 
[[உலகம்|உலகில்]] எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.
=== கலைப் படைப்புகள் ===
 
ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது [[கட்டிடம்|கட்டிடக்]] கலை , [[சிற்பம்|சிற்பக்]] கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.
 
== உலகச் செம்மொழிகள் ==
=== கிரேக்கம் ===
 
[[கிரேக்க மொழி]] மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கிரேக்க இலக்கியத்தில் ஹோமர் எனும் மகாகவியின் காப்பியங்களான [[இலியது]], [[ஒடிசி (இலக்கியம்)|ஒடிசி]] ஆகியன கி.மு.700 ல் வரி வடிவத்தை அடைந்திருந்தாலும் அதற்கு முன்பாகச் செவி வழிச் செய்திகளாக பல நூற்றாண்டுகள் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் [[வரலாறு|வரலாற்றுப்]] பதிவுகள், டுமாஸ் தனிசின் [[சொற்பொழிவுகள்]] , [[பிளேட்டோ]] , [[அரிஸ்டாட்டில்]] போன்றவர்களின் [[தத்துவம்|தத்துவ]] நூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பனவாக உள்ளன.
 
=== இலத்தீன் ===
 
[[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[நாடு]]களில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. மேலும் இம்மொழி அறிஞர்களான சிசிரோ, சேலஸ்ட், டேசிட்டஸ், செனகா போன்றவர்களின் சொற்பொழிவுகள் , தத்துவங்கள் இலத்தீன் மொழிக்கு வளம் சேர்க்கின்றன. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. [[1900]] ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் [[இத்தாலி]]ய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழங்கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.
 
=== அரபு மொழி ===
 
அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் [[குர்ஆன்|குர் ஆன்]] சிறந்த இலக்கியமாக கருதப்படுகிறது. அரேபியப் [[பழமொழிகள்]] , [[கவிதை]]கள் போன்றவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன.
 
=== சீனம் ===
=== ஹீப்ரூ ===
 
ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் [[பழைய ஏற்பாடு]] எழுதப்பட்டது. இது விவிலியக் காலம் எனப்படுகிறது. மோசஸ் என்பவரால் யூதர்களின் [[நீதிநெறிகள்]] , [[சட்டம்|சட்டங்கள்]] ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. இது மிஷனா காலம் எனப்படுகிறது. இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் எழுதிய விளக்கம் கெமாரா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது. மூன்றாவதாக கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு [[ஜெருசலேம்]] பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.
 
=== பாரசீகம் ===
=== சமஸ்கிருதம் ===
 
இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட [[சமஸ்கிருதம்]] கி.மு., 1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் [[இராமாயணம்]] , [[மகாபாரதம்]] போன்ற [[இதிகாசம்|காப்பியங்கள்]] செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் [[கல்கத்தா]]வில் [[1784]] -ல் [[ஆசியா|ஆசியக்]] [[கல்வி]]ச் [[சங்கம்]] எனும் [[நிறுவனம்|நிறுவனத்தை]] உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை [[ஆங்கிலம்]] , [[ஜெர்மன்]] , [[பிரெஞ்ச்]] போன்ற [[ஐரோப்பியா|ஐரோப்பிய]] மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித [[நூல்கள்]] என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். [[இலக்கியம்]] , [[தத்துவம்]] , [[அரசியல்]] போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு [[வேதம்]] , [[உபநிடதம்]] , [[இதிகாசங்கள்]] , [[காப்பியம்|காப்பியங்கள்]] , [[நாடகங்கள்]] , [[தத்துவம்|தத்துவ]] நூல்கள், [[நீதி]] நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தைச் செம்மொழியாகக் கருதச் செய்தன.
 
== இந்தியாவில் செம்மொழிக்கான தகுதி ==
ஒரு மொழியானது 1,500 முதல் 2,000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழைமையான இலக்கியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அல்லது அம்மொழியின் துவக்ககால இலக்கியங்கள் உயர் தரத்தில் இருத்தல் வேண்டும். மேலும் அந்த மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாக இருத்தல் வேண்டும். மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் கூடாது.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-opinion/indian-languages-and-the-classical-status/article1383080.ece New category</ref><ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/criteria-for-classical-language-status/article482123.ece</ref>. அதன் அடிப்படையிலே ஒரு மொழிக்கு செம்மொழி தகுதியை [[இந்திய அரசு]] வழங்கி வருகிறது. இந்தியாவில் [[தமிழ்]], [[சமசுகிருதம்]]<ref name="infoqueenbee.com">http://www.infoqueenbee.com/2010/06/official-languages-and-classical.html</ref>[[கன்னடம்]], மற்றும் [[ஒடியா மொழி]]<ref>http://www.jagranjosh.com/current-affairs/cabinet-approved-odia-as-classical-language-1392954604-1</ref> கள் செம்மொழிகளாக தகுதி பெற்றுள்ளது.<ref name="infoqueenbee.com"/>
 
== மேற்கோள்கள் ==
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3065080" இருந்து மீள்விக்கப்பட்டது