கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
இவரது அடுத்த திரைப்படம் ஜேம்ஸ் சீகல் எழுதிய ''டீரெயில்ட்'' நாவலை அடிப்படையாக கொண்ட ''[[பச்சைக்கிளி முத்துச்சரம்]]'' (2007) ஆகும். இத்திரைப்படத்தில் [[சரத்குமார்]] மற்றும் [[ஜோதிகா]] ஆகியோர் நடித்திருந்தனர். 2007 பெப்ரவரி மாதம் திரைப்படம் வெளியானது. ஆரம்பத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் [[கமல்ஹாசன்|கமல்ஹாசனுக்கு]] வழங்கப்பட்டது. அவர் மறுத்துவிட்டார். பிறகு பரிசீலிக்கப்பட்ட [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]] கால்ஷீட் இல்லாததாலும், [[மாதவன்]] இமேஜ் பாதிக்கப்படும் என்பதாலும் மறுத்துவிட்டனர்.<ref name="gvm2">{{cite web|author=Rangan, Baradwaj|year=2008|title=Gautam "Vasudev" Menon|publisher=Baradwaj Rangan|accessdate=2011-04-28|url=http://baradwajrangan.wordpress.com/2008/06/05/interview-gautam-vasudev-menon/|archive-date=10 July 2010|archive-url=https://web.archive.org/web/20100710055938/http://baradwajrangan.wordpress.com/2008/06/05/interview-gautam-vasudev-menon/|url-status=live}}</ref> சரத் குமாரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த கௌதம் அவரது 'ஆக்‌ஷன்' இமேஜை மாற்ற நினைப்பதாக கூறினார். இறுதியில் சரத் குமாரை கதாநாயகனாக கௌதம் ஒப்பந்தம் செய்தார்.<ref name="gvm2"/> படத்தயாரிப்பின் போது [[சிம்ரன்]] தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் இருந்து விலகியதால் பிரச்சனை ஏற்பட்டது. பிறகு பரிசீலிக்கப்பட்ட [[தபூ]] மறுக்க, [[சோபனா]] ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<ref name="vushiob">{{cite web|year=2006|title='I don't write scripts for heroes'|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://www.sify.com/movies/tamil/interview.php?id=14149001&cid=2408|archive-date=13 July 2011|archive-url=https://web.archive.org/web/20110713184322/http://www.sify.com/movies/tamil/interview.php?id=14149001&cid=2408|url-status=live}}</ref> பிறகு சோபனா இத்திரைப்படத்தின் கல்யாணி கதாபாத்திரத்திற்காக புதுமுகமான [[ஆண்ட்ரியா ஜெரெமையா]]வால் மாற்றம் செய்யப்பட்டார். இத்திரைப்படமானது தயாரிக்கப்பட ஒரு ஆண்டுக்கு மேல் எடுத்துக் கொண்டது. தயாரிக்கும் காலமானது கௌதமின் முந்தைய திரைப்படத்தை ஒத்து இருந்தது. வெளியிடப்பட்ட திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஒரு விமர்சகர், கௌதம் "ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும் வளர்ந்து வருகிறார். இவரது பாணி தனித்துவமானது, பார்வை தெளிவானது, இவரது குழு இவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. ஒவ்வொரு தடவை முயற்சி செய்யும்போதும் இவர் வெற்றி பெறுகிறார்" என்று எழுதினார்.<ref name="pkmcbwd">{{cite web|year=2007|title=Pachaikili Muthucharam|publisher=Behindwoods|accessdate=2011-04-28|url=http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-05/pachaikili-muthucharam-review.html|archive-date=10 December 2010|archive-url=https://web.archive.org/web/20101210132014/http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-05/pachaikili-muthucharam-review.html|url-status=live}}</ref><ref name="pkmcsif">{{cite web|year=2007|title=Pachaikili Muthucharam|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://www.sify.com/movies/pachaikili-muthucharam-review-tamil-14389723.html|archive-date=9 March 2014|archive-url=https://web.archive.org/web/20140309075447/http://www.sify.com/movies/pachaikili-muthucharam-review-tamil-14389723.html|url-status=live}}</ref> எனினும் தயாரிப்பாளர் வேணு ரவிச்சந்திரனுக்கு இத்திரைப்படம் வணிக ரீதியாக தோல்விப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் தோல்வியைப் பற்றிக் கூறும்போது கௌதம், சரத் குமார் "இத்திரைப்படத்திற்கு சரியான தேர்வாக அமையவில்லை" என்றார். கதையை தன் இமேஜுக்கு சரியாக பொருத்துவதற்காக கதையை சரத் குமார் மாற்றியதாக கூறினார். மேலும் தன் தந்தையின் உடல்நலக்குறைவு, திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் இறந்தது ஆகியவை தனக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக கௌதம் கூறினார்.<ref name="gvm2"/> 2007 ஆம் ஆண்டின் நடுவில் [[திரிசா]] மற்றும் புதுமுகங்களை வைத்து ''சென்னையில் ஒரு மழைக்காலம்'' என்கிற இளம் வயதினரை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கான வேலைகளை தான் ஆரம்பித்துள்ளதாக கௌதம் கூறினார். சென்னையின் வளர்ந்து வரும் ஐ.டி. துறையை பின்புலமாக கொண்டு இத்திரைப்படம் அமைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 30 நாட்களுக்கு தொடர்ந்த படப்பிடிப்பு தாமதமாகி பிறகு நிறுத்தப்பட்டது.<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/chennai-set-for-the-rains/article2292725.ece|title=Chennai set for the rains!|work=The Hindu|access-date=6 September 2015|archive-date=4 February 2014|archive-url=https://web.archive.org/web/20140204005332/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/chennai-set-for-the-rains/article2292725.ece|url-status=live}}</ref> 2011 ஆம் ஆண்டு, நடிகர்களுக்கு "பயிற்சி தேவை" என்று தான் கருதியதால் இத்திரைப்படம் நிறுத்தப்பட்டதாகக் கௌதம் கூறினார். பிற்காலத்தில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/new-videos/videos-q1-09/director-interview/gautham-menon.html|title=Gautham Vasudev Menon - Tamil Cinema Director Interview - Gautham Vasudev Menon - Nadunisi Naaygal - Simbhu - Kamal - Ajith - Suriya - Behindwoods.com|work=behindwoods.com|access-date=6 September 2015|archive-date=23 September 2015|archive-url=https://web.archive.org/web/20150923213411/http://www.behindwoods.com/new-videos/videos-q1-09/director-interview/gautham-menon.html|url-status=live}}</ref><ref name="aymhindu">{{cite news|author=Menon, Vishal|year=2016|title=I don't mind being called elitist: Gautham Menon|work=[[தி இந்து]]|accessdate=2016-11-18|url=http://www.thehindu.com/features/cinema/gautham-menon-prefers-to-start-filming-with-incomplete-scripts/article9338692.ece?secpage=true&secname=entertainment|location=Chennai, India}}</ref>
 
கௌதம் தன் அடுத்த படமான ''[[வாரணம் ஆயிரம் (திரைப்படம்)|வாரணம் ஆயிரத்தில்]]'' (2008) மீண்டும் [[சூர்யா (நடிகர்)|சூர்யாவுடன்]] இணைந்தார். இத்திரைப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரங்களில் நடித்தார். ஒரு தந்தை தன் மகன் வாழ்வில் எவ்வாறு ஒரு கதாநாயகன் மற்றும் உத்வேகமாக திகழ்கிறார் என்ற கருவை இத்திரைப்படம் விளக்கியது. 2007 ஆம் ஆண்டு இறந்த தன் தந்தைக்கு இத்திரைப்படத்தை அர்ப்பணிப்பதாக கௌதம் கூறினார்.<ref name="vabwdint">{{cite web|year=2008|title=Rahman has given me six fantastic songs|publisher=Behindwoods|accessdate=2011-04-28|url=http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon.html|archive-date=23 November 2010|archive-url=https://web.archive.org/web/20101123154104/http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon.html|url-status=live}}</ref> இத்திரைப்படம் 2003இல் ஆரம்பிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு ''சென்னையில் ஒரு மழைக்காலம்'' என்று பெயரிடப்பட்டிருந்தது. தங்களது முந்தைய திரைப்படமான ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்கவுக்கு]]'' பிறகு இத்திரைப்படத்தை ஒரு காதல் திரைப்படமாக சூர்யாவை வைத்து எடுக்க கௌதம் திட்டமிட்டிருந்தார்.<ref name="comksify">{{cite web|year=2004|title=Gautham Menon's romantic tale|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://tfmpage.com/forum/archives/3905.17808.23.53.06.html|archive-date=19 July 2011|archive-url=https://web.archive.org/web/20110719090411/http://tfmpage.com/forum/archives/3905.17808.23.53.06.html|url-status=live}}</ref> [[அபிராமி (நடிகை)|அபிராமி]] இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் உயரம் காரணமாக படத்தில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு அந்நேரத்தில் புதுமுக நடிகையான [[அசின் (நடிகை)|அசின்]] இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல்கட்ட படப்பிடிப்பு [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தில்]] 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சூர்யா மற்றும் அசின் நடித்த காதல் காட்சிகள் பத்து நாட்களுக்கு படம்பிடிக்கப்பட்டன.<ref name="comksify"/> இறுதியில் இத்திரைப்படம் நிறுத்தப்பட்டது. பிறகு [[ரம்யா]], சிம்ரன் மற்றும் [[சமீரா ரெட்டி]] ஆகியோரை வைத்து மீண்டும் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளரானார். படத்தின் தலைப்பை மாற்றினார். கௌதம் இத்திரைப்படத்தின் கதையில் 70% தன் சொந்த வாழ்க்கையை பற்றியது என்று கூறினார்.<ref name="gvm2"/> திரைப்படத்தை உருவாக்கும்போது கௌதம் தன் இறந்த தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரைக்கதையில் குடும்பம் பற்றிய பகுதிகளை சேர்த்தார். சூர்யா இத்திரைப்படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக கடினமாக உழைத்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பானது சுமார் இரு வருடங்களுக்கு நீடித்தது.<ref name="vabwdint"/> இத்திரைப்படம் வெளியான பிறகு நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. தரமான படம் என பாராட்டப்பட்டது.<ref name="vared">{{cite web|author=Srinivasan, Pavithra|year=2008|title=It's Surya all the way|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-04-28|url=http://www.rediff.com/movies/2008/nov/14its-surya-all-the-way.htm|archive-date=19 June 2011|archive-url=https://web.archive.org/web/20110619035227/http://www.rediff.com/movies/2008/nov/14its-surya-all-the-way.htm|url-status=live}}</ref> 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 22 கோடி ரூபாய் வசூல் செய்தது.<ref name="vabwdint"/> கௌதமின் திரைப்படங்களிலேயே அதிக பாராட்டுக்களை பெற்றது இத்திரைப்படம் தான். 5 [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகள்]], 9 [[விஜய் விருதுகள்]] மற்றும் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] ஆகியவற்றை 2008 ஆம் ஆண்டு இப்படம் பெற்றது. இத்திரைப்படம் வெளியான பிறகு கௌதமுக்கு தன் ஆஸ்தான இசையமைப்பாளரான [[ஹாரிஸ் ஜயராஜ்|ஹாரிஸ் ஜயராஜுடன்]] கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் இனி இணைந்து பணியாற்றப் போவதில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் 2015 ஆம் ஆண்டு இருவரும் மீண்டும் ''என்னை அறிந்தால்'' திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/end-of-an-era-harris-and-goutham-to-work-together-no-more-tamil-news-42982.html|title=End of an era Harris and Goutham to work together no more|work=indiaglitz.com|access-date=6 September 2015|archive-date=24 September 2015|archive-url=https://web.archive.org/web/20150924171334/http://www.indiaglitz.com/end-of-an-era-harris-and-goutham-to-work-together-no-more-tamil-news-42982.html|url-status=live}}</ref> 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ''வாரணம் ஆயிரம்'' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ''சுராங்கனி'' என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தை [[அஜித் குமார்]] மற்றும் [[சமீரா ரெட்டி]] நடிப்பில் இயக்க [[சிவாஜி புரொடக்சன்சு|சிவாஜி புரொடக்சன்ஸுடன்]] கௌதம் ஒப்பந்தம் செய்தார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/ajit-gautham-come-together-in-surangani-news-tamil-kkfsQxfdjjfsi.html|title=Ajit & Gautham come together in Surangani|work=Sify|access-date=6 September 2015|archive-date=24 September 2015|archive-url=https://web.archive.org/web/20150924135412/http://www.sify.com/movies/ajit-gautham-come-together-in-surangani-news-tamil-kkfsQxfdjjfsi.html|url-status=live}}</ref> எனினும் திரைக்கதையை அமைக்க போதிய நேரம் வழங்காததால் கௌதம் இத்திரைப்படத்திலிருந்து விலகினார்.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon-2.html|title=Director Gautham Vasudev Menon - Interview - Behindwoods.com - Vaaranam Aayiram Kakka Kakka Pachaikili Muthucharam Minnale Suriya Kamal Haasan Kamal Hassan images Tamil picture gallery images|work=behindwoods.com|access-date=6 September 2015|archive-date=17 September 2015|archive-url=https://web.archive.org/web/20150917082039/http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon-2.html|url-status=live}}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது