கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
கௌதம் தன் அடுத்த படமான ''[[வாரணம் ஆயிரம் (திரைப்படம்)|வாரணம் ஆயிரத்தில்]]'' (2008) மீண்டும் [[சூர்யா (நடிகர்)|சூர்யாவுடன்]] இணைந்தார். இத்திரைப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரங்களில் நடித்தார். ஒரு தந்தை தன் மகன் வாழ்வில் எவ்வாறு ஒரு கதாநாயகன் மற்றும் உத்வேகமாக திகழ்கிறார் என்ற கருவை இத்திரைப்படம் விளக்கியது. 2007 ஆம் ஆண்டு இறந்த தன் தந்தைக்கு இத்திரைப்படத்தை அர்ப்பணிப்பதாக கௌதம் கூறினார்.<ref name="vabwdint">{{cite web|year=2008|title=Rahman has given me six fantastic songs|publisher=Behindwoods|accessdate=2011-04-28|url=http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon.html|archive-date=23 November 2010|archive-url=https://web.archive.org/web/20101123154104/http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon.html|url-status=live}}</ref> இத்திரைப்படம் 2003இல் ஆரம்பிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு ''சென்னையில் ஒரு மழைக்காலம்'' என்று பெயரிடப்பட்டிருந்தது. தங்களது முந்தைய திரைப்படமான ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்கவுக்கு]]'' பிறகு இத்திரைப்படத்தை ஒரு காதல் திரைப்படமாக சூர்யாவை வைத்து எடுக்க கௌதம் திட்டமிட்டிருந்தார்.<ref name="comksify">{{cite web|year=2004|title=Gautham Menon's romantic tale|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://tfmpage.com/forum/archives/3905.17808.23.53.06.html|archive-date=19 July 2011|archive-url=https://web.archive.org/web/20110719090411/http://tfmpage.com/forum/archives/3905.17808.23.53.06.html|url-status=live}}</ref> [[அபிராமி (நடிகை)|அபிராமி]] இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் உயரம் காரணமாக படத்தில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு அந்நேரத்தில் புதுமுக நடிகையான [[அசின் (நடிகை)|அசின்]] இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல்கட்ட படப்பிடிப்பு [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தில்]] 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சூர்யா மற்றும் அசின் நடித்த காதல் காட்சிகள் பத்து நாட்களுக்கு படம்பிடிக்கப்பட்டன.<ref name="comksify"/> இறுதியில் இத்திரைப்படம் நிறுத்தப்பட்டது. பிறகு [[ரம்யா]], சிம்ரன் மற்றும் [[சமீரா ரெட்டி]] ஆகியோரை வைத்து மீண்டும் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளரானார். படத்தின் தலைப்பை மாற்றினார். கௌதம் இத்திரைப்படத்தின் கதையில் 70% தன் சொந்த வாழ்க்கையை பற்றியது என்று கூறினார்.<ref name="gvm2"/> திரைப்படத்தை உருவாக்கும்போது கௌதம் தன் இறந்த தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரைக்கதையில் குடும்பம் பற்றிய பகுதிகளை சேர்த்தார். சூர்யா இத்திரைப்படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக கடினமாக உழைத்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பானது சுமார் இரு வருடங்களுக்கு நீடித்தது.<ref name="vabwdint"/> இத்திரைப்படம் வெளியான பிறகு நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. தரமான படம் என பாராட்டப்பட்டது.<ref name="vared">{{cite web|author=Srinivasan, Pavithra|year=2008|title=It's Surya all the way|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-04-28|url=http://www.rediff.com/movies/2008/nov/14its-surya-all-the-way.htm|archive-date=19 June 2011|archive-url=https://web.archive.org/web/20110619035227/http://www.rediff.com/movies/2008/nov/14its-surya-all-the-way.htm|url-status=live}}</ref> 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 22 கோடி ரூபாய் வசூல் செய்தது.<ref name="vabwdint"/> கௌதமின் திரைப்படங்களிலேயே அதிக பாராட்டுக்களை பெற்றது இத்திரைப்படம் தான். 5 [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகள்]], 9 [[விஜய் விருதுகள்]] மற்றும் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] ஆகியவற்றை 2008 ஆம் ஆண்டு இப்படம் பெற்றது. இத்திரைப்படம் வெளியான பிறகு கௌதமுக்கு தன் ஆஸ்தான இசையமைப்பாளரான [[ஹாரிஸ் ஜயராஜ்|ஹாரிஸ் ஜயராஜுடன்]] கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் இனி இணைந்து பணியாற்றப் போவதில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் 2015 ஆம் ஆண்டு இருவரும் மீண்டும் ''என்னை அறிந்தால்'' திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/end-of-an-era-harris-and-goutham-to-work-together-no-more-tamil-news-42982.html|title=End of an era Harris and Goutham to work together no more|work=indiaglitz.com|access-date=6 September 2015|archive-date=24 September 2015|archive-url=https://web.archive.org/web/20150924171334/http://www.indiaglitz.com/end-of-an-era-harris-and-goutham-to-work-together-no-more-tamil-news-42982.html|url-status=live}}</ref> 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ''வாரணம் ஆயிரம்'' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ''சுராங்கனி'' என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தை [[அஜித் குமார்]] மற்றும் [[சமீரா ரெட்டி]] நடிப்பில் இயக்க [[சிவாஜி புரொடக்சன்சு|சிவாஜி புரொடக்சன்ஸுடன்]] கௌதம் ஒப்பந்தம் செய்தார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/ajit-gautham-come-together-in-surangani-news-tamil-kkfsQxfdjjfsi.html|title=Ajit & Gautham come together in Surangani|work=Sify|access-date=6 September 2015|archive-date=24 September 2015|archive-url=https://web.archive.org/web/20150924135412/http://www.sify.com/movies/ajit-gautham-come-together-in-surangani-news-tamil-kkfsQxfdjjfsi.html|url-status=live}}</ref> எனினும் திரைக்கதையை அமைக்க போதிய நேரம் வழங்காததால் கௌதம் இத்திரைப்படத்திலிருந்து விலகினார்.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon-2.html|title=Director Gautham Vasudev Menon - Interview - Behindwoods.com - Vaaranam Aayiram Kakka Kakka Pachaikili Muthucharam Minnale Suriya Kamal Haasan Kamal Hassan images Tamil picture gallery images|work=behindwoods.com|access-date=6 September 2015|archive-date=17 September 2015|archive-url=https://web.archive.org/web/20150917082039/http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon-2.html|url-status=live}}</ref>
 
===காதல் திரைப்படங்கள் மற்றும் சோதனை முயற்சி, 2010–2014===
 
ஒன்பது வருடங்களுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு ''[[விண்ணைத்தாண்டி வருவாயா]]'' திரைப்படத்தின் மூலம் மீண்டும் காதல் வகை திரைப்படங்களை கௌதம் இயக்க ஆரம்பித்தார். இத்திரைப்படத்தில் [[சிலம்பரசன்]] மற்றும் [[திரிசா]] ஆகியோர் இணைந்து நடித்தனர்.<ref name="minnalereturn">{{cite news|author=Aishwarya, S|year=2009|title=Gautam Menon now eyes the skies lovely with love|work=[[தி இந்து]]|accessdate=2009-02-26|url=http://www.hindu.com/2009/03/03/stories/2009030357580200.htm|location=Chennai, India|archive-date=17 September 2011|archive-url=https://web.archive.org/web/20110917032203/http://www.hindu.com/2009/03/03/stories/2009030357580200.htm|url-status=live}}</ref> முதலில் இத்திரைப்படத்தை [[மகேஷ் பாபு]]வை கதாநாயகனாக வைத்து ''ஜெஸ்ஸி'' என்ற பெயரில் இயக்க கௌதம் முடிவு செய்தார். ஆனால் அவர் மறுத்ததால் தமிழ் பதிப்பை முதலில் உருவாக்க முடிவு செய்தார். கார்த்திக் என்ற ஒரு இந்து தமிழ் இணை இயக்குநர் மற்றும் ஜெஸ்ஸி என்ற ஒரு சிரியக் கிறித்தவ மலையாளி பெண் ஆகியோருக்கு இடைப்பட்ட சிக்கலான உறவை இத்திரைப்படம் ஆராய்ந்தது. அவர்களின் உணர்வுகளை விளக்கியது. இத்திரைப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்தார். கௌதமுடன் முதன்முறையாக இணைந்து பணியற்றினார். தொழில்நுட்ப குழுவின் ஒரு பகுதியாக ஒளிப்பதிவாளர் [[மனோஜ் பரமஹம்சா]] பணியாற்றினார். "ஒரு புதுமுகத்துடன் ஒரு வாரத்தில் இத்திரைப்படத்தை ஆரம்பிக்க" இருந்தபோது தயாரிப்பாளர் பரிந்துரையின் பேரில் கௌதம் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்தார். சிலம்பரசனின் முந்தைய படங்களால் தான் பெரிதாக ஈர்க்கப்படவில்லை என கௌதம் தெரிவித்தார்.<ref name="gvm3"/> இத்திரைப்படம் சுமார் ஒரு வருடத்திற்கு தயாரிப்பில் இருந்தது. பிரபலமான இந்திய காதல் திரைப்படங்களில் இத்திரைப்படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருப்பதுபோல் வைத்து விளம்பர சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.<ref name="vtv">{{cite web|author=Moviebuzz|year=2009|title=Vinnaithandi Varuvaaya- Gautham-Simbu film?|publisher=[[சிஃபி]]|accessdate=2009-02-09|url=http://sify.com/movies/fullstory.php?id=14853556&cid=2363|archive-date=16 April 2009|archive-url=https://web.archive.org/web/20090416141137/http://sify.com/movies/fullstory.php?id=14853556&cid=2363|url-status=live}}</ref> இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர், இந்தியாவிற்கு வெளியில் இசை வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாக இது அமைந்தது. இத்திரைப்படத்தின் இசை லண்டனில் உள்ள பாஃப்டாவில் வெளியிடப்பட்டது.<ref name="abroadmusic">{{cite web|year=2009|title=Silambarasan, Trisha, Gautam & Rahman in London!|publisher=Behindwoods|accessdate=2009-12-21|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-09-04/silambarasan-trisha-vinnaithaandi-varuvaaya-21-12-09.html|archive-date=3 April 2010|archive-url=https://web.archive.org/web/20100403075655/http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-09-04/silambarasan-trisha-vinnaithaandi-varuvaaya-21-12-09.html|url-status=dead}}</ref> வெளியிடப்பட்டபோது இத்திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.<ref name="rediffreview">{{cite web|author=Srinivasan, Pavithra|year=2010|title=Vinnaithaandi Varuvaayaa is a must watch|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2010-02-26|url=http://movies.rediff.com/report/2010/feb/26/review-vinnaithaandi-varuvaayaa.htm|archive-date=5 February 2011|archive-url=https://web.archive.org/web/20110205212410/http://movies.rediff.com/report/2010/feb/26/review-vinnaithaandi-varuvaayaa.htm|url-status=live}}</ref><ref name="sifyreview">{{cite web|publisher=[[சிஃபி]]|title=Vinnaithaandi Varuvaaya review|accessdate=2010-02-26|url=http://sify.com/movies/tamil/review.php?id=14933091&ctid=5&cid=2429|archive-url=https://web.archive.org/web/20100301054918/http://sify.com/movies/tamil/review.php?id=14933091&ctid=5&cid=2429|archive-date=1 March 2010|url-status=dead}}</ref> விமர்சகர்கள் "தற்போதைய நகர்ப்புற இளம் வயதினரின் நாடித்துடிப்பை கௌதம் நன்றாக அறிந்து வைத்திருப்பதாகவும்" மற்றும் "நம் மனங்களில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் திரைப்படத்தை வடிவமைத்திருப்பதாகவும்" எழுதினர்.<ref name="sifyreview"/> தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட பிறகு தெலுங்கு பதிப்பான ''ஏ மாய செசவே'' (2010) திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி இரு படங்களையும் வெளியிட்டனர். தெலுங்கில் [[நாக சைதன்யா]] மற்றும் புதுமுகமான [[சமந்தா அக்கினேனி|சமந்தா]] ஆகியோர் நடித்தனர். தமிழ் படத்தை போலவே தெலுங்கு படமும் வணிக மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.<ref name="sifyreview"/><ref name=autogenerated1>{{cite web|author=Moviebuzz|year=2010|title=Ye Maaya Chesave|publisher=[[சிஃபி]]|accessdate=2010-02-26|url=http://sify.com/movies/telugu/review.php?id=14933284&ctid=5&cid=2430|archive-date=11 August 2011|archive-url=https://web.archive.org/web/20110811153931/http://www.sify.com/movies/telugu/review.php?id=14933284&ctid=5&cid=2430|url-status=live}}</ref><ref name="idlereview">{{cite web|author=Jeevi|year=2010|title=Ye Maya Chesave|publisher=Idlebrain|accessdate=2010-02-26|url=http://www.idlebrain.com/movie/archive/mr-yemayachesave.html|archive-date=18 September 2018|archive-url=https://web.archive.org/web/20180918025140/http://www.idlebrain.com/movie/archive/mr-yemayachesave.html|url-status=live}}</ref> 2016 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் ஒரு பகுதியாக ''ஒன்றாக'' என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படத்தின் கதையை தான் எழுதி வைத்துள்ளதாக கௌதம் கூறினார். முந்தைய படத்தின் கதைக்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதுபோல் கதை அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.<ref name="aymhindu"/>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது