"அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,162 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
 
புள்ளி அளவீட்டை பயன்முறையில் சட்டகத்தின் பிற பகுதிகளால் பாதிக்கப்படுவதில்லை. இது பொதுவாக மிக உயர்ந்த மாறுபட்ட காட்சிகளை படமாக்க பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, பின்னிணைந்த சூழ்நிலையில், ஒரு நபரின் பின்னால் உதயமாக கூடிய சூரியன் இருக்கலாம், அதன் மூலம் அவர் முகம் உடல் மற்றும் மயிரிழையைச் சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்தில் இருண்டதாக இருக்கும். மயிரிழையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான ஒளியின் வெளிப்பாட்டை சரிசெய்வதற்குப் பதிலாக, நபரின் முகத்திலிருந்து பிரதிபலிக்கும் ஒளியை, ஒளிப்பட கருவியின் புள்ளி அளவீட்டு பயன்முறையில் மிகச்சரியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாடு]] கிடைக்கும். முகம் சரியாக வெளிப்படுவதால், பின்புறம் மற்றும் மயிரிழையைச் சுற்றியுள்ள பகுதி அதிக பிரகாசமாக வெளிப்படும். பல சந்தர்ப்பங்களில், புள்ளி அளவி காட்சியின் ஒரு பகுதியின் ஒளி அளவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காண்பிக்கும், இதனால் கவனமாக புள்ளியை சரியாக [[காட்சிகாணி]]யில் கவனித்து காட்சியை பதிவு செய்ய வேண்டும்.<ref>{{cite web|author= |url=https://www.photopills.com/articles/exposure-photography-guide-2 |title=12Your camera’s light metering modes (ஆங்கிலம்) |publisher=By Antoni Cladera/.photopills.com |date=© 2020 |accessdate=29 11 2020}}</ref>
 
புள்ளி அளவி பயன்பாட்டில் மற்றொரு எடுத்துக்காட்டு, சந்திரனை புகைப்படம் எடுப்பது. பிற அளவீட்டு முறையில் இருண்ட வானப் பகுதியை ஒளிரச் செய்யும் முயற்சியில் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை அதிகரிக்கும், இதன் விளைவாக சந்திரனின் அதிகப்படியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாடு]] ஏற்படுத்தும். புள்ளி அளவீட்டில் நிலவின் சரியான வெளிப்பாட்டைக் கொடுக்கிறது, மற்றும் ஏற்கனவே இருட்டாக இருக்கக்கூடிய மீதமுள்ள காட்சியை குறைத்து மதிப்பிட்டு குறைந்த வெளிபாடுடைய அப்பகுதியை நிராகரிக்கிறது. திரையரங்கு புகைப்படம் எடுப்பதற்கும் இந்த வகை அளவியை பயன்படுத்தப்படலாம், அங்கு பிரகாசமான ஒளிரும் நடிகர்கள் மற்றும் இருண்ட அரங்கம் என இருவேறு சூழ்நிலை உள்ளது. புள்ளி அளவி என்பது மண்டல அமைப்பு சார்ந்துள்ள ஒரு முறையாகும்.<ref>{{cite web|author= |url=https://casualphotophile.com/2019/06/24/mastering-zone-system-metering/ |title=Mastering the Zone System – Part 1: Zone System Metering (ஆங்கிலம்) |publisher=By casualphotophile |date=© 2014-2020 |accessdate=30 11 2020}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3067333" இருந்து மீள்விக்கப்பட்டது