"சிங்க மனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
 
==உருவாக்கம்==
வன்மையான மாமூத்து தந்தத்திலிருந்து உருவொன்றைச் செதுக்குதல் என்பது சிக்கலான மற்றும் நேரவிரயத்தை ஏற்படுத்தும் செயலாக இருக்கக்கூடும்..{{efn|இம் மேற்கோள்:<ref>{{cite web |url=http://donsmaps.com/images29/lioncarvinginsitu.jpg |title=Image showing the positioning of the lion-man figurine within the original tusk}}</ref> மூலத் தந்தத்தின் உள்ளே உருவின் நிலையைக் காட்டுகின்றது. உருவின் கவட்டுப் பகுதி தந்தத்தின் பற்கூழ்க் குழியின் உச்சியுடன் பொருந்துகிறது. உருவின் நெடுக்கு வெட்டு அச்சு நரம்புத் தடத்தின் வழியே செல்வதோடு, தலை அதன் குறுகிய முடிவிடத்தில் காணப்படுகிறது. இவ்வாறான சிறப்பான நிலைகுறிப்பு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு வேலைக்காக தந்தத்தின் ஒரு பகுதியை இதன் உருவாக்குனர் தேர்ந்தெடுத்திருக்கலாம் எனும் கருத்தைத் தருகிறது. (கூக், 2013)<ref name=cook/>}} இதே குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரே அளவுடைய இன்னொரு தந்தத்தில், மேற் தாடையின் பற்குழியைச் சுற்றியுள்ள தோல் மற்றும் மெல்லிய எலும்பு என்பன பல்லின் மேற்பரப்பினூடாக வெட்டியெடுக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் உள்ளன. இப்பகுதி சுத்தியலால் அடிக்கப்பட்டிருக்கக் கூடும். இதன் முனை மிகவும் கடினமானதாயிருந்துள்ளது. எனவே, இது ஆப்பிறுக்கிப் பிளப்பதன் மூலம் வேறாக்கப்படவேண்டியிருந்தது.<ref name=cook/>
 
வுல்ஃப் எயின் மற்றும் குர்ட் வேர்பேர்கர் ஆகியோர், அக்காலப்பகுதியில் காணப்பட்ட கற்கருவிகளின் மூலம் சிங்க மனித உருவின் பிரதியாக்கத்தை ஆய்வு நோக்கில் உருவாக்கினர். தந்தத்தின் அடிப்பகுதியை அகற்ற பத்து மணிநேரம் பிடித்தது. கூர் நுனியுடனான சுரண்டியினால் உடல் செதுக்கப்பட்டது. இம் முயற்சியின் போது கல் உளிகள் அடிக்கடி தீட்டப்படவேண்டியிருந்தன. கையின் உட்புறத்தை உடற் பகுதியிலிருந்து வேறுபடுத்தும் செயற்பாட்டின்போது பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படவேண்டியிருந்தன. தலை மற்றும் தோள்களைச் சீராக்கும் முயற்சியின் போது, தந்தத்தின் முத்துக்கள் வெட்டிச் செதுக்கப்படவேண்டியிருந்தன. பெரும்பாலும், இதற்காக இரண்டு கைகளும் பயன்படுத்தப்படவேண்டியிருந்தது. உருவுக்கான அடிப்படைச் செதுக்கல்களுக்கு 200 மணித்தியாலங்கள் பிடித்ததோடு, முழுமையான மீளுருவாக்கத்துக்கு 370 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் தேவைப்பட்டது.{{efn|உல்ம் அருங்காட்சியக வலைத்தளத்தில் 360 மணித்தியாலங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூக் (2013)<ref name=cook/> 320 மணித்தியாலங்கள் எனக் கூறுகின்றார். எனினும், அருங்காட்சியகக் குழுவினரால் உருவாக்கப்பட்ட காணொலியில் 370+ மணித்தியாலங்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.}} பிரித்தானிய அருங்காட்சியகத்தின் பழங்கற்காலச் சேகரிப்புகளின் காப்பாளரான சில் கூக் குறிப்பிடுகையில், இவ்வுரு மெதுவான கதியில், பலமாதங்களாக குறிப்பிட்ட வேளைகளில் மாத்திரம் செதுக்கப்பட்டிருக்கக் கூடும். அல்லது, திறமை வாய்ந்த கலைஞர் ஒருவர், ஏனைய வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இவ்வுருவை மாத்திரம் செதுக்குவதற்காக அமர்த்தப்பட்டிருக்கவேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.<ref name=cook>{{cite book |author=Cook, J. |title=Ice Age art: Arrival of the modern mind |publisher=The British Museum |date=18 February 2013 |isbn=978-0714123332}}</ref>
அக்டோபர் 2017 பிபிசி ரேடியோ 4 இன் ''லிவிங் வித் த கோட்சு'' தொடரில், நீல் மக்கிரகர் கூக்கிடம் <blockquote>"...&nbsp;தற்சார்பில் வாழுகின்ற, உணவு தேடல், நெருப்பை காத்துத் தக்கவைத்தல், கொடிய விலங்குகளிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், போன்ற இன்றியமையாத தேவைகளையுடைய ஒரு சமூகம் ஏன் ஒரு குறிப்பிட்ட நபரை இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலகி வேறோர் செயற்பாட்டில் நேரம் செலவழிக்க அனுமதிக்க வேண்டும்?"<ref name="BBC Living With The Gods"/></blockquote> என வினவினார்.
 
அவர் அதற்கு மறுமொழியாக <blockquote> "...&nbsp;காட்சிக்குப் புலப்படாத, இயற்கையின் இன்றியமையாத ஆற்றலுடனான ஒரு தொடர்பாகதொடர்பு பற்றியதாக இருக்ககூடும். பெரும்பாலும், நீங்கள் உங்களுடைய வாழ்வை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள அவ்வாற்றலை அமைதிப்படுத்தவோ அல்லது அதனுடன் தொடர்பு கொள்ளவோ வேண்டியிருக்கலாம்".<ref name="BBC Living With The Gods">{{cite episode |title=The Beginnings of Belief |series=Living with the Gods |credits=Presenter: [[Neil MacGregor]]; Producer: Paul Kobrak |network=BBC |station=[[BBC Radio 4]] |url=http://www.bbc.co.uk/programmes/b099xhmj |minutes=06:08 |air-date=23 October 2017 |access-date=23 October 2017 }}</ref></blockquote> என்று கருத்துத் தெரிவித்தார்.
 
==மேலும் பார்க்க==
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3067962" இருந்து மீள்விக்கப்பட்டது