சிங்க மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சி Prash பக்கம் பயனர்:Prash/சிங்க மனிதன் என்பதை சிங்க மனிதன் என்பதற்கு நகர்த்தினார்: மொழிபெயர்ப்பு முடிவு
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
→‎சிங்க மனிதன்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 6:
'''{{lang|de|லோவென்மென்சு}} உரு''' அல்லது '''{{lang|de|ஓலென்சுடீன்-இசுட்டேடல்|italic=no}}இன் சிங்க மனிதன்''' என்பது செருமனியின் ஓலென்சுடீன்-இசுட்டேடல் குகையில் 1939ல் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப்பகுதிக்குரிய தந்தத்தாலான ஒரு சிற்பமாகும். செருமனியில் கண்டெடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டமையினால், இது பெரும்பாலும் செருமானிய மொழியிலான {{lang|de|லோவென்மென்சு}} எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டது.
 
சிங்கத்தலையுடனான இவ்வுருவே, உலகின் மிகவும் பழைமையான விலங்குருவும், உருவமைப்புக் கலைக்கான பழைமையான எடுத்துடுக்காட்டுக்களில்எடுத்துக்காட்டுக்களில் ஒன்றுமாகும். இவ்வுரு கண்டெடுக்கப்பட்ட மண்ணடுக்கின் காபன் திகதியிடல் மூலமான காலக்கணிப்பின் மூலம், இது 35000இலிருந்து 40000 ஆண்டுகள் பழைமையானதெனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இவ்வுரு மேல் பழங்கற்காலத்துக்குரிய ஓரிகுனேசியப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.<ref>[http://www.loewenmensch.de/figur_3.html 14C dating - The age of the lion man] Ulm Museum (in German)</ref> இது தீக்கற் கத்தியைப் பயன்படுத்தி மாமூத்து தந்தத்தைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இடது மேற்கையில், ஏழு சமாந்தர, குறுக்குவாட்டிலான குடையப்பட்ட புடைப்புகள் காணப்படுகின்றன.
 
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துண்டுகளை இணைத்து பல்வேறு முறை மீள்கட்டமைக்கப்பட்ட பின்பு, இவ்வுருவின் உயரம் {{convert|31.1|cm|in|1|abbr=on}} ஆகவும், அகலம் {{convert|5.6|cm|in|1|abbr=on}} ஆகவும், தடிப்பு {{convert|5.9|cm|in|1|abbr=on}} ஆகவும் உள்ளது. இது தற்போது செருமனியின் உல்ம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிங்க_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது