தியனைரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
=== ஹெராக்கிள்ஸின் மரணம் ===
தியனைரா பற்றிய ஒரு கதையில், தியனைராவை ஹெராக்கிள்ஸ் அழைத்துக்கொண்டு செல்லும்போது வழியில் குறுக்கிட்ட ஆறின்ஆற்றின் பெருவெள்ளத்தை இவளோடு எப்படி கடப்பது என்று சிந்தித்தபடி இருந்தான். அப்போது அங்குவந்த நெசஸ் என்ற குதிரை மனிதன் தான் தியனைராவை தன் முதுகில் சுமந்து யூனோஸ் ஆற்றின் அக்கரையில் கொண்டு சேர்ப்பதாகக் கூறி இவளை அழைத்துச் சென்று, இவளை கடத்தவோ அல்லது கற்பழிக்கவோ முயன்றான். ஆனால் நீந்திவந்த ஹெராக்கிள்ஸ் குதிரை மனிதனை விஷ அம்பால் வீழ்த்தி இவளை மீட்டார். குதிரை மனிதனான நெசஸ் இறக்கும் தறுவாயில் விஷம் கலந்த தன் உதிரத்தில் தோய்த்த ஒரு மருந்தைத் தியமைனராவிடம் கொடுத்து, அகதை ஹெர்க்குலிஸின் ஆடையில் தடவி, அவ்வாடையை அவன் அணிந்து கொள்ளும்படி செய்தால், அவளிடம் அவனுடைய அன்பு நிலைத் திருக்குமென்று கூறிவிட்டு, உயிர் துறந்தான்.
 
தியானைரா அவன் பேச்சை நம்பி, அதை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டாள். ஹெராக்கிள்ஸ் கிரீசில் முறைகேடாக பல குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் அயோலைக் என்பவளைக் காதலித்தார். தனது கணவர் தன்னை விட்டு நீங்கிவிடுவார் என்று தியானைரா அஞ்சியபோது, ஹெராக்கிள்ஸின் புகழ்பெற்ற [[நீமியன் சிங்கம்|சிங்கத்தோல் சட்டையில்]] அந்த இரத்தத்தைக் கொஞ்சம் பூசினாள். ஹெராக்கிள்ஸின் வேலைக்காரன் லிச்சாஸ் அவருக்கு சட்டை கொண்டு வந்து தரப்பட்டது. அதை அணிந்த போது குதிரை மனிதனின் நச்சு இரத்தம் ஹெராக்ஸ் உடலில் ஊடுருவி பயங்கரமாக எரித்து துன்புறுத்தியது. இக்கொடுமையைக் தாங்க முடியாமல் இறுதியில், அவர் தானே தகணத் தீயிக்குள் சென்று இறந்தார். தன் கணவனின் சாவுக்கு தானே காரணம் ஆகிவிட்டதை உணர்ந்த விரக்தியில், தியானைரா தூக்குப்போட்டோ அல்லது வாளால் குத்திக்கொண்டோ தற்கொலை செய்து கொண்டாள்.
"https://ta.wikipedia.org/wiki/தியனைரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது