ஈராக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 70:
வடக்கில் [[துருக்கி]]யும் கிழக்கில் [[ஈரான்|ஈரானும்]] தென்கிழக்கில் [[குவைத்]]தும் தெற்கில் [[சவூதி அரேபியா]]வும் தென்மேற்கில் [[ஜோர்தான்|யோர்தானும்]] மேற்கில் [[சிரியா]]வும் இதன் எல்லைகளாக உள்ளன. ஈராக்கிற்கு வடக்கு [[பாரசீக வளைகுடா]]வில் {{convert|58|km|mi|abbr=on}} தொலைவுள்ள குறுகிய கடற்கரை உள்ளது. இங்குள்ள ''உம் காசர்'' என்ற பகுதியில்தான் உலகின் முதல் நாகரிகமான [[சுமேரியா|சுமேரிய நாகரிகம்]] தோன்றியது.
 
ஈராக்கில் பெரும்பான்மையாக [[அராபியர்]]களும் [[குர்து மக்கள்|குர்து மக்களும்]] உள்ளனர். இவர்களைத் தவிர [[அசிரிய மக்கள்|அசிரியர்கள்]], ஈராக்கிய துருக்கியர்கள், சபக்கியர்கள், ஆர்மீனியர்கள், மான்டியர்கள், சர்காசியர்கள், கவுலியாக்கள் சிறுபான்மை இனக்குழுக்களாவர்.<ref>Article 125 of the Iraqi Constitution.http://www.refworld.org/pdfid/454f50804.pdf</ref> நாட்டின் 36 மில்லியன் மக்களில் 95% பேர் [[முஸ்லிம்]]களாவர்; சமயச் சிறுபான்மையினராக [[கிறித்தவம்|கிறித்தவர்கள்]], யர்சானியர்கள், [[யசீதி மக்கள்]] மற்றும் மான்டியர்கள் வாழ்கின்றனர்.
 
டைகிரிசு, யூபிரட்டீசு ஆறுகளுக்கிடையேயான நிலப்பகுதி பொதுவாக [[மெசொப்பொத்தேமியா]] எனப்படுகின்றது; [[கிரேக்க மொழி]]யில் மெசொப்பொத்தேமியா ''ஆற்றுக்கு இடையில் உள்ள நிலப்பகுதி'' யெனப்பொருள்படும். இங்கு உலகின் மிகப் பழமையான நாகரிகம் தோன்றியதாகவும் எழுத்து பிறந்தவிடமாகவும் கருதப்படுகின்றது. [[கிமு 6ஆம் ஆயிரமாண்டு]] முதல் இங்கு அடுத்தடுத்து பல நாகரிகங்கள் தழைத்துள்ளன. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் ஈராக்கு அக்காடிய, சுமேரிய, அசிரிய, பாபிலோனியப் பேரரசுகளின் மையமாக இருந்துள்ளது. மேலும் மீடியன் பேரரசு, அகாமெனீது பேரரசு, செலுக்கட் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சாசனீது பேரரசு, [[உரோமைப் பேரரசு]], [[ராசிதீன் கலீபாக்கள்]], [[உமையா கலீபகம்]], [[அப்பாசியக் கலீபகம்]], மங்கோலியப் பேரரசு, சஃபாவிது பேரரசு, அஃப்சரீது பேரரசு, மற்றும் [[உதுமானியப் பேரரசு|உதுமானியப்]] பேரரசுகளின் அங்கமாக இருந்துள்ளது; [[உலக நாடுகள் சங்கம்]] ஆணைப்படி [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.livescience.com/history/top10_iraq_battles.html |title=Top 10 Battles for the Control of Iraq |publisher=Livescience.com |accessdate=2009-03-23}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது