நார்மெர் கற்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
மன்னர் [[நார்மெர்|நார்மெரின்]] பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் [[கெளிறு]] மீன் மற்றும் [[உளி]] சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.<ref name="Wengrow">[[Wengrow, David]],''[https://books.google.com/books?id=W9OFBw7yGZkC&pg=RA3-PA207 The Archaeology of Ancient Egypt]'' Cambridge University Press, {{ISBN|978-0-521-83586-2}} p.207</ref> மேலும் கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதியில் [[வரலாற்றுக்கு முந்தைய எகிப்து|வரலாற்று காலத்திற்கு முந்தைய எகிப்தியர்கள்]] வழிபட்ட வளைந்த கொம்புடன் கூடிய [[பசு தேவதை (பண்டைய எகிப்து)|பசு தேவதையின்]] சிற்பம் உள்ளது.<ref>Wilkinson, Richard H. ''The Complete Gods and Goddesses of Ancient Egypt'', p.172 Thames & Hudson. 2003. {{ISBN|0-500-05120-8}}</ref>
===கற்பலகையின் முன்பக்க காட்சி===
[[File:Narmer Palette smiting side.jpg|thumb|400px|நார்மெர் கற்பலகையின் முன்பக்கக் காட்சி]]
நார்மெர் கற்பலகையின் மேற்புறத்தின் இரண்டு பக்ககளிலும் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|பண்டைய எகிப்தியக் கடவுளான]] [[பசு தேவதை (பண்டைய எகிப்து)|பசு தேவதையின்]] வளைந்த கொம்புகளுடன் கூடிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு பசு தேவதைகளின் உருவங்களின் நடுவில் மன்னர் [[நார்மெர்|நார்மெரின்]] பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் [[கெளிறு]] மீன் மற்றும் [[உளி]] சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கற்பலகையின் நடுவில் [[மேல் எகிப்து|தெற்கு எகிப்திய]] மன்னர்கள் அணியும் நீண்ட வெள்ளை நிற மகுடமும் மற்றும் வலது கையில் ஆயுதம் தாங்கிய மன்னர் [[நார்மெர்|நார்மெரின்]] உருவம் உள்ளது. நார்மெர் மன்னரின் வலதுபுறத்தில் ஒரு மனிதன் இடது கையில் மன்னரின் காலணிகளும், வலது கையில் நீர்க்குடுவையும் தாங்கியவாறும் ஒரு உருவம் உள்ளது. நார்மெர் மன்னரின் இடதுபுறத்தில் மண்டியிட்ட நிலையில் உள்ள ஒரு கைதியை மன்னர் அடிக்கும் நிலையில் ஒரு சிற்பம் உள்ளது. மனிதனின் தலைக்கு மேல் [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தை]] [[பாபிரஸ்]] காகிதம் செய்யப்படும் 6 நாணல் மலர்களும், [[ஓரசு]] கடவுளைக் குறிக்கும் [[வல்லூறு]] பறவையின் உருவமும் உள்ளது. இதில் [[ஓரசு]] கடவுள் அம்மனிதனின் தலையை தாக்குவதாக உள்ளது. நார்மெர் மன்னரின் காலுக்கு அடியில் நிர்வாண கோலத்தில் இரண்டு மீசையுடைய மனிதர்கள் ஓடும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஓடும் மனிதர்களின் தலைகளுக்கு மேல் இரண்டு படவெழுத்துகள் காணப்படுகிறது. இது நார்மெர் மன்னர் போரில் வென்ற நகரங்களை குறிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/நார்மெர்_கற்பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது