நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
மலையின் மேல்நோக்கிய பயணம் நீலகிரி மலை இரயிலில் சுமார் 290 நிமிடங்கள் (4.8 மணி நேரம்) பிடிக்கிறது. இதே பாதையில் கீழ்நோக்கி வரும் பயணம் 215 நிமிடங்கள் (3.6 மணி நேரம்) ஆகிறது. இது ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு[பாதையாகக் கருதப்படுகிறது. பாதையின் அதிகபட்ச சாய்வு 8.33% ஆகும்.
 
மேட்டுப்பாளையத்திலிருந்து தினமும் காலை 07:10 மணியளவில் புறப்படும் இரயில் பிற்பகலில் 12.00 உதகமண்டலம் சென்றடைகிறது. மாலையில் 14:00 மணிக்கு உதகமண்டலத்தில் புறப்படும் வண்டி மாலை 17:35 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வழியாக சென்னைக்குச் செல்லும் நீலகிரி விரைவு இரயிலுக்கு இணைப்பு கொடுக்கும் விதமாக பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இயக்கப்படும் கோடைகால சிறப்பு வண்டிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.30 மணியளவிலும் உதகமண்டலத்திலிருந்து பிற்பகல் 12:15 மணியளவிலும் புறப்படுகின்றன. குன்னூர் மற்றும் உதகமண்டலம் இடையே, நான்கு தினசரி இரயில்கள் இயக்கப்படுகின்றன.
 
வழக்கமாக இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வது போல நீலகிரி இரயிலில் பயணம் செய்வதற்கும் பயணச்சீட்டுகளை இணைய வழியாக முன்பதிவு செய்ய முடியும் என்றாலும். இன்னமும்கூட பழைய எட்மான்சுடன் முறை பயணச்சீட்டு வழங்கும் முறை இங்கு கடைபிடிக்கப்படுகிறது. உலகப் பாரம்பரியத் தளம் என்ற தகுதியைப் பாதுகாக்கவே இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது. இந்திய இரயில்வே இணையதளம் மூலமாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிபாக கோடை காலத்தில் முன்கூட்டியே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்வது நல்லது,