புதுக்கோட்டை சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி. ....சான்றுகோள்கள் தேவை
No edit summary
வரிசை 5:
[[தமிழகம்|தமிழகத்தை]] ஆண்ட [[மூவேந்தர்]]கள் வரலாற்றுப் பின்னணியிலிருந்து மறைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம், அவர்களின் மேலாண்மைக்குட்பட்ட நாயக்கர் ஆட்சி முறை, இவற்றால் ஏற்பட்ட புதிய சூழ்நிலைகள், ஆகியவற்றின் காரணமாக வட தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு]] பேசும் மக்கள்(கி.பி 15ம் நூற்றாண்டிலிருந்து) தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு அதிக அளவில் குடிபெயரத் தொடங்கினர். அப்படி குடியேறிய இடங்களுள் [[திருச்சி]]க்கு அருகிலுள்ள அன்பில் கிராமம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
இங்கிருந்த ஒரு பிரிவினர் குடிபெயர்ந்து புதுக்கோட்டையில் தற்போது ஆலங்குடியைச்[[ஆலங்குடி]]யைச் சுற்றியுள்ள பிலாவிடுதி, வடுக்கலூர், கல்லாக்கோட்டை, கறம்பக்குடி, நெல்வேலி, நரங்கியம்பட்டு, அம்மணிப்பட்டு, பந்துவாக்கோட்டை, மங்கள் வெள்ளாள விடுதி ஆகிய ஊர்களில் குடியேறினர்{{fact}}. இவர்களுள் கறம்பக்குடியில் குடியேறிய கள்ளர் வகுப்பினர், வீரத்திலும் கடின உழைப்பாலும் சிறந்து விளங்கினர். மேலும் இவர்கள் [[யானை]] பழக்குதல் போன்ற வீரசாகசங்களில் சிறப்புப் பெற்றிருந்தாலும், இப்பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசப் பிரதிநிதிகளின் படைகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்று செல்வாக்கு பெற்றவர்களாக விளங்கினர். இந்தப் பிரிவினரிலிருந்து தோன்றிப் புகழுடன் விளங்கியவர்களே தொண்டைமான் பரம்பரையினர்.
 
இவர்கள் கறம்பக்குடிப் பகுதியில் நாடாள்வோராக இருந்து படிப்படியாக தங்கள் ஆட்சிப்பகுதியை விரிவாக்கி, தற்போது புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்தூர், கந்தர்வக்கோட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கியப் பகுதிகளை, புதுக்கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். அப்போது "பல்லவரையன் சீமை" என்று வழங்கப்பட்ட நாட்டமைப்பில் அடங்கியிருந்த அப்பகுதிகள் பின்னர் [[புதுக்கோட்டை]] மன்னர்களது தனியரசு "புதுக்கோட்டை சமஸ்தானம்" என்று அழைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது