எஸ். பி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
== இசைப்பணி ==
=== 1960கள்–1970கள் ===
[[File:SP Balasubrahmanyam Felicitates KJ Yesudas.jpg|thumb|SP Balasubrahmanyam & Wife felicitated by [[K. J. Yesudas]]]]
பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடகராக முதன் முதலில் 1966 திசம்பர் 15 இல் வெளியான ''சிறீ சிறீ சிறீ மரியாத ராமண்னா'' என்ற [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்குத்]] திரைப்படத்திற்காக எஸ். பி. கோதண்டபாணியின் இசையில் பாடினார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/2011/04/14/stories/2011041452160500.htm |title=Andhra Pradesh / Ongole News : Telugu will thrive forever, says Balu |work=The Hindu |date=14 April 2011 |accessdate=2 May 2011}}</ref><ref name="RLA">{{cite news|url=http://www.hindu.com/2006/08/15/stories/2006081505050400.htm |title=Andhra Pradesh / Hyderabad News : Raja-Lakshmi award for S.P. Balasubrahmanyam |newspaper=The Hindu |date=15 August 2006 |accessdate=12 June 2011}}</ref> இப்பாடல் பதிவான எட்டாம் நாளில் [[கன்னடம்|கன்னடத்தில்]] ''நக்கரே அதே சுவர்க'' என்ற திரைப்படத்திற்காகப் பாடினார்.<ref>{{cite web|url=http://www.deccanherald.com/content/201139/of-soulful-strains.html|title=Of soulful strains|work=Deccan Herald|date=29 October 2011}}</ref> இவரது முதலாவது [[தமிழ்]] பாடல் [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையில் [[எல். ஆர். ஈஸ்வரி]]யுடன் ''ஓட்டல் ரம்பா'' என்ற திரைப்படத்துக்காகப் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" என்பதாகும்.<ref name="பாடும் நிலாவின் முதல் பாடல்">{{cite Web|url= https://m.youtube.com/watch?v=S3K9Z50_QnM|title=பாடும் நிலாவின் முதல் பாடல்}}</ref> ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 1969 இல் [[சாந்தி நிலையம்]] படத்தில் வரும் ''இயற்கையெனும் இளையகன்னி'' என்ற பாடலை [[ஜெமினி கணேசன்|ஜெமினி கணேசனுக்காக]]ப் பாடினார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்பே [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆருக்காக]] [[அடிமைப் பெண்]] திரைப்படத்தில் பாடிய ''ஆயிரம் நிலவே வா'' பாடல் வெளிவந்தது.<ref>{{cite web|url=http://www.lakshmansruthi.com/profilesmusic/spb09.asp|title=பாடும் நிலா பாலு | Lakshman Sruthi-100% Manual Orchestra |}}</ref><ref>{{cite Web |url =http://m.tamil.thehindu.com/cinema/tamil-cinema/எஸ்பிபி-50-பாடும்-நிலாவை-உருகவைத்த-யேசுதாஸின்-புகழாரம்/article9451588.ece|title =எஸ்பிபி 50: 'பாடும் நிலா'வை உருகவைத்த யேசுதாஸின் புகழாரம்}}</ref><ref>{{cite Web|url=http://www.thehindu.com/features/metroplus/society/sp-balasubrahmanyam-talks-about-his-singing-experiences/article6298959.ece|title=‘I know what I don’t know’}}</ref> இதுவே இவர் பாடி வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.<ref>{{cite web|url=http://cinema.maalaimalar.com/2014/03/26213901/mgr-introduce-sp-balasubramani.html|title=Tamil Cinema news&nbsp;– Tamil Movies&nbsp;– Cinema seithigal}}</ref> [[எஸ். ஜானகி]]யுடன் இவர் பாடிய முதலாவது பாடல் [[கன்னிப் பெண்]] (1969) படத்துக்காக "பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்" என்பதாகும். இதன் பின்னர் இவர் [[ஜி. தேவராஜன்|ஜி. தேவராஜனால்]] ''கடல்பாலம்'' என்ற திரைப்படம் மூலம் மலையாளத் திரைத்துறைக்கும் அறிமுகமானார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/mp/2010/07/12/stories/2010071250650400.htm |title=Metro Plus Kochi / Columns : KADALPAALAM 1969 |work=The Hindu |date=12 July 2010 |accessdate=12 June 2011}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது