எஸ். பி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
 
== பின்னணிக்குரல் ==
[[File:SP Balasubrahmanyam and KJ Yesudas at Abbas Cultural’s Kalaivizha 2017 – 25 Years of Celebrating Art Event.jpg|thumb|௭ஸ் பி பாலசுப்பிரமணியம் கே ஜே யேசுதாசுடன்]]
பாலசுப்பிரமணியம் [[கமல்ஹாசன்]] தமிழில் நடித்த ''[[மன்மத லீலை]]'' தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, கமல்ஹாசனுக்காக இரவல் குரல் (பின்னணிக் குரல்) கொடுத்தார்.<ref>{{cite web|author=sales@andhravilas.net |url=http://andhravilas.com/movienews.asp?id=90961&curPage=18 |title=Chit chat with S. P. Balasubramaniam&nbsp;– Andhravilas.com -Telugu Cinema, Telugu Movies, India News & World News, Bollywood, Songs |publisher=|date=26 March 2009 |accessdate=2 May 2011}}</ref> இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்காக 120 தெலுங்குத் திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-news/29384/cinema/kollywood/kamalhassan-is-a-multitalented-person--:-s.p.Balasubramanian.htm|title=கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-Kamalhassan is a multitalented person:s.p.Balasubramanian}}</ref> அத்துடன், [[இரசினிகாந்து]], [[விஷ்ணுவர்தன் (நடிகர்)|விஷ்ணுவர்தன்]], [[சல்மான் கான்]], [[பாக்யராஜ்]], [[மோகன் (நடிகர்)|மோகன்]], [[அனில் கபூர்]], [[கிரீஷ் கர்னாட்]], [[ஜெமினி கணேசன்]], [[அர்ஜுன்]], [[நாகேஷ்]], [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[ரகுவரன்]] ஆகியோருக்கும் பல்வேறு மொழிப் படங்களில் இரவல் குரல் கொடுத்துள்ளார். தெலுங்கு ''[[தசாவதாரம் (2008 திரைப்படம்)|தசாவதாரம்]]'' படத்தில் மொத்தம் 10 கதாபாத்திரங்களில் ஏழு பாத்திரங்களுக்கு (பெண் பாத்திரம் உட்பட) பின்னணிக் குரல் கொடுத்து சாதனை புரிந்தார்.<ref>[http://andhravilas.com/movienews.asp?id=90961&curPage=18 Chit chat with S. P. Balasubramaniam&nbsp;– Andhravilas.com -Telugu Cinema, Telugu Movies, India News & World News, Bollywood, Songs :] 26 March 2009. Retrieved 7 January 2012.</ref> ''[[அன்னமய்யா (திரைப்படம்)|அன்னமய்யா]]'', ''சிறீ சாயி மகிமா'' ஆகிய திரைப்படங்களுக்காக இவருக்கு சிறந்த பின்னணிக் குரலுக்காக [[நந்தி விருது]] வழங்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2000.html|title=Telugu Cinema Etc |website=www.idlebrain.com}}</ref> ''[[ஸ்ரீ ராம ராஜ்யம்]]'' தமிழ்த் திரைப்படத்துக்காக 2012 ஆம் ஆண்டில் [[நந்தமூரி பாலகிருஷ்ணா]]வுக்காக இரவல் குரல் கொடுத்தார்.<ref>{{cite web|url=http://tamilcinemanews123.blogspot.in/2012/04/spb-and-chinmayi-voice-for-balakrishna_02.html|title=SPB and Chinmayi voice for Balakrishna and Nayanthara in Sri Rama Rajyam movie&nbsp;– Tamil Cinema News&nbsp;– Latest News on Kollywood|date=2 April 2012}}</ref> ''[[காந்தி (திரைப்படம்)|காந்தி]]'' தெலுங்குத் திரைப்படத்தில் [[பென் கிங்ஸ்லி]]க்காக இரவல் குரல் கொடுத்தார்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/SPB-naturally/article15937688.ece | title=SPB, naturally | newspaper=The Hindu | date=27 March 2009 | accessdate=4 April 2017}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது