விஜயநகரக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
==கோயில் அமைப்பு==
விஜயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. சிறிய கோயில்கள் ஒரு [[கருவறை]]யையும் அதன் முன் [[அர்த்த மண்டபம்]] எனப்படும் சிறிய மண்டபம் ஒன்றையும் மட்டும் கொண்டவை. நடுத்தர அளவிலான கோயில்களில், கருவறையயும், அர்த்த மண்டபத்தையும் இணைக்கும் சிறிய இடைநாழி எனும் ஒரு சிறிய இடம் அமைந்திருக்கும். அத்துடன் அர்த்த மண்டபத்துக்கு அப்பால் [[முக மண்டபம்]] என்னும் இன்னொரு மண்டபமும் இருக்கும். பெரிய கோயில்களில் சுற்று மதில்களில் வாயில்கள் இருக்கும் இடங்களில் பெரிய [[கோபுரம் (கோயில்)|கோபுரங்கள்]] அமைக்கப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசர்களான ராயர்களின் பெயரைத் தழுவி இக் கோபுரங்கள் ராய கோபுரங்கள் என அழைக்கப்பட்டன. இவை, [[மரம் (கட்டிடப் பொருள்)|மரம்]], [[செங்கல்]], [[சாந்து]] ஆகியவற்றைக் கொண்டு, பெரும்பாலும் சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில், மக்கள், கடவுளர் ஆகியோரின் பெரிய அளவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு அழகூட்டப்பட்டன. [[தமிழர்]] கட்டிடக்கலைச் செல்வாக்கினால் உருவான இவ்வழக்கம், பேரரசன் [[கிருஷ்ணதேவ ராயர்|கிருஷ்ணதேவ ராயரின்]] காலத்தில் பிரபலமாகிப் பின்வந்த 200 ஆண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது. பேலூரில் உள்ள [[சென்னகேசவர் கோயில், பேலூர்|சென்னகேசவர் கோயில்]] கோபுரம், [[ஸ்ரீரங்கம்]], [[ஸ்ரீசைலம்]] ஆகிய இடங்களில் உள்ள கோயில் கோபுரங்கள் ஆகியவை ராய கோபுரங்களுக்கு நல்ல எடுத்துக் காட்டுகள் ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஜயநகரக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது