முளைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வித்து முளைத்தல்: *உரை திருத்தம்*
வரிசை 6:
வித்துக்களில் ஆண், பெண் [[பாலணு]]க்கள் இணையும் [[கருக்கட்டல்]] செயல்முறையைத் தொடர்ந்து உருவாகும் [[முளையம்|முளையமும்]], உணவுச் சேமிப்புப் பகுதியான [[வித்தகவிழையம்|வித்தகவிழையமும்]], முளையப் பாதுகாப்பிற்காக, வித்தினை மூடியிருக்கும் [[வித்துறை]]யும் காணப்படும்.
 
[[மகரந்தச்சேர்க்கை]] சரியாக நிகழ்ந்திராமை, [[பூச்சி]] மற்றும் சில [[நோய்க்காரணி]]களின் தாக்கம், பாதகமான சூழல் காரணிகள், நீண்ட காலத்திற்கு முளைத்தலுக்கான சாதகமான சூழ்நிலை கிடையாமை போன்ற பல்வேறு காரணங்களால், சில சமயம் விதைகள் முளையமின்றி மலட்டு விதைகளாக உருவாகி இருக்கலாம். அவ்வாறான மலட்டு விதைகள் நிலைத்து வாழும் தகுதியற்றைவையாக இருப்பதனால் என்றும் முளைப்பதில்லை.

அநேகமான விதைகள் குறிப்பிட்ட காலத்திற்கு [[வித்து உறங்குநிலை|உறங்குநிலையில்]] இருந்து பின்னரே முளைக்கும் நிலைக்கு வரும். இந்த உறங்குநிலைக் காலத்தில் அவை ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படலாம். அத்துடன் பாதகமான சூழ்நிலைகள் இருப்பின், அவற்றிலும் அவை நிலைத்து வாழும் தகுதி கொண்ட முளையம் பாதிப்படையாமல் இருக்க உதவும். பின்னர் சாதகமான சூழ்நிலைகள் இருக்கையில் முளைத்தல் நிகழும்.
வித்துக்களில் உள்ள முளையமானது முளைத்தல் செயல்முறை மூலம் இளம் தாவரமான [[நாற்று|நாற்றாக]] விருத்தியடையும். இதற்கு வித்தானது உயிருள்ள நிலையில் இருப்பதும், வித்து உறங்குநிலையில் இருந்திருப்பின் அதிலிருந்து மீண்டிருப்பதும், முளைத்தலுக்கான பொருத்தமான சூழல் காரணிகள் கிடைப்பதும் அவசியமாகும். வித்தானது உறங்கு நிலையிலிருப்பின், அந்த நிலை நீங்கினாலன்றி விதை முளைக்க முடியாது. முளைத்தலுக்கான சாதகமான நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விதைகள் உறங்கு நிலையிலிருந்து மீளலாம். பல்வேறு முறைகளால் அவற்றின் உறங்குநிலையை செயற்கையாக போக்கி முளைத்தலைத் தூண்டவும் முடியும்<ref name="Methods of Removing Seed Dormancy">{{cite web | url=http://www4.schoolnet.lk/edusoft/agriculture/grade-12_13/more.php?sub=Methods%20of%20Removing%20Seed%20Dormancy&main=main11 | title=Methods of Removing Seed Dormancy | accessdate=மே 08, 2013}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/முளைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது