முளைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
===ஆக்சிசன்===
முளைத்தலின்போது, அதற்கான ஆற்றலைப் பெற, விதையினுள் நிகழும் வளர்சிதைமாற்றத்திற்கு ஆக்சிசன் தேவைப்படும்<ref>S. M. Siegel, L. A. Rosen (1962) ''Effects of Reduced Oxygen Tension on Germination and Seedling Growth'' Physiologia Plantarum 15 (3), 437–444 {{doi|10.1111/j.1399-3054.1962.tb08047.x}}</ref>. வித்தானது வளர்ந்து இலைகளைத் தோற்றுவித்து, பின்னர் [[சூரியன்|சூரிய]] ஒளியிலிருந்து ஆற்றலைப் பெறும்வரை, அதற்குத் தேவையான ஆற்றல் [[உயிரணு ஆற்றல் பரிமாற்றம்]] மூலமாகவே வழங்க வேண்டியிருப்பதனால் ஆக்சிசன் முக்கியமாகும்<ref name="Raven"/>. [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] இருக்கும் ஆக்சிசன், [[மண்|மண்ணில்]] உள்ள இடைவெளிகள் மூலம் விதைக்கு கிடைக்கும். மண்ணில் மிக ஆழமாக விதை இருப்பின், அதற்குத் தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் முளைத்தல் பாதிக்கப்படும்.
 
===வெப்பநிலை===
விதையில் நிகழும் உயிரணு ஆற்றல் பரிமாற்றத்திற்கு சாதகமான வெப்பநிலை அவசியமாகும். வெவ்வேறு தாவரங்கள் வெவ்வேறு வெப்பநிலைகளில் முளைக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. பொதுவான தாவரங்கள் 60-75 F (16-24 C) வெப்பநிலையில் முளைக்கும். ஆனால் சில குளிர்நிலையிலும், வேறு சில சூடும், குளிரும் மாறி மாறி இருக்கும்போதும் முளைக்கின்றன. சில விதைகளில் உறங்குநிலை அகல குளிர் வெப்பநிலை தேவைப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/முளைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது