முளைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஒளி / இருள்: *விரிவாக்கம்*
→‎வித்து உறங்குநிலை: *விரிவாக்கம்*
வரிசை 29:
{{main|வித்து உறங்குநிலை}}
[[வித்து உறங்குநிலை]] (Seed dormancy) என்பது வித்துக்கள் முளைத்தலை குறிப்பிட்ட காலத்திற்குத் தள்ளிப்போடுவதாகும். இதனால் தகுந்த சூழல் காரணிகள் கிடைக்கும்போது தமது முளைத்தலை ஆரம்பிப்பதற்காக வித்துக்கள் உறங்குநிலையில் இருக்கலாம். சிலசமயம் தகுந்த சூழல் இருப்பினும், முளைத்தலின் பின்னர் சந்ததிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காக முளைக்காமல் உறங்கு நிலையில் இருந்து குறிப்பிட்ட காலத்தின் பின்னர் முளைக்கலாம். முளைத்தலுக்கான அத்தியாவசியமான தேவைகள் கிடைக்காதவிடத்தோ, மிகவும் கடுமையான குளிர் அல்லது கடுமையான சூடு போன்ற தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளிலோ வித்துக்கள் முளைக்காமல் இருத்தல் Seed hibernation எனப்படும்.
 
உறங்குநிலைக்கான இடமாக விதையின் வேறுபட்ட பகுதிகள் தொழிற்படக் கூடும். அவை விதை முளையமாகவோ, அல்லது வித்துறையாகவோ இருக்கலாம். உறங்குநிலை அகற்றலுக்கான சமிக்ஞைகள் பெறப்பட்ட பின்னர், மென்சவ்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் விதை முளைத்தலைத் தொடங்க உதவும். விதைகள் நீரேற்றத்திற்கு உள்ளாகும்போது இத்தகைய முளைத்தலுக்கான ஆரம்ப நிகழ்வுகள் ஏற்படும்<ref>{{cite book | first1 = J Derek | last1 = Bewley | first2 = Michael | last2 = Black | first3 = Peter | last3 = Halmer | name-list-style = vanc | title = The encyclopedia of seeds: science, technology and uses Cabi Series| url = https://books.google.com/books?id=aE414KuXu4gC&pg=PA203| year = 2006| pages = 203| isbn = 978-0-85199-723-0 }}</ref>. சில தாவர [[இயக்குநீர்]]கள் விதை உறங்குநிலையுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அப்சசிக் அசிட் என்னும் இயக்குநீர் உறங்குநிலையைத் தூண்டுவதாகவும், ஜிபரலின் என்னும் இயக்குநீர் உறங்குநிலையை அகற்றுவதாகவும் உள்ளன. [[வாற்கோதுமை]]யில் ஜிபரலின் சேர்ப்பதன்மூலம் உறங்குநிலை அகற்றப்பட்டு, நீரான விதை முளைப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது<ref name="Raven"/>.
 
வித்தானது உறங்கு நிலையிலிருப்பின், அந்த நிலை நீங்கினாலன்றி விதை முளைக்க முடியாது. முளைத்தலுக்கான சாதகமான நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விதைகள் உறங்கு நிலையிலிருந்து மீளலாம். பல்வேறு முறைகளால் அவற்றின் உறங்குநிலையை செயற்கையாக போக்கி முளைத்தலைத் தூண்ட முடியும்<ref name="Methods of Removing Seed Dormancy"/>.
"https://ta.wikipedia.org/wiki/முளைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது