திருமுருகாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
[[பத்துப்பாட்டு]] என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது '''திருமுருகாற்றுப்படை'''. [[மதுரை]]யைச் சேர்ந்த [[நக்கீரன்]] என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இதுகடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். பிரபஞ்சத்திற்கு கடவுளான தமிழ் கடவுள்[[முருகன்|முருகப்]] பெருமானைப் [[பாட்டுடைத்தலைவன்|பாட்டுடைத்தலைவ]]னாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட [[ஆசிரியப்பா]]வால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.தொடக்கக் காலத்தில் வெறியாட்டு அயரும் வேலன்,கட்டுவிச்சி ஆகியோர் தம் மீது முருகன் வந்து மேவுமாறு வேண்டுதலே முருகாற்றுப்படுத்துதல் என்று-முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்(அகம்:22)பாடல்வழி அறியமுடிகிறது.இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை என்பதாகும்.இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது.
முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர்,ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார்.பொருநன்,சிறுபாணான்,பெரும்பாணான்,கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமையப்பெற்றிருக்க,திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருமுருகாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது