பேச்சு:பாறசாலை சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
தமிழ் விக்கியின் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு யாரிடமிருந்தாவது தகுந்த பதில் கிடைக்கிறதா என எதிர்பார்க்கிறேன்.--[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 02:22, 6 திசம்பர் 2020 (UTC)
::இது கிரந்தப் பிரச்சனை இல்லை. நீங்கள் பா என்பதை ப என்றும், றகரத்தை ரகரமாகவும், ஸ்சா என்ற ஒவ்வாத கூட்டெழுத்துக்களையும் ('பரஸ்சால') குறிப்பிட்டுள்ளீர்கள். அதையே நான் சுட்டினேன். பாறையே மலையாளத்தை பாற என்றாகிறது என்று நான் விளக்கம் கொடுத்துவிட்டேன். நீங்கள் மீண்டும் பா'''ர'''ஸ்ஸால என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சோலை மலையாளத்தில் ஷோலா ஆகிறது. தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியில் உள்ள இடங்களில் தமிழ்ப்பெயர்களில் சகரம் சில இடங்களில் ஷகரமாக மலையாளத்தில் இடம்பெறும். கேரளத்திலும் கூட பல தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருத இலக்கணப்படியே எழுதப்படுகின்றன. எ.கா: (திருசிவப்பேரூர் -> த்ருஸ்ஸூர், புதுச்சேரி-> புதுஷ்ஷேரி, செறுமண்ணூர் -> ஷொறணூர்). மேற்சொன்ன விளக்கத்தைக் கூட விடுங்கள். எல்லைப்பகுதியில் உள்ள இடங்கள் தமிழிலும் மலையாளத்திலும் சில வேறுபாடுகளுடனே எழுதப்படுகின்றன. இந்த இடம் தமிழ்நாட்டு எல்லையில் உள்ளது என்பதையும், '''பாறசாலை''' என்று குறிப்பிடும் வழக்கம் தமிழில் உண்டு என்றும் நினைவுபடுத்த விரும்புகிறேன். பாறசாலை என்று எழுதினாலும் தவறில்லை. இதில் கிரந்தச் சிக்கல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 09:59, 25 திசம்பர் 2020 (UTC)
:::சரி, கிரந்தப் பிரச்சனை இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படியானால் ശ്ശാ என்ற மலையாள எழுத்தை எப்படி எழுதுவது? உச்சரிப்பின்படி ஸ்+ஸ்அ = ஸ்ஸ என்று தான் வரும். சா என்று வராது. நான் பள்ளியில் படித்த 1950 களில் ஆட்கள், இடங்கள் பெயர்களை அப்படியே எழுத வேண்டும் என்றும் மாற்றவோ மொழிபெயர்க்கவோ கூடாது என்றும் தான் கற்றோம். ஆனால் இப்போது நாட்டில் எல்லாமே மாறிவிட்டது. தமிழ் இலக்கணம் தெரியாதவர்கள் எல்லாம் பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் ஆகிவிட்டார்கள். ஆகவே எங்கள் தலைமுறை சொல்வது எடுபடாது. நன்றி. வணக்கம்.--[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 10:50, 26 திசம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பாறசாலை_சட்டமன்றத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாறசாலை சட்டமன்றத் தொகுதி" page.