மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 73:
| website = [http://www.maduraicorporation.co.in/ madurai corporation]
}}
'''மதுரை''' (''Madurai''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது, [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தின் [[தலைநகர்]] ஆகும். இந்நகரம், [[மக்கள்தொகை]] அடிப்படையில், தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாகும். இந்தியாவில், பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில், இது 44 ஆவது பெரிய நகரம் ஆகும்.<ref>[http://www.citypopulation.de/India-TamilNadu.html Tamil Nādu (India): State, Major Cities, Towns & Agglomerations – Statistics & Maps on City Population<!-- Bot generated title -->]</ref> [[வைகை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் [[மதுரை மாநகராட்சி]] மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை]]
[[படிமம்:Goddess Meenakshi Wedding.JPG|thumb|right|மீனாட்சி திருக்கல்யாணம்]]
 
இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று<ref>{{cite web | url=http://india.gov.in/knowindia/culture_heritage.php?id=54 | title=இந்தியா தொன்மையானவை - மீனாட்சி கோவில், மதுரை | publisher=இந்திய அரசின் இணையதளம்}}</ref>. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, [[தமிழ் மொழி|தமிழ்]] மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. [[சங்க காலம்]] எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.<ref name="தமிழ்ச்சங்கங்கள்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm | title=இறையனார் களவியல் உரை கூறும் [[முச்சங்கம்]] பற்றிய விவரங்கள் | publisher=தமிழ் இணைய பல்கலைக்கழகம் | accessdate=செப்டம்பர் 15, 2012}}</ref>
 
[[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] அமைச்சர் [[கௌடில்யர்]] (கி.மு. 370 – கி.மு. 283), கிரேக்க தூதர் [[மெகஸ்தெனஸ்]] (350 கி.மு. – 290 கி.மு.) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம், பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. [[சங்ககாலப் பாண்டியர்]], [[இடைக்காலச் சோழர்கள்]], [[சாளுக்கிய சோழர்கள்|பிற்காலச் சோழர்கள்]], [[பிற்காலப் பாண்டி நாடு|பிற்காலப் பாண்டியர்கள்]], [[மதுரை சுல்தானகம்]], [[விஜயநகரப் பேரரசு]], [[மதுரை நாயக்கர்கள்]], கர்நாடக இராச்சியம், [[ஆங்கிலேயர்]]கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது