கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: பெளத்தம் → பௌத்தம் using AWB
No edit summary
வரிசை 1:
'''கடவுள்''' என்பவர் [[அண்டம்]] முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், [[இறப்பு]], பிறப்பு, [[இரவு]], [[பகல்]], [[இன்பம்]], துன்பம் போன்ற [[உலகம்|உலக]] வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு [[மதம்|மதங்களைச்]] சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். [[அன்பு]], புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் [[சிலை|சிலைகளை]] அமைத்து வழிபடுகின்றனர். வேறு சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை [[இறைவன்]] அல்லது [[ஆண்டவன்]] எனவும் அழைக்கிறார்கள்.<ref>https://www.jw.org/en/publications/books/good-news-from-god/who-is-god/</ref>
 
கடவுள் நம்பிக்கையுடையவர்களின் எண்ணத்தின் படி, கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளியாகவும், பாதுகாப்பாளராகவும் இருக்கிறார். இயற்கையே கடவுள் என கூறுவோருக்கு கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளராக மட்டுமே இருக்கிறார்,. ஆனால், பிரபஞ்சத்தை காப்பாவராக அல்ல. கடவுள் அனைத்திலும் உள்ளதாவராய் இருக்கிறார் என்னும் கோட்பாடு உள்ளவர்களின் கருத்து கடவுளே தான் பிரபஞ்சம். நாத்திகத்தில், கடவுள் இருக்கிறார் என நம்பப்படுவதில்லை, கடவுள் தெரியாதவராகவோ அல்லது அறிய முடியாதவராகவோ கருதப்படுகிறார். பல குறிப்பிடத்தக்க தத்துவவாதிகள் கடவுளின் இருப்பிற்கும் இல்லையில் அதற்கு எதிராகவும் வாதங்களை உருவாக்கியுள்ளனர்.
 
கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.
வரிசை 9:
நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.<ref name="test">https://www.everystudent.com/features/connecting.html</ref>
 
இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்ட ஆதி மனிதன், அவற்றைக் கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள்வழிபடத் தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும். வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.
சிவன், திருமால், பிரம்மன், சக்தி, லட்சுமி, சரஸ்வதி முதலிய ஏராளமான கடவுள்கள் இந்துகளால் வணங்கப்படுகின்றனர்.<ref name="test 2">https://www.himalayanacademy.com/readlearn/basics/fourteen-questions/fourteenq_1</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது