பஞ்சீகரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
 
'''பஞ்சீகரணம்''' (Panchikarana) எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். [[பிரபஞ்சம்]] மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள [[ஆகாயம்]] முதலிய [[பஞ்சபூதங்கள்]], குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின் (ஸ்தூலம்) (Matter) தோற்றத்திற்கு பஞ்சீகரணம் என்று [[சாங்கியம்|சாங்கிய தத்துவம்]] சொல்வதை [[வேதாந்தம்|வேதாந்த சாத்திரங்களும்]] ஏற்றுக் கொள்கிறது.
 
படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய சூக்கும பூதங்கள் (பஞ்ச சூக்கும பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று சேர்க்கை நடைபெறாமல் இருந்ததால் செயல்பாடுகள் நிறைந்த உலகிற்குத் தகுந்த ஸ்தூலபொருட்கள் (பருப் பொருட்கள்) (சடப் பொருள்கள்) தோற்றுவிக்கும் திறமையற்று விளங்கியது. பஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், சட வடிவ பஞ்சபூதங்களாக வெளிப்படும் தன்மையைப் பெற்று செயலாற்றும் தகுதியைப் பெறுகின்றன.
வரிசை 18:
 
[[பிரம்ம சூத்திரம்]] (2. 4. 22) –இல், [[பஞ்சபூதங்கள்|பஞ்சபூதங்களின்]] மூலப்பொருட்களிலே ஒவ்வொன்றுமே ஐந்து பூதங்களின் மூலப்பொருட்களின் கலவையைப் பெற்று இருப்பதால், எந்த பூதத்தின் மூலப்பொருளின் பகுதியானது அதிக பங்கு உள்ளதோ அந்த பூதத்திற்கு அப்பெயரே நிலை பெறுகிறது. எடுத்துக்காட்டாக பஞ்சீகரணத்தில், நீர் எனும் சூக்கும பூதத்தின் மூலப்பொருளின் அளவு அரைப் பங்காகவும், மற்ற நான்கு பூதங்களின் அளவு 1/8 பங்காகவும் இருப்பின் இக்கலவைக்கு நீர் எனும் பூதம் எனப்படுகிறது.
மேலும் பூமியானது [[நீர்]], [[நெருப்பு|நெருப்பு,]] [[மண்]] என்கிற மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் மண்னே அதிகம். எனவே பூமி அல்லது மண் என்றே அது பெயர் பெறலாயிற்று.
 
நெருப்பு என்பது தீ, நீர் மற்றும் மண் இவற்றைக் கொண்டிருந்தாலும், மற்ற இரண்டைவிட அதில் தீயின் மூலப்பொருளே அதிகமாக இருப்பதால் அக்னி என்ற பூதத்தின் பெயருடன் விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சீகரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது