84,389
தொகுப்புகள்
சி (removed Category:கத்தோலிக்கம் using HotCat) |
சி |
||
'''ஒப்புரவு அல்லது பாவ
▲'''ஒப்புரவு அல்லது பாவ சங்கீர்த்தனம்''' என்பது கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படும் ஏழு அருட்சாதனங்களில் ஒன்று. பாவம் செய்வதால் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஏற்படும் விரிசலை நீக்கும் அருட்சாதனம் ''பாவமன்னிப்பு'' அல்லது ''ஒப்புரவு அருட்சாதனம்'' என்று அழைக்கப்படுகிறது. கடவுள் சார்பாக வீற்றிருக்கும் குருவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அதற்கு குரு கூறும் பரிகாரங்களை செய்ய வேண்டும். ஒப்புரவு அருட்சாதனம் குணமளிக்கும் அருட்சாதனங்களில் முதலாவது அருட்சாதனம் ஆகும்.
[[File:Iglesia de San Joaquín-Confesionario.JPG|thumb|ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் இருக்கை]]
[[File:Исповедь берн собор.jpg|thumb|குரு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குகிறார்.]]
*குருவிடம் பாவங்களை அறிக்கையிடல்
*குருதரும் பரிகாரங்களை செய்தல்
==பாவ மன்னிப்பை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தல்==
கேரளாவில் அய்ரூர் செயின்ட் ஜான் சர்ச்சில் பணியாற்றும் பாதிரியார் ஒருவரிடம் திருமணமான ஆசிரியை ஒருவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட தவறு குறித்து பாவ மன்னிப்பு கோரினார். பாதிரியார் அந்த தகவலை மற்றொரு பெண்ணிடம் கூறிவிட்டார். அந்த பெண்ணோ பலர் முன்னிலையில் பாவ மன்னிப்பு ஆசிரியயை இரகசியத்தை போட்டு உடைத்து விட்டார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2068133 பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை]</ref>
கேரளாவில் மலங்காரா ஆர்த்தோடக்ஸ் திருச்சபையில் உறுப்பினராக உள்ள ஒருவரின் மனைவி பாவமன்னிப்பு கேட்கவந்தபோது, அவரை மிரட்டி அங்குள்ள பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி 5 பாதிரியார்கள் பாலியல் முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள முதல்வர் போலீஸாருக்கு உத்தரவிட்டார். முன்னதாக இப்பாதிரியார்கள் மீது தேவாலயத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. இருப்பினும் காவல்துறை விசாரணையில் அவர்கள் மீது சட்டப்படி தண்டனை வழங்க ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் கணவர் பாதிரியார்கள் பேசிய ஆடியோ கிளிப்பை கண்டுபிடித்து வெளியிட்ட பிறகு இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையில் சர்ச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண் பாவமன்னிப்புக்காக தனது ரகசியங்களை பேசியதை வைத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் இந்தப் பாதிரியார்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.
===முன் வரலாறு===
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்த திருமணம் ஆன பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமணத்துக்கு முன்பு பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்த அந்தப் பெண் திருமணத்துக்குப் பின்பு, திருவல்லா மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்கச் சென்றிருக்கிறார். அப்போது, செய்த தவறுகளை அவரின் கணவனிடம் கூறிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பாதிரியார். அத்துடன் அதை படம் பிடித்து தனது நண்பர்களான நான்கு பாதிரியார்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி அந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த பெண்ணின் கணவர் இந்த விவகாரம் குறித்து சர்ச்சையை கிளப்பினார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், திருமணமான இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே.ஜார்ஜ், ஜோப் மேத்யூ, ஜான்சன் மேத்யூ ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பாதிரியார் ஜோப் மேத்யூ நேற்று கொல்லம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதை தொடர்ந்து பத்தணம்திட்டா கோழஞ்சேரியில் அவரது வீட்டருகில் நின்ற ஜான்சன் மேத்யூவை இன்று காவல்துறையினர் கைது செய்யதனர். இதுவரை 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்களில் பாவ மன்னிப்பு கேட்கும் முறையை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.''இதில் மாற்று வழி என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். கன்னியாஸ்திரிகளும், பாவ மன்னிப்பு அளிப்பது குறித்து ஆராயலாம்'' என சட்ட கமிஷன் அறிக்கையில் கூறியுள்ளது.<ref>[https://www.thehindu.com/news/national/kerala/bishop-mulakkal-sex-scandal-the-story-till-now/article25227024.ece Abolish practice of confessions in churches: NCW]</ref>திருச்சபைகளில் பாதிரியார்களிடம் பெண்கள் பாவ மன்னிப்பு கோரும் வழக்கத்தை கைவிடப்பட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையர்ம் [[இந்திய அரசு]]க்கு பரிந்துரைத்துள்ளது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2092516 சர்ச்சில் பாவ மன்னிப்பு ரத்தா?]
== ஆதாரங்கள் ==
|