பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 149:
 
எமது சமூகம் நிலை பேண்தகு அபிவிருத்தி தொடர்பான சிந்தனையை சரியான விதத்தில் சிரமேற்கொண்டுள்ளது
 
உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்வது எப்படி? (சிறுவர்களுக்கான சுய பாதுகாப்புக் குறிப்புகள்)
 
சரியான தொடுகை, தவறான தொடுகை
 
சரியான தொடுகை: உங்களைப் பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் உணரச் செய்யும் தொடுகைகள்.
உங்கள் மேல் கொண்டுள்ள அன்பினாலும் பாசத்தாலும் உங்கள் பெற்றோர் அல்லது உங்கள் தாத்தா, பாட்டி உங்களை கட்டியணைத்து முத்தம் தரல். (உதாரணங்கள்: காலையில் எழுந்தவுடன் அல்லது இரவில் நித்திரை கொள்ள முன்னர் தரும் முத்தங்கள், அவர்களிடம் ஆசீர்வாதம் வேண்டிய பின்னர் நெற்றியில் அவர்கள் தரும் முத்தம்)
ஆசிரியர் முதுகில் தட்டி கவனமாகப் போய் வருமாறு வழியனுப்பி விடல்.
நண்பருடன் கைகுலுக்குதல்.
 
தவறான தொடுகை: உங்களை சங்கடமாக உணரச் செய்யும் தொடுகைகள்.
நீங்கள் தொடப்பட விருப்பமில்லாத இடத்தில் தொடுதல்.
உங்களை அச்சம் கொள்ளவைக்கும் அல்லது பதட்டமாக்கும் வகையில் தொடுதல்.
உங்களை நோகடிக்கும் வகையிலாகத் தொடுதல்.
தன்னைத் தொடும்படி வற்புறுத்துதல்.
தொட்டதன் பின்னர் வேறொருவரிடமும் கூற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளல் அல்லது மிரட்டுதல்.
 
யாரை நம்பலாம்?
உங்களைப் பாதுகாப்பாக உணர வைப்போர்.
உங்களுக்கு நல்ல விடயங்களை சொல்லித் தருவோர்.
உங்களை சரியான விதத்தில் வழிநடத்துவோர்.
உங்களை பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்போர்.
உங்களை சங்கடமாக உணரச் செய்யாதோர்.
 
உங்கள் உரிமைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்
உங்களை யாராவது சங்கடமாக்கும் விதத்திலோ, பயமுறுத்தும் விதத்திலோ அல்லது பதட்டமாக்கும் விதத்திலோ தொட முயலும் போது, அவர்கள் உங்கள் குடும்ப உறுப்பினராகவோ நண்பராகவோ இருந்தாலும் கூட உங்களுக்கு ''இல்லை, வேண்டாம்'' என்று சொல்ல முடியும்.
உங்களை சங்கடமாக்கும் விதத்தில் தொட முயலும் எவருடனும் தனியே இருக்க வேண்டாம்.
நீங்கள் பயப்படும் வகையில் அல்லது சங்கடமாக உணரும் வகையில் யாரேனும் உங்களிடம் நெருங்கினாலோ, உங்களை இழுத்துச் செல்ல முயன்றாலோ அல்லது உங்களுக்கு தவறான புகைப்படங்கள் அல்லது காணொளிகளைக் காட்ட முயன்றாலோ அங்கிருந்து உடனடியாக ஓடி வெளியேறுங்கள், கூச்சலிட்டு உதவிக்கு ஏனையோரை அழையுங்கள்.
உங்களை யாரேனும் தவறான முறையில் தொட்டால், உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் நடந்ததைக் கூறுங்கள்.
உங்களை சங்கடமாக்கும் எந்த இரகசியத்தையும் மனதிற்குள் வைத்திருக்க வேண்டாம். உங்களுக்கு நம்பிக்கையான வளர்ந்த நபரிடம் கூறுங்கள்.
 
நினைவில் கொள்ளுங்கள்
உங்கள் உடல் உங்களுக்கு சொந்தமானது.
உங்கள் அனுமதியின்றி எவரும் உங்களைத் தொடவோ முத்தமிடவோ கூடாது.
இல்லை என்று மறுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது