"காவிரி ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== பெயரியல் ==
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப் பெயர்எனப்பெயர் பெற்றது. (
கா- காடு,சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை) <ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref>. தமிழ் இலக்கியங்களில் '''பொன்னி ஆறு''' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு 'பொன்னி' என்று பெயர் வந்ததற்கு காரணம் அது சோழ நாட்டை செழிக்கச்செய்ததாகும். பொன்படு நெடுவரையில் ( குடகு மலை) தோன்றிப் பாய்வதாலும் [[பொன்னி ஆறு|பொன்னி]] என்னும் பெயர் வந்தது.
 
[[படிமம்:Thala Cauvery.jpg|250px|thumb|left|<center>தலைக்காவிரி - காவிரி உற்பத்தியாகும் இடம் </center>]]
[[File:Mekedat.jpg|thumb|மேகதாது என்னும் ஆடுதாண்டு காவிரி]]
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் [[தலைக்காவிரி]] என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர்கிருஷ்ணராஜசாகர் அணையை அடைகிறது. [[கிருஷ்ணராஜ சாகர் அணை]] மைசூருக்கு அருகில் உள்ளது. ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (''Gaganachukki'')அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் [[ஆசியா]]வின் முதல்{{cn}} நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு [[கோலார் தங்க வயல்|கோலார் தங்க வயலுக்கு]] மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால் , இதை [[ஆடு]] தாண்டும் காவிரி என்று அழைப்பர்.
(கன்னட மொழியில் [[மேகேதாட்டு]] (''Mekedatu'') என்று பெயர்). ஆனால் இன்றுள்ள நிலையில் அது இயலாததாகும்.
 
67

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3087108" இருந்து மீள்விக்கப்பட்டது