மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
[[Cervinae]]
}}
'''மான்''' [[பாலூட்டி]] வகையைச் சேர்ந்த [[இரட்டைப்படைக் குளம்பி]]கள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. [[அறிவியல்|அறிவியலில்]] மான் இனத்தை '''செர்விடீ''' (''Cervidae'') என்பர். இவை இலைதழைகளை உண்ணும் [[தாவர உண்ணி|இலையுண்ணி]] விலங்குகள். ஆகும். மான் [[ஆடு]] [[மாடு]]கள் போல உண்ட [[உணவு|உணவை]] இருநிலைகளில் [[செரிமானம்|செரிக்கும்]] [[அசைபோடும் விலங்கு]]கள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் [[ஆஸ்திரேலியா]]வும் [[அண்டார்டிக்கா]]வும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. [[கனடா]]விலும் [[சைபீரியா]] முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் [[ஐரோவாசியக் காட்டுமான்|மூசு]] அல்லது [[காட்டுமான்|எல்க்]] என்னும் காட்டுமான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 [[மீட்டர்]] உயரமும் 540 – 720 கிலோ.கி (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/havier?s=t |title=Havier|publisher=Dictionary.com |date= |accessdate=4 August 2012}}</ref>
 
மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான [[கொம்பு (உயிரியல்)|கொம்பு]]களைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு ''கலை'' என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் ''பிணை'' என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), ''மான்மறி'' என்று பெயர்.
"https://ta.wikipedia.org/wiki/மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது