சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 106.198.44.175ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Sattur name Reason
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
== பெயர்க்காரணம் மற்றும் வரலாறு ==
விருதுநகர் மாவட்ட வைப்பாற்று தென்கரையில் உள்ள இவ்வூரை கி.பி.825 ம் ஆண்டு கல்வெட்டு "இருஞ்சோழநாட்டு சாத்தனூர்" என்கிறது.
 
நின்றசீர் நெடுமாறன் காலத்தில் இவ்வூர் குளத்தில் மடைகள் கட்டி நீர் நிர்வாகம் நடந்ததை மடைக்கல்வெட்டு காட்டுகிறது. காலப்போக்கில் அழிவுதொட்டு சிதைந்த இம்மடைகளை கி.பி.825 ல்
 
ஸ்ரீமாற ஸ்ரீவல்லப்பன் காலத்தில் இருப்பைக்குடி கிழவன் அகற்றி கல்மடைகள் கட்டுவித்ததையும் சடையன் மாறன் கல்வெட்டு காட்டுகிறது. இங்கு 18 மடைகள் இருந்து, அம்மடைகள் பெயரிலேயே வன்னிமடை உள்பட 18 கிராமங்கள் உருவான கதையும் உண்டு. பற்பல கோவில்கள் இருந்தும், இவ்வூரின் வெங்கடாசலபதி, சிவன் கோவில்களில் 13ம் நூற்றாண்டு நந்திசிலைகள் கல்வெட்டுகள் பழமை பேசி நிற்கின்றன.
 
மதுரையில் அழகர் இறங்கும் சித்திரை நாளில், சாத்தூர் வெங்கடாசலபதி பெருமாளான சாத்தூரப்பனும்" குதிரை வாகனத்தில் வைப்பாற்றில் இறங்கி கொல்லப்பட்டியில் எழுந்தருள, இங்கு  நடக்கும் "பாறைக் காட்டு வைபவம்" விமரிசையானது.
 
அக்காலத்தில் சாத்தூர் ஜமீன் புகழ் பெற்றிருந்தது. இவ்வூரில் கிடைத்த செப்பேடு, "இடங்கை வலங்கைப் பிரிவினரிடையே  ஏற்ப்பட்ட மோதலை அதன் முடிவை தெரிவிக்கிறது. மொகலாய மன்னன் ஷாஜகான் பெயரில் ஓர் அதிகாரி சாத்தூரில் சத்திரம் கட்டி, அதனை நிர்வகித்திட, "சத்திரப் பட்டி" எனும் சிற்றூரை தானமாகத் தந்ததாக வரலாறு இருக்கிறது.
 
 
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தாத்த தேசிகன் எனும் ஆச்சார்யரான பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பெருமாள் ஆலயங்களை எல்லாம் தரிசித்து கொண்டே ஊர் ஊராக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு செல்லும் போது வழியில் ஏதேனும் நதிகளை கண்டால் தன்னுடன் எடுத்து செல்லும் பெருமாள் திருமகள் மற்றும் பூமா தேவி சிலைகளை வைத்து பூஜை செய்து பின் எடுத்துச் செல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். அவ்வாறாக ஒரு சமயம் தற்போதைய சாத்தூரின் வைப்பாற்று படுகையைக் கண்டு அங்கிருந்த அரச மரத்தடியில் தான் கொண்டு வந்த சிலைகளை வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். காலை எழுந்து வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு உற்சவரின் சிலைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப முயற்சித்தார் அவரால் சிலைகளை அவ்விடம் விட்டு நகர்த்த முடியவில்லை. அப்பொழுது அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலில் இருந்து வருவதாக கூறிய ஒரு சிறுவன் பகவான் இவ்விடத்தில் இருக்க விரும்புகிறார். எனவே தாங்கள் அவரை இவ்விடத்திலேயே விட்டுவிடுங்கள் எனக் கூறி விட்டு மாயமானான். அந்த ஸ்வாமிகளின் பெயரால் அப்பகுதி தாத்தய்யன் மேடு என வழங்கி வந்தது.{{cn}}
 
"https://ta.wikipedia.org/wiki/சாத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது