"இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]], [[பல்லவர்|பல்லவ]], [[சாளுக்கியர்|சாளுக்கிய]], கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.
 
[[அராபியர்]] வருகை [[எட்டாம் நூற்றாண்டு|எட்டாம் நூற்றாண்டில்]] தொடங்கியது. [[துருக்கி| துருக்கியர்]] [[12ஆம் நூற்றாண்டு|12ஆம் நூற்றாண்டில்]] வரத்தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து ஐரோப்பிய வணிகர்கள் [[15ம் நூற்றாண்டு|15ஆம் நூற்றாண்டின்]] இறுதியில் வரத்தொடங்கினர்.
 
[[படிமம்:Taj Mahal in March 2004.jpg|thumb|left|முகலாயர்கள் காலத்து கட்டிடக்கலைக்கு உதாரணமாகப் பார்க்கப்படும் [[தாஜ்மஹால்]]]]
[[படிமம்:Constitution of India.jpg|thumb|இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை]]
இந்தியா 29 [[மாநிலங்கள்|மாநிலங்களையும்]] 7 [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதிகளையும்]] கொண்ட ஒரு [[கூட்டாட்சி|கூட்டமைப்பு]] ஆகும். இக்கூட்டமைப்பு ஆற்றல்பூர்வமாக இந்திய [[விடுதலை (அரசியல்)|சுதந்திர]] [[சமூகவுடமை]] சமய சார்பற்ற [[மக்களாட்சி]]க் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய [[அரச நிர்வாகம்]] [[சட்டப் பேரவை]], [[செயலாற்றுப் பேரவை]], [[சுதந்திர நீதியமைப்பு]] ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான ஆற்றல் பயன்பாடுகளை, ஊழலைக் கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராகக் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, நாட்டு சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
 
[[செயலாட்சியர்|செயல் அதிகாரம்]] [[பிரதமர்|பிரதமரிடமும்]] அவரின் தலைமையின் கீழ் இயங்கும் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையிடமும்]] இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது [[கூட்டணி]]யின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
 
=== மொழி ===
{{Main|இந்திய மொழிகள்}}
இந்தியா இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களின் இருப்பிடம் ஆகும். அவை 74% மக்களால் பேசப்படும் [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழிக்குடும்பமும்]], 24% மக்களால் பேசப்படும் [[திராவிட மொழிக்குடும்பம்|திராவிட மொழிக்குடும்பமும்]] ஆவை. இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகள், [[ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்|ஆஸ்திரோ-ஆசிய]] மற்றும் [[திபெத்திய-பர்மிய மொழிகள்|திபெத்தோ-பர்ம]] மொழிக்குடும்பங்களை சார்ந்தவை. [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியல் அமைப்போ]], [[இந்தியச் சட்டம்|இந்திய சட்டங்களோ]], தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை.<ref name="no national">{{cite news | url=http://beta.thehindu.com/news/national/article94695.ece| title=[[இந்தி]], not a national language: Court| publisher=The Hindu| date=25 January 2010| accessdate=22 January 2011}}</ref> அதிகபட்ச பேச்சாளர்களைக்<ref>{{cite web |title=Languages by number of speakers according to 1991 census|publisher= Central Institute of Indian Languages|url=http://www.ciil.org/Main/Languages/map4.htm|accessdate=2 August 2007}}</ref> கொண்ட [[இந்தி]] மொழி, [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஆட்சி மொழியாகும்.<ref>Mallikarjun, B. (Nov., 2004), [http://www.languageinindia.com/nov2004/mallikarjunmalaysiapaper1.html Fifty Years of Language Planning for Modern Hindi–The Official Language of India], [http://www.languageinindia.com/index.html ''Language in India''], Volume 4, Number 11. ISSN 1930-2940.</ref> [[ஆங்கிலம்]], உப ஆட்சி மொழியாக நிலைபெற்று, பெருமளவில், வேலையிடங்களிலும், நிர்வாக இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.'<ref name=autogenerated1>{{cite web |title=Notification No. 2/8/60-O.L. (Ministry of Home Affairs), dated 27 April 1960|url=http://www.rajbhasha.gov.in/preseng.htm|accessdate=22 January 2011}}</ref> [[கல்வி|இந்தியாவில் கல்வி]] பெறுவதில், அதிலும் [[உயர்கல்வி]] (''Department of Higher Education'' (''India'')) பெறுவதில் ஆங்கிலம் பெரும்பங்கு வகிக்கிறது. அதோடு, ஒவ்வொரு [[மாநிலம்|மாநிலமும்]] தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. [[செம்மொழி]]த் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி [[தமிழ்]] மொழியாகும். [[தமிழ்]] மொழியைத் தொடர்ந்து [[சமசுகிருதம்]] (2005), [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] (2008), [[கன்னடம்]] (2008), [[மலையாளம்]] (2013), [[ஒடியா மொழி|ஒடியா]] (2014) ஆகிய மொழிகள் செம்மொழிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன. மரபாகச் செம்மொழிக்கு இருக்கும் வரையறையைப் பயன்படுத்தாமல் இந்தியா தானாகச் செம்மொழிக்கான வரையறையை வகுத்து உள்ளது.
===மனித மேம்பாட்டுச் சுட்டெண்===
2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட திட்ட அறிக்கையின்படி, வாழ்க்கைத் தரப்பட்டியலில் இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.<ref>[http://www.hdr.undp.org Human Development Report 2019]</ref><ref>[http://hdr.undp.org/sites/default/files/reports/2843/978-92-1-126436-4_web.pdf National Human Development Report Production Team]</ref>
== சுற்றுலா ==
சுற்றுலாத்துறை இந்தியாவின் மிகப் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும்<ref>[http://incredibleindia.org/Tourism_Stastics2008.pdf ]</ref> கொண்டுள்ளது. இந்தியாவில் சுற்றுலாத் துறையானது 2008 ஆம் ஆண்டில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. மேலும் இத்துறையானது 2018 இல் ஆண்டு வளர்ச்சி விகிதம் 9.4% சதவீதமாக அதிகரித்து 275.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.<ref>[http://www.ibef.org/industry/tourismhospitality.aspx சுற்றுலாவாண்மை &amp; விருந்தோம்பல் - IBEF]</ref>
 
சுற்றுலாத்துறை அமைச்சகமானது இந்தியாவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது. மேலும் "[http://www.incredibleindia.org/ இன்க்ரெடிபிள் இண்டியா]" பிரச்சாரத்தையும் தொடர்ந்து நடத்துகின்றது.
 
=== சுற்றுலா தொடருந்துகள் ===
[[இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்]] மற்றும் இந்தியன் இரயில்வே,<ref>http://www.indiarailtours.com/</ref> உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்
[[பேலஸ் ஆன் வீல்ஸ்]] <ref>http://www.indiarailtours.com/golden-triangle-train-tour.html</ref>, [[மகாராஜா எக்ஸ்பிரஸ்]], ராயல் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ், ''டெக்கான் ஒடிசி'', ராயல், ''ராசத்தான் ஆன் வீல்ஸ்'' மற்றும் ''கோல்டன் சாரியட்'' (தங்க இரதம்), ''டெக்கான் ஒடிசி'', ''புத்திஸ்ட் எக்ஸ்பிரஸ்'' போன்ற பெயர்களில் நவீன சொகுசு [[தொடருந்து]]கள் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பண்பாட்டு கலாசார இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வகையில் சிறப்பு சொகுசு தொடருந்துகள் தில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தாவிலிருந்து இயக்கப்படுகிறது.
 
இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடங்களை குறைந்த கட்டணத்தில் காணத் தக்கவாறு ''பாரத் தர்சன்'' என்ற பெயரில் சிறப்பு தொடருந்துகளை இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்தியா முழுவதும் இயக்குகிறது.<ref>[ http://www.irctctourism.com/cgi-bin/dev1.dll/irctc/booking/planner.do trainType=Bharat%20Darshan&trainCat=Bharat%20Darshan&screen=FromTrainType&pressedGo=&submitClicks=0&offset=0 Bharat Darshan]</ref>
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3088987" இருந்து மீள்விக்கப்பட்டது