இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 186:
[[படிமம்:Coat of arms Ceylon british colony.jpg|thumb|left|alt=Shield shape with an elephant center and four palm trees on each side|பிரித்தானிய இலங்கையின் இலச்சினை.]]
 
இரண்டாம் ராசசிங்கனின் ஆட்சியின் போது டச்சு நாடுகாண் பயணிகள் இலங்கை வந்தனர். 1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான்.<ref>{{cite book | title = The Dutch in Ceylon: an account of their early visits to the island, their conquests, and their rule over the maritime regions during a century and a half | url = http://books.google.com/books?id=h2mkUharg6AC | author = Anthonisz, Richard Gerald | publisher = Asian Educational Services | year = 2003 | isbn = 978-81-206-1845-9 | pages = 37–43 | accessdate = 15 July 2014}}</ref> அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர்.<ref>{{cite book | url = http://books.google.com/books?id=47wCTCJX9X4C | title = Being "Dutch" in the Indies: a history of creolisation and empire, 1500–1920 | author = Bosma, U. | publisher = [[மிச்சிகன் பல்கலைக்கழகம்]] | year = 2008 | isbn = 978-0-89680-261-2 | chapter=1 | accessdate=15 July 2014}}</ref> இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது.<ref name="kandyk">{{cite web | url = http://sundaytimes.lk/070304/KandyTimes/514_kt1.html | title = A kingdom is born, a kingdom is lost | work = The Sunday Times | accessdate = 15 July 2014}}</ref> 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான்.<ref name="kandyk" /> ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை.<ref name="kandyk" /> நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான "''"உனம்புவே பண்டார"''" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது.<ref>{{cite book | title = Language, Religion, and Ethnic Assertiveness: The Growth of Sinhalese Nationalism in Sri Lanka0 | author = Dharmadasa, K. N. O. | publisher = [[University of Michigan Press]] | year = 1992 | isbn = 978-0-472-10288-4 | pages = 8–12}}</ref> ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை.<ref>Codrington, chap.9</ref>
 
நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் ( இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது.<ref name="colvoyg">{{cite web | url = http://www.colonialvoyage.com/eng/asia/sri_lanka/trincomalee/history_8.html | title = The first English occupation and the definitive Dutch surrender | work = colonialvoyage.com}}</ref> இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான்.<ref name="scnsl">{{cite web | url = http://www.scenicsrilanka.com/history-of-sri-lanka-1948.html | title = History of Sri Lanka and significant World events from 1796 AD to 1948 | work = scenicsrilanka.com | accessdate = 15 July 2014}}</ref> சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான்.ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.<ref name="scnsl" /> இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்.<ref>Codrington, A Short History, Ch. 11</ref> கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது.<ref name="keppetipola">{{cite web | url = http://www.lankalibrary.com/geo/keppetipola2.htm | title = Keppetipola and the Uva Rebellion | work = lankalibrary.com | accessdate = 15 July 2014}}</ref>
 
[[படிமம்:Planter in ricksha in front of the Maria Watta tea factory near Gampola LCCN2004707311.tif|thumb|கம்பளைக்கு அருகிலுள்ள மரியாவத்த தேயிலைத் தொழிற்சாலை முன்றிலில் அதன் உரிமையாளர் ரிக்சாவில் காணப்படுகிறார்., சுமார்.1895]]
வரிசை 194:
[[படிமம்:Tea factory scene - in the withering loft LCCN2004707310.jpg|thumb|தேயிலைத்தொழிற்சாலையின் உட்புறத் தோற்றம், சுமார் 1895. இலங்கையில் தேயிலை உற்பத்தி 1867இல் பிரித்தானியரான சேம்சு டெயிலரினால் அறிமுகப்படுத்தப்பட்டது.]]
 
இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது.<ref name="corankel" /> இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது.<ref name="corankel" /> ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ''ராசகாரிய முறை'' மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Harvnb|Nubin|2002|p=115}}</ref> இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது.<ref name="matale1">{{cite web | url = http://www.lankalibrary.com/geo/gongalegoda.htm | title = Gongale Goda Banda (1809–1849) : The leader of the 1848 rebellion | work = Wimalaratne, K. D. G. | accessdate = 15 July 2014}}</ref> 1869இல் ''எமிலியா வசுட்ராட்ரிக்சு'' எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது.<ref>{{cite book|author=Lennox A. Mills|title=Ceylon Under British Rule, 1795–1932|url=http://books.google.com/books?id=YyHG9ZKl3bwC&pg=PA246|year=1964|publisher=Psychology Press|page=246|accessdate=15 July 2014}}</ref> பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது.
 
19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது.<ref>{{Harvnb|Nubin|2002|pp=116–117}}</ref> இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது.<ref>{{cite book | url = http://books.google.com/books?id=Q11ID2xfqD8C | author = Bond, George D. | title = The Buddhist revival in Sri Lanka: Religious tradition, reinterpretation and response | publisher = Motilal Banarsidass Publications | year = 1992 | pages = 11–22 | isbn = 978-81-208-1047-1 | accessdate = 15 July 2014}}</ref><ref name="tamlwk">{{cite web | url = http://www.tamilweek.com/Cutting_edge_hindu_revivalism_0625.html | title = Cutting edge of Hindu revivalism in Jaffna | date = 25 June 2006 | work = Balachandran, P. K.}}</ref> 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை.<ref>{{Harvnb|De Silva|1981|p=387}}</ref> 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின.<ref>{{Harvnb|De Silva|1981|p=386}}</ref> இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது.<ref>{{Harvnb|De Silva|1981|pp=389–395}}</ref> 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது. (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே.). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர்.<ref name="tamllib">{{cite web | url = http://tamilelibrary.org/teli/slhist.html | title = Chronology of events related to Tamils in Sri Lanka (1500–1948) | publisher = [[National University of Malaysia]] | work = Hellmann-Rajanayagam, Dagmar | accessdate = 15 July 2014}}</ref><ref>{{Harvnb|De Silva|1981|p=423}}</ref> 1937ல், தமிழ்த் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 
=== விடுதலைக்குப் பின் ===
வரிசை 245:
|url=http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Schedle_8_Amd.html | title = The Constitution of Sri Lanka – Eighth Schedule | publisher = Priu.gov.lk | accessdate = 15 July 2014 }}</ref> இருபத்தைந்து மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Schedle_1_Amd.html | title = The Constitution of Sri Lanka – First Schedule | publisher = Priu.gov.lk | accessdate = 15 July 2014 }}</ref>
 
'''==== மாகாணங்கள்''' ====
19 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் மாகாணங்கள் ({{lang-si|පළාත}}, {{lang-en|Province}}) காணப்பட்டாலும் அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கவில்லை. எனினும், பல பத்தாண்டு கால அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளைத் தொடர்ந்து, 1987ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புக்கான 13ம் திருத்தம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.<ref name="official">{{cite web | url = http://www.priu.gov.lk/ProvCouncils/ProvicialCouncils.html | title = Provincial Councils | work = The Official Website of the Government of Sri Lanka | date = 3 September 2010 }}</ref> ஒவ்வொரு மாகாண சபையும் எந்த அமைச்சினாலும் கட்டுப்படுத்தப்படாத சுயாதீன அமைப்பாகும். இதன் சில செயற்பாடுகள் மைய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் மற்றும் அதிகார சபைகள் என்பவற்றால் கையாளப்படுகின்றன.<ref name="official" /> எனினும், காணி மற்றும் காவல் துறைக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை.<ref name="landpolc">{{cite web | url = http://www.indianexpress.com/news/lanka-heads-for-collision-course-with-india/802524/ | title = Lanka heads for collision course with India: Report | publisher = Indian Express | date = 12 June 2011 }}</ref><ref name="landpolc2">{{cite web | url = http://www.peace-srilanka.org/index.php?option=com_content&view=article&id=296:accepting-reality-and-building-trust&catid=1:latest&Itemid=121 | title = Accepting reality and building trust | work = Jehan Perera | publisher = peace-srilanka.org | date = 14 September 2010 }}</ref> 1989 க்கும் 2006க்கும் இடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வட-கிழக்கு மாகாணமாக ஆக்கப்பட்டது.<ref name="lnpx">{{cite web | url = http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html | title = North-East merger illegal: SC | publisher = LankaNewspapers.com | date = 17 October 2006 }}</ref> 1987க்கு முன், மாகாணங்களுக்கு உரிய நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட அடிப்படையிலான நிர்வாகச் சேவையினால் கையாளப்பட்டன. இச்சேவை குடியேற்றக் காலத்திலிருந்து காணப்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு மாகாணமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.
 
வரிசை 313:
|}
 
'''==== மாவட்டங்களும் உள்ளூராட்சிச் சபைகளும்''' ====
 
இலங்கை 25 மாவட்டங்களாகப் ({{lang-si|දිස්ත්‍රි‌ක්‌ක ''ஒருமை'' දිස්ත්‍රික්කය}} {{lang-en|District}}) பிரிக்கப்பட்டுள்ளது.<ref name="distrsl">{{cite web | url = http://www.ds.gov.lk/dis_sec/dis_eng/District_Secretariats.php | title = District Secretariats Portal | publisher = District an Divisional Secretariats }}{{dead link|date=September 2013}}</ref> ஒவ்வொரு மாவட்டமும் மாவட்டச் செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது, மாவட்டங்கள் 256 பிரதேச செயலகங்களாகவும், மேலும் 14.008 கிராம சேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="tstasgov">{{cite web | url = http://web.archive.org/web/20110519151751/http://www.statistics.gov.lk/GNcode/introduction.pdf| page = 3 | title = List of Codes for the Administrative Divisions of Sri Lanka 2001 | publisher = Department of Census and Statistics }}</ref> மாவட்டங்கள் சிங்களத்தில் ''திசா'' என அழைக்கப்படும். ''மாவட்டச் செயலாளர்'' என அழைக்கப்படும் அரசாங்க அதிபரால் மாவட்டம் நிர்வகிக்கப்படும்.
 
வரி 329 ⟶ 328:
இலங்கையின் விடுதலை முதற்கொண்டு அதனை ஆட்சி புரியும் இரு கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி, மரபு ரீதியாக மேற்குலகுடன் சாதகமான தொடர்புகளைப் பேணிவந்துள்ளது. அதேவேளை, இடது சார்புடைய மற்றைய கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி கீழைத்தேய நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்தி வந்துள்ளது.<ref name="relatns" /> இலங்கையின் நிதியமைச்சர் ஜே. ஆர். ஜெயவர்த்தன மற்றும் ஆசுதிரேலிய வெளியுறவு அமைச்சர் பேர்சி சுபென்சர் ஆகியோர் இணைந்து 1950ல் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் போது [[கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டத்தை]] முன்மொழிந்தனர்.<ref>{{Cite news|title=Colombo Plan at 57 |url=http://www.colombo-plan.org/viewPressContent.php?id=93&page=4 |work=[[கொழும்புத் திட்டம்]] |author=Jayasekera, Upali S. |deadurl=yes |archiveurl=https://web.archive.org/20120113150629/http://www.colombo-plan.org/viewPressContent.php?id=93&page=4 |archivedate=13 January 2012 }}</ref> 1951ல் நடைபெற்ற சான் பிரான்சிசுகோ சமாதான மாநாட்டில், ஏனைய நாடுகள் தயக்கம் காட்டிய போதிலும் இலங்கை சுதந்திர சப்பானுக்காக குரல் கொடுத்தது. மேலும், இரண்டாம் உலகப்போரின் அழிவுகளுக்காக சப்பான் இழப்பீடு செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அது வாதிட்டது. இழப்பீடு செலுத்தல் சப்பானின் பொருளாதாரத்தைப் பாதிக்குமென அது கருதியது.<ref>{{Cite news | title = Sri Lanka excels at the San Francisco Peace Conference | url= http://pdfs.island.lk/2009/09/07/p12.pdf| work = The Island | date = 7 September 2009}}</ref> 1949ல் மக்கள் சீனக் குடியரசின் உருவாக்கத்துடன் இலங்கை-சீன உறவுகள் ஆரம்பித்தன. 1952ல் இருநாடுகளும் முக்கியத்துவமிக்க இறப்பர்-அரிசி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.<ref>{{Cite news | title = Lanka-China bilateral ties at its zenith | url = http://www.sundayobserver.lk/2010/10/03/fea02.asp | work = The Sunday Observer | date = 3 October 2010}}</ref> 1955ல் நடைபெற்ற ஆசிய-ஆபிரிக்க மாநாட்டில் இலங்கை முக்கிய பங்கு வகித்தது. இது அணிசேரா இயக்கத்தின் உருவாக்கத்துக்கான முக்கிய படியாக விளங்கியது.<ref>{{Cite news | title = Bandung Conference of 1955 and the resurgence of Asia and Africa | url = http://archives.dailynews.lk/2005/04/21/fea01.htm | work = The Daily News | date = 21 April 2005}}</ref>
 
1956 பண்டாரநாயக்க அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்ட மேற்குலகு சார் கொள்கைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தியது. 1959ல் பிடல் காசுரோ தலைமையிலான கியூப அரசை அங்கீகரித்தது. அதன் பின், கியூபாவின் புரட்சித் தலைவரான ஏர்னசுடோ சே குவேரா இலங்கைக்கு வருகை தந்தார்.<ref>{{Cite news | title = 'Lanka-Cuba relations should be strengthened' | url = http://archives.dailynews.lk/2004/01/14/new24.html | work = The Daily News | date = 14 January 2004}}</ref> 1964ன் ''சிறீமா-சாசுதிரி ஒப்பந்தம்''<ref>{{Cite news | title = 29 October 1964 | url = http://pact.lk/29-october-1964/ | work = Pact.lk | accessdate = 15 July 2014}}</ref> மற்றும் 1974ன் ''சிறீமா –காந்தி– காந்தி ஒப்பந்தம்''<ref>{{Cite news | title = Statelessness abolished? | url = http://www.cope.nu/show.asp?NewsID=170&DocType=News | work = cope.nu | accessdate = 15 July 2014}}</ref> என்பன இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்களிடையே செய்துகொள்ளப்பட்டன. இதன்மூலம், இந்திய வம்சாவழித் தோட்ட்டத்தொழிலாளர்களின் இலங்கைக் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. 1974ல் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள சிறிய தீவான கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.<ref>{{Cite news|title=India-Sri Lanka: 1921 Conference On Fisheries And Ceding Of Kachchatheevu – Analysis |url=http://www.albanytribune.com/22082011-india-sri-lanka-1921-conference-on-fisheries-and-ceding-of-kachchatheevu-%E2%80%93-analysis/ |work=Albany Tribune |date=22 August 2011 |author=Suryanarayan, V. |deadurl=yes |archiveurl=https://web.archive.org/20120402073824/http://www.albanytribune.com/22082011-india-sri-lanka-1921-conference-on-fisheries-and-ceding-of-kachchatheevu-%e2%80%93-analysis/ |archivedate=2 April 2012 }}</ref> இக்காலப்பகுதியில், இலங்கை அணிசேராக் கொள்கையில் தீவிரமாகக் காணப்பட்டதுடன் 1976ல் ஐந்தாவது அணிசேரா மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.<ref>{{Cite news | title = NAM Golden Jubilee this year | url = http://www.sundayobserver.lk/2011/07/10/fea02.asp | work = The Sunday Observer | date = 10 July 2011}}</ref> ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சியின் போது இலங்கை இந்திய உறவுகளில் முறுகல் நிலை ஏற்பட்டது..<ref name="atimes" /><ref name="indnrel">{{Cite journal | doi = 10.1080/09700160008455216| title = Indo‐Sri Lankan security perceptions: Divergences and convergences| journal = Strategic Analysis| volume = 24| issue = 2| pages = 343| year = 2000| last1 = Murthy | first1 = P. }}</ref> இதன் காரணமாக, இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட்டது. மேலும் 1987ல், இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது.<ref>{{cite news | url = http://query.nytimes.com/gst/fullpage.html?sec=health&res=9B0DE0D8173FF936A35755C0A961948260&n=Top%2fNews%2fWorld%2fCountries%20and%20Territories%2fIndia | title = India airlifts aid to tamil rebels | publisher = New York Times | date = 5 June 1987 | author = Weisman, Steven R. }}</ref> தற்போது இலங்கை, சீனா,<ref>{{cite news | url = https://fas.org/sgp/crs/row/RL31707.pdf| page = 6 | title = Sri Lanka: Background and U.S. Relations | publisher = [[Federation of American Scientists]] | accessdate = 15 July 2014}}</ref> [[ரசியா]]<ref>{{cite news | url = http://www.asiantribune.com/news/2010/02/09/russia-and-sri-lanka-strengthen-bilateral-relations | title = Russia and Sri Lanka to strengthen bilateral relations | publisher = [[ஏசியன் டிரிபியூன்]] | accessdate = 15 July 2014}}</ref> மற்றும் பாகிசுதான் ஆகிய நாடுகளுடன் பரந்தளவிலான உறவுகளைப் பேணி வருகிறது.<ref>{{cite news | url = http://www.asiantribune.com/news/2011/02/04/world-leaders-send-warm-greeting-sri-lanka-independence-day | title = World leaders send warm greeting to Sri Lanka on Independence Day | publisher = [[ஏசியன் டிரிபியூன்]] | accessdate = 15 July 2014}}</ref>
 
=== இராணுவம் ===
வரி 346 ⟶ 345:
[[படிமம்:Sri Paada1.JPG|thumb|left|மசுகெலியாவிலிருந்து சிவனொளிபாதத்தின் காட்சி.]]
 
இலங்கைத்தீவு தட்டையான கரையோரங்களையும், தென் மத்திய பகுதியில் மலைகளையும் கொண்டுள்ளது. இலங்கையின் உயரமான மலை பீதுருதாலகால ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து {{convert|2524|m|ft|0}} உயரமானதாகும். கடற் காற்றுக் காரணமாக நாட்டின் காலநிலை வெப்பமான அயனக் காலநிலையாக உள்ளது. நாட்டின் மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை மத்திய மலைநாட்டில் {{convert|17|C|F|1}} ஆக காணப்படுகின்றது. இங்கு குளிர்காலத்தில் சிலநாட்களுக்கு பனிப்பொழிவு காணப்படுவதுண்டு. ஏனைய தாழ்நிலப் பகுதிகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை {{convert|33|C|F|1|abbr=on}} ஆக உள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை {{convert|28|C|F|1|abbr=on}} இலிருந்து சுமார் {{convert|31|C|F|1|abbr=on}} வரை உள்ளது. பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் {{convert|14|C-change|F-change|1|abbr=on}} இலிருந்து {{convert|18|C-change|F-change|1|abbr=on}} வரை வேறுபடுகிறது.<ref>{{cite web| url = http://www.mysrilanka.com/travel/theland/climate.htm | title = Climate & Seasons: Sri Lanka | publisher = mysrilanka.com | accessdate = 15 July 2014}}</ref>
 
[[படிமம்:Tamil Nadu from Space (Courtesy- NASA).jpg|thumb|left|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையதிலிருந்து]] இலங்கையின் காட்சி]]
வரி 489 ⟶ 488:
இலங்கை படைபலம் சம்பந்தமான சில புள்ளிவிபரங்கள்:
 
* [[இலங்கை இராணுவம்]] 90,000
* [[இலங்கை கடற்படை]] 20,000
* [[இலங்கை விமானப்படை]] 10,000
 
== இதர தகவல்கள் ==
வரி 535 ⟶ 534:
:ஒக்டோபர் (அக்டோபர்) - வப் பௌர்ணமி தினம் *†#
:நவம்பர் - [[தீபாவளி]] தினம் *†
:நவம்பர் - Id-Ul-FitrFit- ஈகைப் பெருநாள் தினம் ) *†
:நவம்பர் - இல் பௌர்ணமி தினம் *†#
:டிசம்பர் - உன்துவப் பௌர்ணமி தினம் *†#
:டிசம்பர் - [[நத்தார்]] தினம் *†#
 
: * பொது விடுமுறை † வங்கி விடுமுறை # வர்த்தக விடுமுறை
 
=== சுவையான தகவல்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது