பாவலரேறு பெருஞ்சித்திரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தாட்சாயனிஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''தமிழ்த்தேசியத்தந்தைபாவலரேறு ''' என்று அறியப்படும் '''பெருஞ்சித்திரனார்''' ([[மார்ச் 10]], [[1933]][[சூன் 11]], [[1995]]) [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளார்]], மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் '''பிரபாகரன்''' தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். '''தமிழரசன்''' போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. '''தமிழ்த் தேசியத் தந்தையாக''' இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்
{{Infobox person
| honorific_prefix =
| name = Perunchitthiranaar
| honorific_suffix =
| image = Perunchithiranar-poet-TamilNadu (cropped).jpg
| image_size =
| alt =
| caption = Photograph of Perunchitthiranaar.
|birth_name = Rajamanickam
|birth_date = {{Birth date|1933|03|10}}
|birth_place = Samuthiram, [[Salem district]], [[British India]]
|death_date = {{Death date and age|1995|06|11|1933|03|10}}
|death_place = [[Tamil Nadu]], [[India]]
|other_names = Durai Manickam <br> Pavalareru Perunchithiranar
| occupation = Writer, Poet, Thani Thamizh activist.
}}
 
== பெருஞ்சித்திரனார் கொள்கைகள் ==
பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 1950களில் முதன்முதலில் வெளிவந்த இவரது தென்மொழி இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார். தமிழர்கள் குல மத வேறுபாடுகளிலிருந்து வெளியேறித் தம்மைத்தமிழர்கள் என உணர்ந்து தமிழ்நாட்டினை தனிநாடாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது இவரது கருதுகோள் ஆகும். தமிழக விடுதலை போலவே தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்தும் பரப்புரை செய்தும் பெருஞ்சித்திரனார் செயற்பட்டார்.
 
== பெருஞ்சித்திரனாரும் தனித்தமிழ்க்கொள்கையும் ==
பெருஞ்சித்திரனார் தனித்தமிழ் இயக்கத்தின் கொடிவழியில் வந்த அறிஞர் ஆவார். அவரது இதழ்கள், உரைவீச்சு ஆகியவை முழுக்கவும் தனித்தமிழிலேயே அமைந்திருந்தன. மறைமலையடிகள் தொடங்கிப் பாவாணர் ஈறாக தனித்தமிழ் அறிஞர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்ட பெருஞ்சித்திரனார் அரசியல் சார்ந்து அவர்களிடமிருந்து வேறுபட்டு விளங்கினார். நேரடியாக மக்களிடம் தனித்தமிழ்க்கொள்கை வேர்கொள்ளவேண்டி அவர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டார். தமிழ்மரபில் சிவனிய (சைவ), மாலிய(வைணவ) சமய நெறிப்பட்ட தனித்தமிழ் அறிஞர்களின் மரபுகளிலிருந்து வேறுபட்டு மதம்சாரா (secular) தனித்தமிழ் அறிஞராக இருந்தார் என்பது இவரது தனித்தன்மையாகும். இவரது தனித்தமிழ்க்கொள்கை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களையே பெரும்பாலும் அடியொற்றி அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணரின் மாணவரான பெருஞ்சித்திரனார் அவரது பல்வேறு தூய தமிழ்ப்பணிகளுக்குத் துணையாய் நின்றார்.
 
== பெருஞ்சித்திரனாரும் சாதியும் ==
பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.
 
பள்ளென்போம்; பறையென்போம்;
வரி 41 ⟶ 57:
தென்மொழி, இயல்-1, இசை-13 (1960)
 
சாதியை ஒழிப்பது குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த பெருஞ்சித்திரனார் அந்தக் கருத்தியலைக் கொண்டிருந்தவர்களோடு இணக்கமான உறவையும் கொண்டிருந்தார்.
 
== பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்நாட்டுக்கொள்கை ==
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தொடக்ககாலத்திலிருந்து தனித்தமிழ்நாட்டுக்கொள்கையைக் கொண்டிருந்தார். அதற்கான பரப்புரைகளை தன் எழுத்துகள் வழியாகவும் பேச்சுரை வாயிலாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் நிகழ்த்திவந்தார். தென்மொழி இதழின் முகப்பில் நம் மூச்சு, செயல், நோக்கம் எனும் தலைப்பில்
 
''இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கு்ம்இந்துமதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும், அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும், மேலாளுமை யிலினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே இந்து மதத்தினின்றும், மதப்பூசல் களினின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாக வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.'' எனும் தன் கொள்கை அறிவிக்கையே இவரது கண்ணோட்டத்தை அறியப் பயன்படுகிறது.
 
== பெருஞ்சித்திரனாரும் தமிழரசனும் ==
பெருஞ்சித்திரனார் தன்னுடைய கொள்கையுடைய எவருடனும் இணைந்து அரசியல் பணியாற்றினார். தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சி (மா இலெ) மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை ஆகிய அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட்ட தோழர் தமிழரசன் பெருஞ்சித்திரனாருடன் நெருங்கிய அரசியல் உறவு கொண்டிருந்தார். பெருஞ்சித்திரனார் வெளிப்படையாகவும் தமிழரசன் தலைமறைவாகவும் இருந்த காலத்திலும் அரசு ஒடுக்குமுறை மிகுந்திருந்த காலத்திலும் பெருஞ்சித்திரனார் தன் தனித்தமிழ்நாட்டுக்கொள்கையில் பின்வாங்காமல் தொடர்ந்து ஈடுபட்டார். பெருஞ்சித்திரனாரின் ஆதரவாளர்கள் தமிழரசனுக்கு நெருக்கமாகிச் செயல்பட பெருஞ்சித்திரனார் உதவினார். தமிழரசன் கூட்டிய கூட்டங்களிலும் கூட்டமைப்புகளிலும் பெருஞ்சித்திரனார் பங்கேற்றார்.
 
== பெருஞ்சித்திரனாரும் ஈழமும் ==
வரி 94 ⟶ 110:
பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.
 
தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு [[1972]]இல் [[திருச்சி]]யில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில்இக்காலகட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
 
தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.
வரி 119 ⟶ 135:
பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.
 
1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் [[மலேசியா|மலேசிய]] நாட்டிற்குவிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.
 
1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.
 
இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.
 
இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்து சிறந்த பல [[கட்டுரை]]களையும் நூற்களையும் ஆக்கியவர்.
 
== பெருஞ்சித்திரனாரின் அரசியல் ==
வரி 132 ⟶ 146:
 
== பெருஞ்சித்திரனாரின் குடும்பம் ==
பெருஞ்சித்திரனார் அவர்களின் குடும்பம் தமிழின வரலாற்றில் தவிர்க்க முடியாத குடும்பமாக திகழ்கிறது. முதுபெரும்புலவர்.இறைக்குருவனார், தமிழ்மொழியின் தொன்மையை ஆய்ந்து உலகுக்குணர்த்திய சொல்லாய்வறிஞர்.ப.[[ப. அருளி|அருளி]]<nowiki/>யார், தமிழ்வழிப்பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய திருவாட்டி.இறை.பொற்கொடி, பகுத்தறிவுக் குமுகாயம் ஆக்கம் செய்யும் பெண்ணியப்போராளி தழல்.தேன்மொழி, பேராசிரியர்.மா.பூங்குன்றன், முனைவர்.கி.குணத்தொகையன், அறிஞர்.ஆறிறைவன், தமிழ்த்தேசியப்போராளி மா.பொழிலன், வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி, வரலாற்றறிஞர் [[தெள்ளியன்]] உள்ளிட்ட குடும்பமே இனத்தையும் மொழியையும் வழிநடத்துகின்றது. [[தென்மொழி (இதழ்)|தென்மொழி]], [[தழல் (இதழ்)|தழல்]], தமிழ்நிலம், மாணவர்களம் என்ற இதழ்களும் பல்வேறு இயக்கங்கள், கல்வி அறக்கட்டளைகளும் இக்குடும்பத்தால் நடைபோடுகிறதுநடத்தப்படுகின்றன.
 
== நூல்கள் ==
வரி 175 ⟶ 189:
#வாழ்வியல் முப்பது
#வேண்டும் விடுதலை
 
== கவிதைக்கீற்றுகள் ==
 
பெருஞ்சித்திரனாரின் சில கவிதைக்கீற்றுகள் கீழே தரப்படுகின்றன.
 
<poem>
உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?
 
உந்தன் குடும்பம் உந்தன் வாழ்க்கை
உந்தன் நலங்கள் உந்தன் வளங்கள்
என்று மட்டும் நீயும் ஒதுங்கி இருந்துவிடாதே!
நீ இறந்தபின்பும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே!
 
சொந்தம் பேசி சொந்தம் வாழ
சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க
என்று மட்டும் வாழ்ந்துபோக எண்ணிவிடாதே!
நீ இருந்து சென்ற கதையை மறக்க பண்ணிவிடாதே!
 
அன்னை நிலமும் அன்னை மொழியும்
அனைத்து மக்கள் வாழ நினைக்கும்
உன்னை உலகம் மறப்பதில்லை ஒதுங்கிவிடாதே!
நீ உழைக்கும் உழைப்பில்
உலகம் செழிக்கும் பதுங்கிவிடாதே!
'''- பாவலரேறு பெருஞ்சித்திரனார்'''
</poem>
 
== இவற்றையும் காணவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பாவலரேறு_பெருஞ்சித்திரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது