கண்ணப்ப நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முத்தரையர் குல இறைவன்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2409:4072:611F:1C84:0:0:24DC:50B0 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3095720 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 15:
{{cleanup}}
 
[[கண்ணப்ப நாயனார் ]] என்பவர் [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவர் ஆவார்<ref>{{cite book|editor1-last=63 நாயன்மார்கள்|author2=|title=கண்ணப்ப நாயனார்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=19 ஜனவரி 2011|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1364}}</ref><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref>. திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், முத்தரையர் வேடுவ குலத்தில் பிறந்தவர்,
வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் ''நில்லு கண்ணப்பா'' என மும்முறை கூறி தடுத்தருளினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கண்ணப்ப_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது