"பிரித்தானிய வெப்ப அலகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பிரித்தானிய வெப்ப அலகு''' ('''பி.டி.யூ''' அல்லது BTU or Btu = British thermal unit) என்பது ஆற்றலை அளக்கும் ஓர் அலகு. இவ் "வெப்ப அலகு" என்று குறிப்பிட்டாலும், இது ஓர் ஆற்றல் அலகு. இவ் ஆற்றல் அலகானது ஒரு [[பவுண்டு]] எடையுள்ள நீரை, சீரழுத்த நிலையில், 60°[[பரனைட்டு|F]] வெப்பநிலையில் இருந்து 61°[[பரனைட்டு|F]] வரை, உயர்த்த தேவையான ஆற்றல் ஆகும். இவ்வலகு பெரும்பாலும் [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டு நாடுகள்]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில், நீரைச் சூடேற்றும் கருவிகள், காற்றுபதனக் கருவிகள், அறையைச் சூடேற்று/குளிர்விக்கும் கருவிகள் போன்றவற்றைச் விற்பனை செய்யும் தொழிலகங்களில் பரவலாகப் பயன்படுத்தும் ஓர் ஆற்றல் அலகு. அறிவியலில் இவ் அலகைப் பயன்படுத்துவதில்லை. அறிவியலில் ஆற்றலை அளக்க [[SI]] அலகான [[ஜூல்]] பயன் படுகின்றது. ஒரு பிரித்தானிய வெப்ப அலகு (பி.டி.யூ) என்பது ஏறத்தாழ 1055 ஜூல் ஆகும். வேறு ஓர் வெப்ப அலகாகிய [[காலரி]] கணக்கில் ஒரு பி.டி.யூ என்பது 253 காலரிக்கு ஈடு.
 
பிரித்தானிய வெப்ப அலகானது, [[திறன்]] (ஆற்றுதிறன்) அளவீடுகளிலும் பயன்படுகின்றது. ஒரு மணி நேரத்தில் ஓராயிரம் பி.டி.யூ செலவானால் அது 293 [[வாட்]]டுக்கு ஈடாகும். (1000 BTU/h = 293 W). இவ்வகை திறன் அலகுகள் (பி.டி.யூ/மணி) அடுப்பு, வீட்டை சூடேற்றும் உலைகள், வீட்டுத்தோட்டத்தில் உணவை வாட்டும் உலைத் தளங்கள் (பார்பிக்யூ, barbecue), காற்றுப்பதனக் கருவிகள் முதலானவற்றில் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஒரு மணி நேரத்தில் செலவாகும் பி.டி.யூ என்னும் திறன் அலகையும் பேச்சு வழக்கில் துல்லியம் இல்லாமல், குழப்பம் தருமாறு பி.டி.யூ (BTU) என்றே அழைக்கும் வழக்கும் உள்ளது. ஆனால் திறன் என்பது பி.டி.யூ/மணி (BTU/h ) ஆகும்.
21,066

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/310314" இருந்து மீள்விக்கப்பட்டது