"பொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
இப்பேரணி [[கிழக்கிலங்கை]]யின் தெற்கு முனையில் உள்ள [[பொத்துவில்]] நகரில் 2021 பெப்ரவரி 3 ஆம் நாளில் தொடங்கி<ref>[https://www.tamilwin.com/community/01/267698 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்குக் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தரப்புகள் ஆதரவு], தமிழ்வின் செய்திகள்</ref> [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] வடமுனையில் அமைந்துள்ள [[பொலிகண்டி]]யில் பெப்ரவரி 7 இல் நிறைவடைந்தது. வடகிழக்குத் தமிழ்-பேசும் குடிசார் சமூகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், மற்றும் முசுலிம் சமூகங்கள் தமது ஆதரவைத் தெரிவித்து பேரணியில் இணைந்து கொண்டன. தமிழ், முசுலிம் அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, ஈழப்போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களுக்குப் பதிலளிக்காமை, [[கோவிட்-19 பெருந்தொற்று|கோவிட்-19 பெருந்தொற்றினால்]] உயிரிழக்கும் இசுலாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல், [[மலையகத் தமிழர்|மலையக மக்களின்]] ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலான அரச டக்குமுறைகள்அடக்குமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களுக்கு நீதி கோரியும், தீர்வு கேட்டும் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.
 
==முதலாம் நாள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3103267" இருந்து மீள்விக்கப்பட்டது