"தேவேந்திரகுல வேளாளர் (பொதுப் பெயர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
'''தேவேந்திரகுல வேளாளர்''', பட்டியல் சமூகத்தின் [[பள்ளர்]], [[தேவேந்திர குலத்தான்]], [[குடும்பன்]], [[காலாடி]], [[பண்ணாடி]], [[கடையன்]], [[வாதிரியான்]] ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து '''தேவேந்திரகுல வேளாளர்''' எனப்பொதுப் பெயரில் அழைக்கப்படுவர் என [[தமிழ்நாடு]] முதலமைச்சர் [[எடப்பாடி கே. பழனிச்சாமி]] 4 டிசம்பர் 2020 அன்று அறிவித்தார். மேலும் இதற்கான ஆணைகளை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்கும் என்றும், இது குறித்து தமிழ்நாடு அரசின் பரிந்துரையின் மீது மத்திய அரசிடம் இருந்து ஆணை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/devendra-kula-velalar-comman-name-suggested-by-state-govt-for-7-sub-castes-in-scheduled-castes-cm-palaniswami-announced-235660/ தேவேந்திரகுல வேளாளர் பொதுப் பெயர்: முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு]</ref><ref>https://www.dinamani.com/tamilnadu/2020/dec/04/cm-palaniswami-speech-about-devendra-kula-velalar-3516967.html</ref> பெயர் மாற்றம் இருப்பினும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூத்தவர்களுக்கான]] கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் [[இட ஒதுக்கீடு]] உரிமைகள் தொடர்ந்து பெறுவர்.<ref>[https://www.thenewsminute.com/article/seven-sub-sects-tn-be-included-under-devendrakula-vellalar-cm-palaniswami-139061 Seven sub-sects in TN to be included under Devendrakula Vellalar: CM Palaniswami]</ref>
 
== சட்டத் திருத்தம்==
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை, தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா [[மக்களவை (இந்தியா)|மக்களவையில்]] 13 பிப்ரவரி 2021 அன்று தேவேந்திரகுல வேளாளர் பெயர் தொடர்பான வரைவுச் சட்டத்தை பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/seven-sub-sects-devendra-kula-vellalar-sc-amendment-bill-passed-in-loksabha-247354/ தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைப்பு: மக்களவையில் சட்டமசோதா நிறைவேற்றம்]</ref><ref>[https://taxguru.in/corporate-law/constitution-scheduled-castes-order-amendment-act-2021.html THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER
(AMENDMENT) BILL, 2021]</ref>
[[மாநிலங்ளவை]]யிலும் இத்திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றபின் சட்டம் அமல்படுத்தப்படும்.
 
==வரலாறு==
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள [[தேவேந்திர குலத்தான்]], [[கடையன்]], [[காலாடி]], [[குடும்பன்]], [[பள்ளர்]], [[பண்ணாடி]], [[வாதிரியான்]] ஆகிய ஏழு சாதிகளை உள்ளடக்கி என்ற '''தேவேந்திரகுல வேளாளவேளாளர்'''ர் எனும் ஒரே பொதுப் பெயரில் பெயரிடக் கோரி [[புதிய தமிழகம் கட்சி]]யின் தலைவர் [[க. கிருஷ்ணசாமி]] போன்ற பல்வேறு பட்டியல் சமூக அமைப்புகளின் தலைவர்களின் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றது.<ref>[https://www.thehindu.com/news/national/tamil-nadu/announce-seven-scheduled-castes-as-devendrakula-vellalars-immediately-says-alagiri/article32011799.ece Announce seven Scheduled Castes as Devendrakula Vellalars immediately]</ref> இக்கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் மூத்த ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைவராகக் கொண்டு 04 மார்ச் 2019 அன்று குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு அரசால் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது. இக்குழு இந்த நேர்வுக்கு தொடர்புடைய பல்வேறு தரப்பினருடைய கோரிக்கைகள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளை கருத்தில் கொண்டு மாநிலப் பட்டியலினத்தில் உள்ள வாதிரியான் உட்பிரிவினையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று மேற்குறிப்பிட்ட 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசுக்கு பரிந்துரைக்கும் என 4 டிசம்பர் 2020 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி. கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3105868" இருந்து மீள்விக்கப்பட்டது