இரண்டாம் இராசாதிராச சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
==சிங்களப் போர் ==
 
சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரம பாகு ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரம பாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில் படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இதனை ஒற்றரிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான். சிங்களனின் தயாதியான சீவல்லபன் என்பவன் சோழனின் உதவியை கேட்டு சோழ தேசம் வந்தான், அவனுக்கு உதவும் வகையில் தனது படையை பராக்கிரம பாகுவினை எதிர்க்க அனுப்பினான். மாதோட்டம், புலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களிலும் சோழனுக்கும் சிங்களனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் குறிப்பிடுகின்றது. அது மட்டும் இல்லாமல், இப்போரில் ஆயிரம் யானைகளை வென்று, பல்லாயிரம் மதிப்புள்ளவைகளை வென்று சோழனுக்கு அண்ணன் பல்லவராயன் காணிக்கை அளித்ததாக திருவாலங்காடுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_இராசாதிராச_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது